தமிழ் புத்தாண்டில் இதை செய்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும்

Lord Murugan
- Advertisement -

உலகின் மூத்த குடியான தமிழ் மக்கள் தங்களின் பஞ்சாங்க குறிப்புகள் மூலம் புத்தாண்டு பிறக்கும் தினத்தை கட்சிதமாக அறிந்து கொண்டாடப்படும் திருநாளே தமிழ் புத்தாண்டு. தமிழ் புத்தாண்டானது இந்தியாவையும் தாண்டி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல நாடுகளில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பல சிறப்புகள் நிறைந்த சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டில் நாம் என்ன செய்தால் நமக்கு நன்மைகள் அதிகரிக்கும் என்று பார்ப்போம் வாருங்கள்.

Lord Murugan Vel

சித்திரை முதல் நாளில் நாம் குளித்துவிட்டு தூய்மையான ஆடை அணிந்துகொண்டு வீடு வாசல் தெளித்து அரிசி மாவால் கோலம் இட வேண்டும். அந்த அரிசி மானிவை சிறு எறும்புகள் உண்பது நமக்கு நன்மையை தரும். அதன் பிறகு வீட்டு வாசல்படியில் மஞ்சள் குங்குமம் இடவேண்டும். மஞ்சள் குங்குமமானது கிருமி நாசினியாக மட்டும் இல்லாமல் நமது வீட்டினுள் துர் சக்த்திகளை நுழைய விடாமல் தடுக்கிறது.

- Advertisement -

அதன் பிறகு வீட்டில் விளக்கேற்றி தமிழ் கடவுள் முருகனை போற்றி பூஜை செய்ய வேண்டும். கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் போன்றவற்றை படிக்கலாம். இந்த ஆண்டு முழுக்க எல்லா விதமான நற்பலன்களையும் தந்தருள முருகப்பெருமானிடம் மனமுருகி வேண்டலாம். முடிந்தால் முருகன் கோயிலிற்கு சென்று வழிபாடு செய்யலாம்.

செய்ய வேண்டிய பரிகாரம்:
சித்திரம் மாதம் முதல் வெய்யிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பது நாம் அறிந்ததே ஆகையால் விசிறி, மோர், கூழ் போன்றவற்றை ஏழை எளியோருக்கு இன்று தானம் செய்வது நமக்கு நல்ல பலன்களை தரும். வெய்யிலின் தாக்கத்தில் இருக்கும் ஏழைகளுக்கு எப்படி நாம் கொடும்கோடும் பொருளும் உணவும் குளிர்ச்சியை தருகிறதோ அது போல நமது வாழ்வும் ஆண்டு முழுவதும் எந்த வித சங்கடங்களும் இல்லாமல் குளிர்ச்சியாக இருக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

தமிழ் புத்தாண்டு ராசி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

English Overview:
As per Tamil Panchangam Tamil people celebrating the Tamil year on April 14. Here we described about the things that needs to be done on Tamil new year.

- Advertisement -