பூஜை அறையில் செய்ய வேண்டியவையும் செய்யக்கூடாதவையும் என்ன தெரியுமா?

puja-room-2

வீட்டில் பூஜை செய்யும்போது சிலருக்கு பல குழப்பங்கள் வரும். வெற்றிலையை எப்படி வைக்க வேண்டும்?, எந்த பழம் தெய்வத்திற்கு உகந்தது? பூஜையை எப்படி ஆரமிக்க வேண்டும்? எந்த மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்? இப்படி பல சந்தேகங்கள் வரும். உங்களுடைய பல சந்தேகங்களுக்கான பதில் தான் இந்த பதிவு.

puja room

பூஜையில் வைக்கும் வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைப்பாக்கில் சுண்ணாம்பு கூடாது. அவல் பொரி, கடலை, கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். பச்சரிசியில்தான் நைவேத்தியம் செய்யவேண்டும்.

நாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலா, எலுமிச்சை, புளியம்பழம், விளாம்பழம் போன்றவையே பூஜைக்கு ஏற்ற பழங்கள். வாழைப்பழத்தில் பூவன் பழம், நாட்டுப்பழம் நல்லது.

banana

குடுமித் தேங்காயைச் சீராக உடைத்து, பிறகுதான் குடுமியை பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் என்றால் மாற்றி வேறு தேங்காய் உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் வேண்டாம்.

- Advertisement -

வழிபாட்டுக்கு முன்பாக சாம்பிராணி புகை இடுவது சிறப்பானது, சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது. கோலமிட்டு, விக்கிரங்களை சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி, அர்ச்சனை செய்து, பின்னர் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும்.

விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளை அட்சதையால் பூஜிப்பதும் தவறுதான். சிவனுக்கு தாழம்பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை மலர் விலக்கானது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உரியவை அல்ல.

vinayagar

தும்பை, வில்வம், கொன்றை, ஊமத்தை, வெள்ளெருக்கு போன்றவை சிவனுக்கு உரிய மலர்கள். காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளிப் பூக்கள் உகந்தவை. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ ஆகியவை பூஜைக்கான மலர்கள் என ஆன்றோர்களால் கூறப்படுகிறது.

சாமந்திப்பூ உள்ளிட்ட மணமில்லாத மலர்களை பூஜைக்கு விலக்கி விடவேண்டும். ஆனால் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம். அர்ச்சிக்கும்போது முழு மலரால் அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கிள்ளி அர்ச்சனை செய்வது வேண்டாம். காய்ந்து போன, வாடிப்போன, பூச்சிகள் கடித்த, அழுகிப்போன பூக்களை வழிபாட்டில் சேர்ப்பது தெய்வ குற்றம்.

தமிழ் கதைகள், சிறு கதைகள், குட்டி கதைகள் என சுவாரஸ்யமான கதைகள் அனைத்தையும் உடனுக்குடன் படிக்க தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்யுங்கள்.