திணை அரிசியில் இவ்வளவு சாஃப்ட் சாஃப்ட் சப்பாத்தியா? கோதுமை மாவில் சுட்டா கூட இத்தனை ருசியாக இத்தனை ஆரோக்கியமாக சப்பாத்தி சுட முடியாது.

chappathi
- Advertisement -

ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில் ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் திணை அரிசியை வைத்து நம்முடைய வீட்டிலேயே சாஃப்ட்டான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கோதுமை மாவு சப்பாத்தியை விட ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாக்கணும்.

இந்த சப்பாத்தி செய்வது ரொம்ப ரொம்ப ஈஸின்னு சொல்ல மாட்டேங்க. கொஞ்சம் வேலை இருக்கத்தான் செய்யும். ஆனால், அந்த அளவுக்கு ஆரோக்கியமும் ருசியும் இதில் குறைவே இருக்காது.

- Advertisement -

செய்முறை 

இதற்கு 1 டம்ளர் திணை அரிசி எடுத்து நன்றாக தண்ணீரில் அலசி கழுவி விட வேண்டும். தண்ணீரை வடிகட்டி விடுங்கள். ஒரு வெள்ளை துணியில் இந்த கழுவிய திணை அரிசியை போட்டு பத்து நிமிடம் காய வைத்து விடுங்கள். ஃபேன் காற்றிலேயே காய வைத்துக் கொள்ளலாம். வெள்ளைத் துணியில் ஈரம் போவதற்காக காய வைத்திருக்கும் திணை அரிசியை எடுத்து, ஒரு கடாயில் போட்டு லேசாக சூடு செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த திணை அரிசியில் இருக்கும் தண்ணீர் எல்லாம் போகும் வரை சூடு செய்தால் மட்டும் போதும். திணை அரிசி வெடித்து வறுபடும் அளவுக்கு வறுத்து விடக்கூடாது.

உங்கள் வீட்டில் நன்றாக வெயில் அடிக்கும் என்றால் கழுவிய இந்த திணை அரிசியை வெயிலிலேயே காய வைத்து அப்படியே மாவு அரைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

சரி, இப்போது கழுவி காயவைத்த திணை அரிசி 1 டம்ளர் இருக்கட்டும். இதற்கு 1/4 கப் அளவு ஜவ்வரிசி நமக்கு தேவை. மாவு ஜவ்வரிசியை கடாயில் போட்டு அதை பொரியும் அளவுக்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது நம்மிடம் 1 டம்ளர் அளவு திணை அரிசிக்கு, 1/4 டம்ளர் அளவு ஜவ்வரிசி தயாராக இருக்கிறது.

இந்த 2 பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவில் தான் சப்பாத்தி செய்யப்போகின்றோம்.

- Advertisement -

இப்போது அரைத்து வைத்திருக்கும் மாவில் இருந்து 1 டம்ளர் மாவு அளந்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதே 1 டம்ளர் அளவு தண்ணீரை ஊற்றி சூடு செய்யுங்கள். அந்த தண்ணீரில் சப்பாத்தி மாவுக்கு தேவையான அளவு உப்பு, 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக சூடாகி வந்ததும், எடுத்து வைத்திருக்கும் ஒரு டம்ளர் மாவை இந்த தண்ணீரில் கொட்டி கலந்து விடவும் 30 செகண்ட் தான் கலந்து விட்டுக் கொண்டே இருக்கும் போது அடுப்பை அணைத்து விடுங்கள்.

மாவை கட்டிகள் இல்லாமல் கலந்து அப்படியே ஒரு மூடி போட்டு மூடி விடவும். 10 நிமிடம் கழித்து மாவை திறந்து, சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும். மாவில் கை பொறுக்கும் சூடு இருக்கும்போதே மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். மாவு கையில் ரொம்பவும் ஒட்டுவது போல இருந்தால் கையில் கொஞ்சம் எண்ணெயோ, தண்ணீரோ நனைத்துக்கொண்டு மாவு பிசையலாம். சூப்பரான திணை சப்பாத்தி மாவு தயார்.

இதை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி கோதுமை மாவு தொட்டு கொஞ்சம் திக்காக தேய்த்துக் கொள்ளுங்கள். சப்பாத்தி கல்லை அடுப்பில் வைத்து சூடு செய்து திரட்டி வைத்திருக்கும் இந்த திணை சப்பாத்திகளை போட்டு சுட்டெடுக்க வேண்டும். கல்லு நன்றாக காய்ந்ததும் மிதமான தீயில் வைத்து விட்டு இந்த சப்பாத்தியை போட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போடுங்கள். கரண்டியை வைத்து சப்பாத்தியின் ஓரங்களில் அழுத்தம் கொடுத்தால் இந்த சப்பாத்தி அப்படியே உப்பலாக உப்பி வரும்.

இதையும் படிக்கலாமே: இனி விசேஷ நாட்களில் பூஜை பாத்திரங்களை கைவலிக்க தேய்த்து கஷ்டப்பட வேண்டாம். பித்தளை விளக்கு தங்கம் போல ஜொலிக்க இந்த 1 பொருள் போதும்.

சூப்பரான சாஃப்ட் சாஃப்ட் சப்பாத்தியை இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேகவைத்து சப்பாத்திக்கு மேலே கொஞ்சமாக நெய் அல்லது வெண்ணெய் தடவி பரிமாறி பாருங்கள். கூடவே தொட்டுக்கொள்ள டால் அல்லது ஏதாவது ஒரு கிரேவியை வைக்கலாம். அசத்தலான சுவையில் உங்களுக்கு சூப்பரான ஆரோக்கியம் தரும் டிபன் தயாராகி இருக்கும். இந்த ரெசிபி பிடிச்சவங்க மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -