தேய்பிறை அஷ்டமிக்கு பைரவருக்கு ஏன் இத்தனை சிறப்பு? இந்த காரணத்தை தெரிந்து கொண்டு, பின்வரும் பரிகாரத்தை செய்தால் தீராத பண கஷ்டங்கள் உடனடியாக தீரும்.

bairavar
- Advertisement -

தேய்பிறை அஷ்டமி தினம் எப்போது வரும் என்பது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். பௌர்ணமி தினத்தை அடுத்து வரக்கூடிய அஷ்டமி திதியை தான் தேய்பிறை அஷ்டமி என்று சொல்லுவார்கள். இந்த அஷ்டமி திதியில் பைரவர் வழிபாடு நன்மையை கொடுக்கும். குறிப்பாக சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்பதையும் நம்மில் பலபேர் அறிந்திருப்போம். ஆனால் குறிப்பாக, அந்த அஷ்டமி திதியில் எதற்காக பைரவரை வணங்க வேண்டும் என்ற காரணத்தை தெரிந்து கொண்டு, பரிகாரத்தை செய்தால் அதற்கான இரட்டிப்பு பலனை நாம் அடையலாம் என்பதற்காகவே இந்த பதிவு.

அதாவது, அஷ்டமி திதி அன்று தான், அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபாடு செய்து, அருளாசியை பெறுகிறார்கள் என்று சொல்கிறது சாஸ்திரம். அஷ்டலட்சுமிகளுக்கும் அருள்புரியும் பைரவரை, குறிப்பிட்ட அந்த அஷ்டமி திதியில் நாம் வழிபடும் போது, நமக்கான பலனும் கைமேல் கிடைக்கும் என்பதில் சந்தேகமே கிடையாது.

- Advertisement -

தேய்பிறையில் வரும் அஷ்டமி திதிகளில் பைரவரை நாம் தொடர்ந்து, 8 அஷ்டமி திதியில் வழிபாடு செய்து வர வேண்டும். அஷ்டமி திதிகளில் பைரவருக்கு உகந்த செவ்வரளி பூ, வில்வ இலை அல்லது தாமரைப் பூக்களை உதரியாக அவரது பாதத்திலோ அல்லது மாலையாகவோ சமர்ப்பித்து, நெய்வேதியமாக தயிர்சாதம் வைத்து, பூஜை செய்து அந்த தயிர் சாதத்தை பக்தர்களுக்கு விநியோகம் செய்வது, நமக்கு பல நன்மைகளை கொடுக்கும்.

இந்த அஷ்டமி திதி வழிபாடானது, தீராத பல பிரச்சனைகளுக்கும் தீர்வை கொடுக்கும். உங்களால் முடிந்தால் நீங்கள் வழிபட்டு வரும் இந்த 8 அஷ்டமி திதிகளில், ஏதாவது ஒரு அஷ்டமி திதியில் பைரவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து நல்லது. முடிந்தவர்கள் 8 அஷ்டமி திதிக்கும் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்வதிலும் தவறு கிடையாது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் பைரவருக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி, முந்திரிப் பருப்பை நிவேதனமாக வைத்து, அந்த முந்திரிப்பருப்பை பக்தர்களுக்கு வினியோகம் செய்வது நல்லது என்றும் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. முந்திரி பருப்பு என்றதும், செலவு அதிகமாகும் என்று நினைக்க வேண்டாம். 5 லிருந்து 6 முந்திரி பருப்புகள் வைத்து இரண்டு பக்தர்களுக்கு வினியோகம் செய்தாலும் அது நல்ல பலனைக் கொடுக்கும்.

இப்படி பைரவரை நாம் வழிபாடு செய்வதன் மூலம், நமக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகள் குறைக்கப்பட்டு, கடன் தொல்லைகள் குறைக்கப்பட்டு, நோய் நொடிகள் சரியாகி, வாழ்க்கையில் கட்டாயம் முன்னேற்றத்தை அடையமுடியும். இதுமட்டுமல்லாமல் அடகு வைத்த நகைகளை சீக்கிரம் மீட்டுவிடலாம். வாழ்வில் சுபிட்சம் அடைய சுலபமான இந்த பைரவர் வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து அனைவரும் நல்ல பலனை அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா? போடக்கூடாதா? உண்மை என்ன? எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -