பெருமூச்சு விடுவது துன்பத்தை தருமாம் தெரியுமா? மனிதன் கட்டாயம் செய்யக்கூடாத சில செயல்கள் இதோ!

- Advertisement -

நாம் செய்யும் சில செயல்களால் நமக்கு வரக்கூடிய ஆபத்துக்கள் மிகப்பெரியதாக அமைந்து விடுகிறது. இதனால் தான் நம் முன்னோர்கள் நிறைய சாஸ்திர, சம்பிரதாயங்களை வழிவகுத்து கடைப்பிடித்து வந்தனர். நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் சொல்லும் ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் மிகப்பெரிய நன்மைகள் ஒளிந்து கொண்டு தான் இருக்கும். அதை இன்றைய தலைமுறையினர் பலருக்கும் புரிவது கிடையாது. அதிலும் ஒரு சில விஷயங்களை சமீப காலங்களில் நாம் ஏற்றுக் கொண்டு தான் வருகிறோம். அவற்றில் சிலவற்றை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

breath-moochu-thinaral

பொதுவாகவே மனிதன் பெருமூச்சு விடக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆழ்ந்து சுவாசிப்பது வேறு, பெருமூச்சு விடுவது வேறு. அடிக்கடி பெருமூச்சு விடுபவர்களுக்கு துன்பங்கள் தான் அதிகரிக்குமாம். நீங்கள் விடும் பெருமூச்சு காற்றானது மற்றவர்களின் மேல் படக்கூடாது. அப்படி பட்டுவிட்டால் அவர்களுக்கும் வாழ்வில் துன்பங்கள் அதிகரிக்குமாம். நோயுள்ளவர்கள் பெருமூச்சு விடுவார்கள். நாம் சாதாரணமாக இருக்கும் பொழுது வேண்டுமென்றே பெருமூச்சு விடுவது அவ்வளவு நல்லதல்ல.

- Advertisement -

மனிதனின் தலை முடி, நகம் இவைகள் நாம் இறந்த பிறகும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும். அதனால் இவற்றிற்கு மந்திரங்களை உள்வாங்கும் திறன் எளிதில் உண்டாகிறதாம். இவற்றை ஏவல் செய்யவும், பில்லி, சூனியம் போன்ற செயல்களுக்கும் பயன்படுத்துவதை நாம் பார்த்திருக்கிறோம். அதனால் தலைமுடி மற்றும் நகத்தை மட்டும் மற்றவர்கள் பார்க்கும்படி வெளியில் தூக்கி எறியக் கூடாது. தலையை வாரிக் கொண்டு இருக்கும் பொழுதே அனைவரும் பார்க்கும்படி அப்படியே முடியை பறக்க விடுவது கூடாது என்பது முன்னோர்களின் கூற்று.

Moondram pirai

எந்த அளவிற்கு மூன்றாம் பிறை சந்திரன் அதிர்ஷ்டம் தருமோ! அதே அளவிற்கு நான்காம் பிறை சந்திரனை பார்ப்பவர்களுக்கு ஆபத்துக்கள் உண்டாகும். அதனால் நான்காம் பிறை சந்திரனை தெரியாமல் கூட தரிசனம் செய்யாதீர்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முடி திருத்தம் செய்யும் கடை விடுமுறை விடப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சாஸ்திரம் தான். அந்த கிழமைகளில் யாரும் முடி வெட்டுவது, முகச்சவரம் செய்வது, நகம் வெட்டுவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. இவ்வாறு செய்வதால் தரித்திரம் உண்டாகும் என்பார்கள்.

- Advertisement -

கர்ப்பிணி பெண்கள் காளான் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுபோல் செப்பு பாத்திரத்தில் பால் ஊற்றி வைத்தால் பால் திரிந்து விடும் என்பார்கள். அதனால் செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது. உப்பு, இனிப்பு, காரம், புளிப்பு இந்த நான்கையும் எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.

mushroom_3

வைதீக காரியங்களை செய்யும் பொழுது பட்டுப் புடவை, பட்டு வேஷ்டி போன்றவற்றை அணிந்து கொண்டு செய்யக்கூடாது. மருந்து மாத்திரைகளை வாங்கி வந்து அவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. இது மிகவும் மோசமான செயலாகும். நோய் குணம் அடைந்த பின்னும் மாத்திரைகள் இருக்கிறதே என்று விழுங்கக் கூடாது. மருந்து, மாத்திரைகளை பணம் வைக்கும் இடத்தில் கட்டாயம் வைக்கக்கூடாது.

- Advertisement -

lemon-diyas

ஒருவரிடம் நாம் உதவி கேட்கும் பொழுதும் எதையும் இலவசமாக பெற்றுக் கொள்ளக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் இனாமாக எதையும் வாங்கக் கூடாது. அதுபோல் நமக்கு ஒருவர் இட்ட உணவை மனமார ஏற்றுக் கொள்ள வேண்டும். உணவை எப்போதும் பழிக்கக்கூடாது. இதுபோல் பூஜைகள் செய்யும் பொழுது எலுமிச்சை மூடியை மட்டும் விளக்கேற்ற பயன்படுத்தக் கூடாது. இவற்றால் கோவில்களில் விளக்கு ஏற்றலாம், ஆனால் வீடுகளில் ஏற்றக்கூடாது.

cloth

நம்முடைய ஆடையில் தெரியாமல் தீப்பொறி அல்லது விளக்கின் நெருப்பு லேசாக பட்டுவிட்டால் கூட அந்த ஆடையை திரும்ப உடுத்திக் கொள்ளக் கூடாது. அது நன்றாகவே இருந்தாலும் சரி மீண்டும் அதை பயன்படுத்தாதீர்கள். வெள்ளிக்கிழமையில் மட்டுமல்ல எந்த கிழமையிலும் விளக்கு வைத்த பின்னால் தலையில் இருந்து பேனை எடுக்கக்கூடாது. தலை வாரக்கூடாது. அதுபோல் முகத்தையும் கழுவ கூடாது. இவை தரித்திரத்தை உண்டாகும். வெள்ளிக்கிழமையில் அரிசி, மிளகாய், தனியா வறுப்பது, அரிசி புடைப்பது போன்ற செயல்களை நிச்சயம் செய்யக்கூடாது.

இதையும் படிக்கலாமே
முகம் பார்க்கும் கண்ணாடி எங்க வேணாலும் வெச்சுக்க கூடாது! அப்புறம் இதெல்லாம் தான் நடக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -