அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடலாமா? போடக்கூடாதா? உண்மை என்ன? எந்தெந்த நாளில் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது?

kolam-amavasa
- Advertisement -

அமாவாசையில் கோலம் போடலாமா? போடக்கூடாதா? என்கிற கேள்வி எல்லோருக்கும் எழும். அமாவாசை அன்று விசேஷ தினமாக கருதி பலரும் டிசைன் டிசைனாக ஸ்பெஷல் கோலங்கள் எல்லாம் போட்டு வைப்பார்கள். இது சரியா? தவறா? என்கிற கேள்வி அவர்களுக்குள்ளும் கட்டாயம் இருக்கும். எந்த நாளில் குறிப்பாக வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது? என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். எப்போது கண்டிப்பாக வீட்டு வாசலில் கோலம் போட வேண்டும்? என்பதையும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

amavasai

அமாவாசை அன்று நாம் செய்ய வேண்டிய முக்கிய கடமையில் ஒன்றாக பித்ரு கடமை உள்ளது. வேறு எந்த நாட்களில் நாம் என்ன செய்தாலும், அமாவாசை அன்று மட்டும் பித்ருக்களை முக்கியமாக கருதி நமது முன்னோர்களை வழிபடுவது வாழ்வில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளையும் நீக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதை சரியாக பின்பற்றாதவர்கள் நிச்சயம் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதை எதிர் கொள்ளும் தைரியம் இல்லாமல் போய் விடும். இதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

- Advertisement -

அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கட்டாயம் கோலம் போடக் கூடாது என்பது தான் ஆன்மீக ரீதியான உண்மை. அன்றைய தினத்தில் பித்ருக்கள் வீட்டிற்கு வருவதால் கோலம் போட்டு விசேஷமாக கொண்டாடக் கூடாது. அது போல் எண்ணெய் தேய்க்கக் கூடாது. மற்ற தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யக் கூடாது. இந்த நாளில் மட்டும் தான் நாம் பித்ருக்களை முறையாக வழிபடுகின்றோம். நமது முன்னோர்களை தவிர இந்த நாளில் வேறு யாரையும் வணங்க கூடாது. வெள்ளிக் கிழமையில் வரும் அமாவாசை தினத்தன்று பித்ரு பூஜை முடித்த பின்னரே வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.

amavasai1

வீட்டில் திருமணம் போன்ற விசேஷங்கள் வைத்திருப்பவர்கள், நல்ல காரியங்களை மேற்கொள்பவர்கள், பெரும்பாலும் பித்ரு பூஜை செய்ய யோசிக்கிறார்கள். பித்ரு பூஜை செய்ய இவைகள் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்று சாஸ்திரம் கூறுகிறது. உண்மையை கூற வேண்டும் என்றால் நல்ல காரியங்கள் நடத்துவோர் அமாவாசையில் பித்ரு பூஜை முடித்த பின்னர் செய்தால் மேலும் சிறப்பான பலன்கள் தான் உண்டாகும். முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும். இதனால் எந்த தயக்கமும் காட்டாமல் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுங்கள்.

- Advertisement -

அமாவாசை அன்று வீட்டை கழுவி சுத்தம் செய்தால் மட்டும் போதும். கோலம் போட தேவையில்லை. அமாவாசை அன்று மட்டும் அல்ல, முன்னோர்கள் பூஜை செய்யும் ஒவ்வொரு தினமும் அதாவது அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் பொழுது, திதி வரும் நாளில் பூஜைகள் செய்யும் பொழுது கூட வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. இந்த தினங்களை தவிர மற்ற எல்லா நாட்களிலும் வீட்டின் வாசலில் கோலம் போட வேண்டும். கோலம் போடாமல் வீட்டில் விளக்கு ஏற்றக் கூடாது. மறந்தும் கூட இந்த தவறை செய்யாதீர்கள். வீட்டு வாசலில் சிறிய கோலம் ஆவது போட்டு விட்டு விளக்கு ஏற்றுங்கள். அப்பார்ட்மெண்டில் இருந்தாலும் வாசலில் ஸ்டிக்கர் ஓட்டுவதை தவிர்த்து சின்ன ஸ்டார் கோலம் போட்டு வையுங்கள் போதும். இதனால் வீட்டில் மகாலட்சுமி கடாட்சம் உண்டாகும்.

kolam1

நீங்கள் விளக்கு ஏற்றும் அந்த பகுதிக்கு கீழே மாக்கோலமிட்டு அதன் மீது விளக்கை வைத்து ஏற்றுவது நல்லது. பூஜையின் பொழுது பலரும் தண்ணீர் வைப்பதை மறந்து விடுகிறார்கள். தண்ணீர் வைக்காமல் பூஜைகளை மேற்கொள்ளக் கூடாது. நல்ல காரியத்திற்காக ஒருவர் வெளியே புறப்படும் பொழுது அது அதிகாலை நேரமாக இருந்தாலும் சிரமம் பார்க்காமல் வீட்டு வாசலைக் கூட்டி பெருக்கி, கோலம் போட்டுவிட்டு வழி அனுப்பி வையுங்கள்.

- Advertisement -

kolam

கோலம் போடுவதற்கு முன்னால் யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது. பௌர்ணமி தினத்தில் கோலம் போட மறக்கக்கூடாது. வெள்ளிக்கிழமையில் பூஜை அறையில் கோலம் போடாமல் பூஜைகள் செய்யக்கூடாது. விக்கிரகங்களை தரையில் வைக்கக்கூடாது. மனையில் வைக்கும் பொழுது கோலம் இடாமல் எந்த சிலைகளையும் வைக்கக்கூடாது. இவற்றை சரியாக பின்பற்றினால் வீட்டில் சகல செல்வங்களும் நிலைத்து நிற்கும் என்பது சாஸ்திர உண்மை.

இதையும் படிக்கலாமே
நீங்கள் வாழ்க்கையில் படாதபாடு படுகிறார்களா? அதற்கு இவற்றில் சிலவும் காரணமாக இருக்கலாம் தெரிந்து கொள்ளுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -