ஒவ்வொரு மாதமும் திரி புஷ்கர யோகம் என்ற ஒரு யோகம் ஏற்படும். இந்த யோகம் ஏற்படும் நேரத்தில் நாம் என்ன செயலை செய்கிறோமோ அதே செயலையே திரும்பவும் செய்வோம் என்று கூறப்படுகிறது. திரி புஷ்கர என்று வருவதிலேயே மூன்று என்பதன் பொருளும் வருகிறது. அதனால் இந்த நேரத்தில் நாம் எந்த ஒரு செயலை செய்கிறோமோ அதே செயலை மூன்று முறை திரும்பவும் செய்வோம் என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட திரி புஷ்கரண யோகத்தில் நாம் எந்த பொருளை வாங்கினாலும் அந்த பொருளை நாம் திரும்பவும் வாங்கும் சூழ்நிலை உண்டாகும் என்றும் கூறப்படுகிறது. அதனால் நன்மைகள் நடைபெறுவதற்கு இந்த நேரத்தை நாம் பயன்படுத்தினால் இந்த மாதம் முழுவதும் நமக்கு நன்மைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும் என்றும் கூறலாம். அப்படிப்பட்ட திரிபுஷ்கரண யோகம் ஜூன் மாதத்தில் எந்த நாளில் எந்த நேரத்தில் வருகிறது என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஜூன் மாத திரிபுஷ்கரண யோகம் ஏற்படும் நேரம்
புதிதாக ஒரு நகையை வாங்குகிறோம் வாங்கும் பொழுது இதே போல் அதிக அளவில் நகை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். புதிதாக துணி எடுக்கிறோம் இதே போல் அதிக அளவில் துணி எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். இதே புதிதாக இடம் வாங்குகிறோம் இதே போல் பல இடங்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவோம். வீட்டிற்கு தேவையான பொருட்கள் ஏதாவது வாங்கினால் இதே போல் மேலும் மேலும் அதிக அளவில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று நினைப்போம்.
இப்படி திரும்பத் திரும்ப ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம் அல்லவா? அது நடக்க வேண்டும் என்றால் அதற்குரிய வருமானம் நமக்கு இருக்க வேண்டும். அந்த வருமானம் இருந்தாலும் பலராலும் நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது. எத்தனை பேர் கையில் பணத்தை வைத்துக்கொண்டு ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சற்று சிரமம் பார்க்காமல் இந்த நேரத்தை பயன்படுத்தினால் அவர்கள் விரும்பிய பொருட்களை அதிகளவில் வாங்க முடியும்.
இந்த திரிபுஷ்கரண யோகம் என்பது ஒவ்வொரு மாதமும் ஏற்படும். எந்த நேரத்தில் ஏற்படுகிறது என்பதை நாம் தெரிந்து கொண்டோம் இருந்தால் அந்த நேரத்தில் நமக்கு எந்த பொருள் அதிக அளவில் வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த பொருளை வாங்கினால் அதை திரும்பத் திரும்ப வாங்கும் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் பண வரவும் ஏற்படும்.
அப்படி சிறப்பு மிகுந்த இந்த திரிபுஷ்கரண யோகம் என்பது ஜூன் மாதம் 18ஆம் தேதி அதாவது வருகின்ற செவ்வாய்க்கிழமை மாலை 3:56 மணிக்கு ஆரம்பித்து மறுநாள் அதாவது ஜூன் 19ஆம் தேதி புதன்கிழமை காலை 5:23 முடிகிறது. இதே போல் ஜூன் மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:03 க்கு ஆரம்பித்து மறுநாள் ஜூன் 24ஆம் தேதி காலை 3:25க்கு முடிகிறது.
இந்த நேரங்களை நாம் பயன்படுத்தி நம்முடைய வாழ்வில் என்ன நல்லது அடிக்கடி நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை செய்ய வேண்டும். முக்கியமான ஒரு குறிப்பு நல்லது மட்டும் தான் நடக்கும் என்று நினைக்காதீர்கள். இந்த நேரத்தில் ஏதாவது ஒரு தீமையை நாம் செய்தாலும் அதுவும் நமக்கு திரும்ப வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆஸ்பத்திரி செல்வது, கடன் வாங்குவது, சண்டை போடுவது, போன்ற செயல்களில் ஈடுபட்டாலும் அது திரும்பவும் நடைபெறும் என்பதையும் கருத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதையும் படிக்கலாமே: யோகம் பெருக ஏற்ற வேண்டிய தீபம்
மிகவும் அதி அற்புதமான நேரமான இந்த திரிபுஷ்கரண யோகம் நிறைந்த நேரத்தை நாமும் பயன்படுத்தி நம்முடைய வாழ்க்கையில் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி குவிக்கலாம் என்ற தகவலுடன் இந்த பதிவை நிறைவு செய்து கொள்கிறோம்.