நீங்க தினமும் தலைக்கு குளிப்பீங்களா? இல்லை வாரம் ஒரு முறையா? தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா? கெட்டதா? தலைக்கு குளிக்கும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள்!

hair-wash-fall
- Advertisement -

அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப தலைக்கு குளிப்பது என்பது தொடர்ந்து செய்து வருகிறோம். சிலர் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு. சிலர் வாரம் ஒரு முறை அல்லது இரு முறை மட்டுமே தலைக்கு தண்ணீரை ஊற்றி குளிப்பார்கள். இப்படி இருக்க தினமும் தலைக்கு குளித்தால் நல்லதா? அல்லது கெட்டதா? எப்படி தலைக்கு குளிக்க வேண்டும்? எப்படி தலைமுடியை பராமரிக்க வேண்டும்? என்பதை தான் இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் இனி நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.

உச்சந்தலையில் நீங்கள் ஊற்றும் தண்ணீர் தான் உடல் முழுவதும் இருக்கும் உஷ்ணத்தை தணிக்கிறது எனவே தலைக்கு குளிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல! நீங்கள் தலைக்கு குளிக்கும் முறையை வைத்தும் தான் உங்களுடைய தலைமுடியின் வளர்ச்சியும், உடல் நலமும் அடங்கி உள்ளது எனவே இதற்கு நீங்கள் கட்டாயம் முக்கியத்துவம் கொடுத்து தான் ஆக வேண்டும்.

- Advertisement -

உடலுக்கு உள்ளே எடுத்துக் கொள்ளும் உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல உடலுக்கு வெளியில் தலையில் நாம் ஊற்றும் தண்ணீரும் மிகவும் முக்கியமானது. தினமும் தலைக்கு குளிப்பவர்கள் அவர்களுடைய உடல் நிலையை பொறுத்து தான் அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். உங்களுடைய முடி ரொம்பவும் மெல்லியதாக மற்றும் அதிக வியர்வை உடையதாக இருந்தால், பொடுகு, அரிப்பு, உஷ்ணம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டால் நீங்கள் கட்டாயம் தினமும் குளிக்கலாம் தவறில்லை.

அதுவே உங்களுடைய முடி ரொம்பவும் கடினமாகவும், வறண்ட தன்மையுடனும் இருந்தால் நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது மேலும் உங்களுடைய முடியை கடினமாக்கி உடைய செய்துவிடும். வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தலைக்கு தண்ணீர் ஊற்றுவேன் என்று சொல்பவர்களும் தவறான முறையைத் தான் கடைப்பிடிக்கிறீர்கள். முடிந்தவரை உங்களுக்கு தலைமுடி சுத்தமாக இல்லை என்று தோன்றும் பொழுதெல்லாம் தலைக்கு குளிக்க வேண்டும் இதனால் உடல் உஷ்ணமும் தணியும், தலைமுடியும் பராமரிக்கப்படும்.

- Advertisement -

நீங்கள் எத்தனை முறை தலைக்கு குளித்தாலும் ஷாம்புவை அதிகம் ரசாயனம் இல்லாததாக தேர்ந்தெடுத்து குளிப்பது அவசியமானது. மேலும் அதை அளவாக தான் பயன்படுத்த வேண்டும். நேரடியாக தலைக்கு பயன்படுத்தக் கூடாது. தண்ணீரில் கலந்து பின்னர் பயன்படுத்துவது நல்லது. இதனால் ரசாயன தாக்கம் குறையும். அதிகம் ஷாம்பு பயன்படுத்துபவர்களுக்கு முடி அதிகம் உடையும் மற்றும் பொடுகு தொல்லையும் அதிகரிக்கும். தலைக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் சிலர் வெறும் தண்ணீரிலேயே அலசி கொண்டிருப்பார்கள். இதுவும் தவறான முறை தான்.

இதையும் படிக்கலாமே:
உங்க கிட்சென்ல இந்த 5 பொருள் இருந்தா உடனே தூக்கி போட்ருங்க! சமையலறையில் இருக்கவே வேண்டாதவை எவையெல்லாம் தெரியுமா?

வெளியில் சுற்றுவதால் ஏற்படக்கூடிய மாசு காரணமாக உங்களுடைய தலைமுடியில் அழுக்குகள் சேர்ந்து இருக்கும். நீங்கள் வெறும் தண்ணீரால் குளிப்பதால் இந்த அழுக்குகள் படிந்து பொடுகு தொல்லையையும், பல பிரச்சினைகளையும் உண்டாகும். உங்களுடைய தலைமுடியின் தன்மை மற்றும் அதில் சேரக்கூடிய அழுக்குகள் தான் எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும்? மற்றும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டுமா? அல்லது வெறும் தண்ணீரில் அலச வேண்டுமா? என்பதை நிர்ணயிக்க வேண்டும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நீங்கள் தலைக்கு தண்ணீர் ஊற்றினால் நல்லதல்ல! தலைமுடி சுத்தமாக இருந்தால் தான் சருமமும் பொலிவாக இருக்கும். எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்கள் வாரத்திற்கு இரண்டு நாள் கண்டிப்பாக தலைக்கு தண்ணீர் ஊற்றுவது நல்லது.

- Advertisement -