கோயிலிற்கு செல்பவர்கள் இதை எல்லாம் கணவத்தில்கொள்வது அவசியம்

kovil
- Advertisement -

பழங்காலத்தில் இருந்து தமிழர்களை பொறுத்தவரை கோவில் என்பது ஒரு மிக முக்கிய இடமாகவே உள்ளது. மன்னர்கள் காலத்தில் கோவில்கள் ஒரு வழிபாட்டிற்குரிய இடமாக மட்டும் இல்லாமல் ஆடல் பாடல் போன்ற கலைகளை வளர்க்கும் ஒரு இடமாகவும் இருந்தது. காலங்கள் மாறியதால் நம்முடைய கலாச்சாரமும் படிப்படியாக மாறி இப்போது கோவில் என்பது முழுக்க முழுக்க வழிபாட்டு தளமாகவே மாறியுள்ளது. வழிபாட்டு தலமான கோவிலில் தெய்வங்களை வழிபடும்போது கடைபிடிக்கவேண்டிய சில விதிகள் உள்ளன. வாருங்கள அது குறித்து விரிவாக பார்ப்போம்.

kovil

கோவிலின் முகப்பிலேயே நவகிரக சந்நிதி இருந்தாலும் அவர்களை இறுதியாக தான் வழிபட வேண்டும். கோவிலை பொறுத்தவரை கடவுளுக்கே முன்னுரிமை. ஆகையால் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பிறகு இறுதியாக நவகிரகங்களை வழிபடுவதே சிறந்தது.

- Advertisement -

சிவன் கோவிலிற்கும் பெருமாள் கோவிலிற்கும் செல்கையில் சில நுணுக்கங்களை கடைபிடிப்பது அவசியம். சிவன் கோவிலை பொறுத்தவரை சிவனை வணங்கிய பிறகே அம்மனை வணங்கவேண்டும். ஆனால் பெருமாள் கோவிலில் முதலில் தாயாரை வணங்க வேண்டும். அதன் பிறகே பெருமாளை வணங்க வேண்டும்.

perumal

பொதுவாக ராகு காலத்தில் யாரும் எந்த நல்ல காரியத்தையும் செய்வது கிடையாது. ஆனால் இந்த விதி கோவிலில் பொருந்தாது. செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் ராகு காலத்தில் துர்கை பூஜையில் கலந்துகொள்வது மிகவும் விஷேஷம்.

- Advertisement -

கோவிலை சுற்றிவருவதற்கு கூட சில விதிமுறைகள் உள்ளன.  சிவன் கோவிலை குறைந்தது 3 முறையாவது சுற்ற வேண்டும். அதற்கு மேல் 5, 7, 9 என்ற வரிசையில் எத்தனை முறை வேண்டுமானாலும் சுற்றலாம்.

sivan

இதையும் படிக்கலாமே:
சனிபகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா ?

விநாயகரை ஒரு முறை சுற்றினாலேயே போதும் அவர் பலவிதமான அருளை தருவார். அம்பாளை நான்குமுறை சுற்றுவது சிறந்தது. முருகனை மூன்றுமுறை சுற்றுவது சிறந்தது. விஷ்ணுவை நான்குமுறை சுற்றுவது சிறந்தது.

- Advertisement -