ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் தன்னை மீறி தனக்கு அப்பாற்பட்டு ஒரு சக்தி என்பது இருக்கும். அந்த சக்தி தான் நாம் தெய்வ ஆற்றல் என்று கூறுகிறோம். நமக்கு நன்மைகளை செய்யக்கூடிய ஆற்றலை தெய்வ ஆற்றல் என்றும் தீமைகளை செய்யக்கூடிய ஆற்றலை தீய ஆற்றல்களிலும் கூறுகிறோம். இப்படி நன்மைகளை தரக்கூடிய ஆற்றல்களான தெய்வ ஆற்றலில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக திகழ்வதுதான் குலதெய்வம்.
எவ்வளவோ தெய்வங்கள் இருந்தாலும் குலதெய்வத்தின் அருளால் தான் அவர்களுக்கு நன்மைகள் அனைத்துமே நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு சக்தி மிகுந்த குலதெய்வத்தால் ஒரு சில குடும்பங்களுக்கு சாபங்களும், தோஷங்களும் ஏற்படும். அதை நீக்குவதற்கு ஏற்ற வேண்டிய தீபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
குலதெய்வ சாபம் நீங்க ஏற்ற வேண்டிய தீபம்
குலதெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வார்கள். குலதெய்வ ஆலயத்திற்கு சென்று குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பூஜைகள் அனைத்தையும் செய்து குலதெய்வத்தை மகிழ்விப்பார்கள். இப்படி குலதெய்வத்தை மகிழ்விப்பதன் மூலம் அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி ஒரு புறம் இருக்க இன்னும் சில குடும்பங்களில் குலதெய்வ கோவிலுக்கு போக வேண்டும் என்று சொன்னாலே வீட்டில் பிரச்சனைக்கு மேல் பிரச்சினைகள் வரும்.
ஒரு சிலருக்கு குலதெய்வமே என்னவென்று தெரியாது. அதையும் மீறி குலதெய்வ கோவிலுக்கு சென்று வந்தால் மேற்கொண்டு பிரச்சினைகள் அதிகரிக்குமே தவிர்த்து நன்மைகள் நடைபெறாமல் போகும். இவை அனைத்திற்கும் காரணம் குலதெய்வத்தின் சாபம் தான். ஏதாவது ஒரு சூழ்நிலையில் குலதெய்வத்திற்கு எதிராக ஏதாவது ஒரு காரியத்தில் நாம் ஈடுபட்டு விட்டோம் என்றால் குலதெய்வம் நம் வீட்டை விட்டு சென்றுவிடும். அப்படி சென்றதோடு மட்டுமல்லாமல் சாபமும் ஏற்படும். அப்படி சாபம் பெற்றவர்கள் குலதெய்வத்தை எந்த முறையில் வழிபட்டால் சாபம் நீங்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
இதே வழிபாட்டை குலதெய்வம் தெரியாது என்பவர்களும் செய்யலாம். குலதெய்வ சாபத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஒரு தீபத்தை வீட்டு பூஜை அறையில் குலதெய்வத்தை நினைத்து ஏற்றி வைத்து “நாங்கள் தெரியாமல் செய்த தவறை மன்னித்து எங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று மனதார வழிபாடு செய்ய வேண்டும். குலதெய்வம் தெரியாது என்பவர்கள் இந்த தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு “எங்கள் குலதெய்வத்தை விரைவிலேயே எங்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் காட்ட வேண்டும்” என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது தீபம் ஏற்றும் முறையை பற்றி பார்ப்போமா? இதற்கு மண் அகல் விளக்கு தான் வேண்டும். சுத்தமான செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் வேண்டும். வேறு எண்ணெய்களை உபயோகப்படுத்த கூடாது. பஞ்சு திரியை உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு சிறிய தாம்பாள தட்டை வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு உங்களுடைய குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு தீபம் ஏற்றுங்கள்.
பிறகு அந்த எண்ணெயில் ஒரு சொட்டுத் தேன், மூன்று மிளகை போட வேண்டும். இப்படி போட்ட பிறகு இந்த தீபத்தை பார்த்து உங்களுடைய வேண்டுதலை நீங்கள் வைக்க வேண்டும். தினமும் காலையிலும் மாலையிலும் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். எப்பொழுதும் ஏற்றும் தீபங்கள் அப்படியே இருக்கட்டும். கூடுதலாக ஒரு தீபத்தை குல தெய்வத்தின் நினைத்து ஏற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 41 நாட்கள் நீங்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உங்களுக்கு குலதெய்வத்தால் ஏற்பட்ட மன வருத்தங்கள் அனைத்தும் நீங்கி நல்ல வாழ்க்கை அமையும்.
இதையும் படிக்கலாமே:ஆவணி முதல் ஞாயிறு வழிபாடு
குலதெய்வம் என்றாலே அது சக்தி மிகுந்த தெய்வம். அந்த தெய்வத்தின் அருளை பெறுவதற்கு ஏற்றக்கூடிய இந்த தீபத்தை சக்தி வாய்ந்த தீபமாக கருத வேண்டும். முழு நம்பிக்கையுடன் இந்த தீபத்தை ஏற்றி வழிபாடு செய்ய குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.