திருச்செந்தூரின் கடலொரத்தில் செந்தில் நாதன் அரசாங்கம். தேடித் தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம். இன்றைய தினம் திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகம் இனிதே நிறைவடைந்தது. இந்த நாளில் எல்லோராலும் திருச்செந்தூருக்கு சென்று அந்த முருகப்பெருமானின் அருள் ஆசியை பெற முடியாது. சில பேர் இன்று நேரலையாக தொலைக்காட்சியின் வாயிலாக, இந்த கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்து முருகப்பெருமானின் அருளை பெற்றிருப்பீர்கள்.
நீங்கள் முருகப்பெருமானின் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்யக்கூடிய பாக்கியத்தை தவறவிட்டிருந்தாலும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கும் முருகப்பெருமானின் அருள் நிச்சயம் கிடைக்கும். அனைவருக்கும் அந்த திருச்செந்தூர் முருகப்பெருமானின் ஆசி கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவிற்குள் பயணம் செய்வோம்.
இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் வேத மந்திரங்கள் முழங்க இனிதே நிறைவடைந்தது. அந்த திருச்செந்தூர் முருகனை போற்றிப் புகழ்ந்து பாடி, நாமும் அவன் அருள் பெற வேண்டும். இன்று திருச்செந்தூர் முருகனின் அருளை பெறுவதற்கு ஒரு வாய்ப்பு. இன்று மாலை பூஜை அறையில் திருச்செந்தூர் முருகனை வேண்டி விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள்.
முருகனுக்கு ஏதாவது ஒரு இனிப்பு நெய்வேதியம் செய்து வைத்து விட்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பின் சொல்லக்கூடிய இந்த பாடலை பாடி அன்போடு திருச்செந்தூர் முருகப் பெருமானை உங்கள் வீட்டிற்கு அழைத்தால் முருகப்பெருமான் ஓடி வந்து உங்களுக்கான அருள் ஆசியை கொடுத்துவிடுவார்.
இன்றைய தினம் பாட வேண்டிய திருச்செந்தூர் முருகன் திருப்புகழ்
அதல சேட னாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட
அருகு பூத வேதாள மவையாட
மதுர வாணி தானாட மலரில் வேத னாராட
மருவு வானு ளோராட மதியாட
வனச மாமி யாராட நெடிய மாம னாராட
மயிலு மாடி நீயாடி வரவேணும்
கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு
கருத லார்கள் மாசேனை பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது
கனக வேத கோடூதி அலைமோதும்
உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத
உவண மூர்தி மாமாயன் மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ
னுளமு மாட வாழ்தேவர் பெருமாளே.
இன்றைய தினம் இந்த திருப்புகழை பாடி உங்கள் வீட்டிற்கு திருச்செந்தூர் முருகப் பெருமானை அழைத்துப் பாருங்கள். அவ்வளவு தூரத்தில் இருக்கும் முருகப்பெருமான் நீங்கள் பாசத்தோடு அழைத்த உடன், ஓடோடி வந்து உங்கள் வீட்டில் அமர்ந்து உங்களுக்கான அருள் ஆசையை வழங்கி விடுவான். திருச்செந்தூர் முருகனை உணரும் பாக்கியமும் உங்களுக்கு கிடைக்கும். இன்று மட்டுமல்ல இன்று துவங்கிய 48 நாள் உங்களால் இந்த திருப்புகழை படிக்க முடியும் என்றாலும் படிக்கலாம்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் குலதெய்வ வழிபாடு
என்ன வேண்டி இன்றைய தினம் நீங்கள் திருப்புகழை படிக்க துவங்குகிறீர்களோ அடுத்த 48 நாட்களில் அந்த திருச்செந்தூர் முருகன் அருளால் அந்த வேண்டுதல் நிறைவேறும். பல வருடங்களுக்குப் பின்பு திருச்செந்தூர் முருகனுக்கு கும்பாபிஷேகம் நடந்த இந்த நாளில் இந்த திருப்புகழை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.