- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருச்செந்தூரில் வழிபடும் முறை

திருச்செந்தூரில் வழிபடும் முறை

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் முருகப்பெருமானின் வழிபாடு என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. பலரும் முருகப்பெருமானை வழிபாடு செய்து அதற்குரிய பலனை பெற்று நலமுடன் வாழ்கிறார்கள். பலருக்கும் இஷ்ட தெய்வமாகவும் குலதெய்வமாகவும் திகழக்கூடியவராக முருகப்பெருமான் இருக்கிறார். அப்படிப்பட்ட முருக பெருமானுக்கு உகந்த கோயிலாக அறுபடை வீடுகள் திகழ்கின்றன.

இந்த அறுபடை வீடுகளில் மிகவும் முக்கியமான ஒரு படை வீடாக திகழ்வதுதான் திருச்செந்தூர். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த இடம் என்பதால் இந்த இடத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் தீரும் என்று கூறப்படுகிறது. அப்படி கஷ்டங்கள் தீரவும், வேண்டுதல் நிறைவேறவும் முருகப்பெருமானின் அருளை பெறவும் திருச்செந்தூரில் செல்ல வேண்டிய முக்கியமான ஒரு இடத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

திருச்செந்தூரில் வழிபடும் முறை

ஒவ்வொரு ஆலயத்திற்கும் தனி சிறப்புகள் இருக்கிறது. அந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்யும்பொழுது அந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய முக்கியமான இடத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் தான் அந்த ஆலயத்திற்கு நாம் சென்று வழிபட்டதற்குரிய முழுமையான பலனை நம்மால் பெற முடியும். இதற்கு திருச்செந்தூரும் விதிவிலக்கல்ல. திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு முன்பாக முக்கியமான இடத்திற்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வேண்டுதல் முழுமையாக நிறைவேறும். அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

திருச்செந்தூருக்கு செல்பவர்கள் பொதுவாக வியாழக்கிழமை அன்று செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் திருச்செந்தூர் என்பது குரு ஸ்தலமாக கருதப்படுவதுதான். அப்படி நாம் வியாழக்கிழமை முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு முன்பாக அங்கு இருக்கக்கூடிய மூவர் சமாதியை வழிபட வேண்டும். திருச்செந்தூர் ஆலயத்தை கட்டியவர்கள் மொத்தம் ஐந்து பேர். அதில் மூன்று பேர் அந்த இடத்தில் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். அந்த ஜீவசமாதி இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை வழிபாடு செய்து அங்கு அமைதியாக அமர்ந்து தியானம் செய்து உங்களுடைய வேண்டுதலை நீங்கள் முன்வைத்த பிறகு முருகப்பெருமானை சென்று பார்த்தால் அந்த வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அந்த மூவர் சமாதிக்கு செல்லும் பொழுது வாசனை மிகுந்த ஊதுபக்திகளை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அவர்களுக்கு சாற்றுவதற்கு வாசனை மிகுந்த பன்னீர் ரோஜாவை வாங்கிக் கொள்ள வேண்டும். அது மாலையாக இருந்தாலும் சரி உதிரியாக இருந்தாலும் சரி. அடுத்ததாக ஒரு மண் அகல் விளக்கில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். நல்ல எலுமிச்சம் பழமாக மூன்று எலுமிச்சம் பழங்களை வாங்கி வந்து அவர்களின் ஜீவசமாதியில் வைத்து உங்களுடைய வேண்டுதலை மனதார கூறிவிட்டு அதில் இருந்து ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை மட்டும் திரும்ப எடுத்து வர வேண்டும்.

முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு முன்பாக இந்த மூவர் சமாதியை இந்த முறையில் வழிபாடு செய்து விட்டு முருகப் பெருமானை வழிபாடு செய்ய நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நமக்கு நிறைவேறுவதோடு முருகப் பெருமானின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும். எடுத்து வந்த அந்த ஒரு எலுமிச்சம் பழத்தை வீட்டிற்கு வந்து வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:குலதெய்வ சாபம் நீங்க ஏற்ற வேண்டிய தீபம்

திருச்செந்தூர் சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்வது எந்த அளவிற்கு முக்கியமோ முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு முன்பாக மூவர் சமாதிக்கு சென்று அவர்களை வழிபாடு செய்வது என்பது மிகவும் முக்கியம். இதுவரை இந்த வழிபாட்டை செய்யாமல் இருப்பவர்கள் இனிமேல் செய்து வேண்டுதலின் முழுமையான பலனை பெறுங்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்