எந்தெந்த பொருட்களை தரையில் வைத்து பூஜை செய்யக்கூடாது

muruganl

கடவுளை நாம் வணங்குவதற்கு முக்கிய காரணமே அவரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கவேண்டும் என்பதற்காக தான். நாம் கடவுளை வணங்குகையில் நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகளால் நம் வேண்டுதலுக்காக பலன் கிடைக்காமல் போகலாம். அந்த வகையில் நாம் பூஜை செய்யும்போது சில பொருட்களை தரையில் வைத்தால் அது துரதிஷடத்தை அளிக்கும்.

எந்தெந்த பொருட்களை தரையில் வைத்து பூஜை செய்ய கூடாது?

பூஜை அறையில் சங்கு வைத்திருப்போர் அதை தரையில் வைக்கக்கூடாது. சங்கில் லட்சுமி தேவி குடியிருப்பதாக கருதப்படுகிறது. எனவே சங்கை திரையில் வைப்பதால் லட்சுமி தேவியை அவமதிப்பது போல் ஆகும். இதானால் வீட்டில் பண பிரச்சனை அதிகரிக்கும்.

sangu

தங்கத்தில் லட்சுமி தேவி வசிப்பதாக ஐதீகம். ஆகையால் பூஜை அறையில் தங்கத்தை வைத்தால் அதை தரையில் வைக்காமல் ஒரு துணி பூட்டு அதன் மேல் வைக்கவேண்டும்.

- Advertisement -

golden bangles

வீட்டில் சிவலிங்கம் வைத்திருப்போர் அதை தரையில் வைக்க கூடாது. மாறாக ஒரு மரபலகையை வைத்து அதன் மேல் சிவலிங்கத்தை வைக்க வேண்டும்.

siva lingam

பூஜை அறையில் உள்ள விளக்கை தரையில் வைத்து ஏற்றாமல் அதை ஒரு சுத்தமான துணியின் மேலோ அல்லது விளக்கை வைப்பதற்காக கடைகளில் விற்கப்படும் வேறு ஏதாவது ஒரு பொருள் மீதோ வைத்து ஏற்றலாம்.