‘திமிரு பிடித்த பெண்கள்’ அதிகம் இந்த ராசியில் தான் பிறந்திருப்பார்கள் தெரியுமா? நீங்க இதுல இருக்கீங்களானு தெரிஞ்சிக்கோங்க!

women-astro

பொதுவாகவே பெண்களை பூமாதேவிக்கு நிகராக பொறுமைசாலிகளாக இருக்க வேண்டும் என்பார்கள். மனித இனத்திற்கு ஆண் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு பெண்ணும் முக்கியம் தான். பெண்கள் இல்லை என்றால் இவ்வுலகில் உயிர்களும் இல்லை. ஒரு குடும்பத்திற்கு ஆணிவேராக இருப்பதும் பெண்கள் தான். பெண் இல்லாத குடும்பம் எப்படி இருக்கும்? என்பதை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. அத்தகைய பெண் சாந்தமாக இருப்பதும், திமிராக இருப்பதும் அடுத்தவர் அவளிடம் நடந்து கொள்ளும் முறையைப் பொறுத்தது. ஒரு பெண் திமிர் பிடித்தவளாக இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கும். அவள் வளர்ந்து வந்த சூழ்நிலை, சுற்றி இருப்பவர்கள் போன்ற காரணங்களை அலசினால் அவளின் இந்தத் திமிருக்கு அர்த்தமும் விளங்கிவிடும். இவ்வகையில் திமிர் பிடித்த பெண்கள் எந்த ராசியில் பிறந்திருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இப்பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசியில் பிறந்த பெண்கள் அதிகம் கோபப்படுபவர்களாக இருப்பார்களாம். இவர்களிடம் பழகுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவர்களை ஏமாற்ற நினைத்தால் அதன் பின்விளைவுகளும் பயங்கரமாக தான் இருக்கும். தனக்கு துரோகம் இழைத்தவர்களை பழிவாங்காமல் விட மாட்டார்கள் இவர்கள். என்ன செய்தாவது அவர்களின் தவறை அவர்களுக்கு உணர்த்தி விடுவார்கள். மிகவும் வெளிப்படையான இவர்கள், மனதில் பட்டதை பட்டென பேசி விடுவார்கள். இவர்கள் யாரையும் எளிதில் நம்பி விடுவதில்லை.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் அதிகார குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் தங்களின் கைதான் ஓங்கி இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருப்பார்கள். இவர்களை ஏமாற்ற நினைப்பவர்கள், இவர்களுக்குப் பிடிக்காதவர்கள், எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை தெறிக்க ஓட விட்டுவிடுவார்கள். தங்கள் எதிரிகளை வெல்வதற்கு இரக்கமின்றி எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர்கள் இவர்கள். அதுவே அவர்களுக்கு பிடித்தவர்களாக இருந்தால் அன்பை வாரி வழங்குவதிலும் இவர்கள் தான் முன்னிலையில் இருப்பார்கள்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் மிகுந்த தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். யாருக்கும் எதற்கும் பயப்பட மாட்டார்கள். எப்போதும் உண்மையை பேசும் இவர்களுக்கு நேர்மையாக இருப்பவர்களை மட்டுமே பிடிக்கும். இவர்களிடம் அதிகம் திமிர் இருந்தாலும் அதில் நியாயமும் நிச்சயம் இருக்கும். தான் செய்வது அனைத்தும் சரி என்ற தலைகனமும் இவர்களிடம் இருக்கும். தங்கள் கருத்துக்கு மாற்றாக இருப்பவர்கள் அனைவரையும் இவர்கள் எதிரிகளாக கருதுவார்கள். எல்லா நேரத்திலும் நாம் செய்வது சரியாக இருக்காது என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ளத்தான் வேண்டும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசியில் பிறந்த பெண்கள் பார்ப்பதற்கு மிகவும் சாந்தமாக தான் தோற்றமளிப்பார்கள். இவர்களின் அமைதிக்குப் பின் மிகப்பெரும் பூகம்பம் இருப்பது யாரும் அறியாத ஒன்றாக இருக்கும். தன்னை விமர்சிப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டாமல் இவர்கள் தூங்க மாட்டார்கள். இவர்கள் கண்ணாடி போன்றவர்கள். மற்றவர்கள் இவர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ அதே போல் தான் இவர்களும் அவர்களிடம் நடந்து கொள்வார்கள். சுருக்கமாக சொன்னால் நல்லவர்களுக்கு நல்லவர்கள், தீயவர்களுக்கு தீயவர்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசியில் பிறந்த பெண்கள் அதிக கோபம் மற்றும் பொறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களுக்கு பிடித்தவர்களிடம் ஒரு முகத்தையும், எதிரிகளிடம் வேறொரு முகத்தையும் காட்டுபவர்களாக இருப்பார்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களை பற்றி இவர்கள் ஒருபோதும் சிந்திப்பதில்லை. ஆனால் அவர்கள் இவர்களுக்கு தொந்தரவு தரும் பட்சத்தில் அவர்களை அவமானப்படுத்துவதற்கு சிறிதும் தயங்க மாட்டார்கள். தங்களுக்கு பிடிக்காதவர்களை சட்டென வார்த்தைகளால் அதிகம் காயப்படுத்தி விடுவார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்பது போல் இருவேறு கோணங்களில் இவர்களின் குணம் இருக்கும்.

- Advertisement -

மீனம்:
meenam
மீன ராசியில் பிறந்த பெண்கள் மிகவும் நேர்மையானவர்கள். தவறு செய்பவர்களை உடனுக்குடன் தட்டிக் கேட்க இவர்கள் சிறிதும் தயங்குவதில்லை. ஆண் பெண் பாகுபாடின்றி சமமாக நடத்துபவர்களை இவர்கள் மதிப்புடன் நடத்துவார்கள். பெண் தானே என்று அலட்சியம் செய்பவர்களிடம் இவர்களின் சுயரூபம் முழுமையாக வெளிப்படும். பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருக்க வேண்டும் என்பது இவர்களின் விருப்பமாக இருக்கும். அதிக தைரியம் கொண்ட இவர்களிடம் மற்றவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது தான் நல்லது.

இதையும் படிக்கலாமே
பெண்களுடைய புருவம் எப்படி இருக்க வேண்டும்? நீங்கள் அதிர்ஷ்டசாலிகளா! துரதிர்ஷ்டசாலிகளா! என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா?

இது போன்று மேலும் உங்களுக்குரிய ஜோதிட சாஸ்திர பலன்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Rasi pothu palan in Tamil. Pengal rasi. Pengal rasi palan. Pothu palangal. Rasi palangal Tamil. General rasi palan in Tamil.