- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற 21 நாட்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம்

திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற 21 நாட்கள் செய்ய வேண்டிய வெற்றிலை பரிகாரம்

- Advertisement -

இருவீட்டாரின் சம்மதத்துடன் இருமனங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்தத் திருமணம் சரியான காலத்திலும், சரியான வயதிலும் நடக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். சிலரது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷம் காரணமாக திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு கொண்டிருக்கும். இவ்வாறு திருமணம் தோஷம் உள்ளவர்களுக்கு எவ்வளவு முயற்சித்தாலும் திருமணம் தடைபட்டுக் கொண்டே தான் இருக்கும். இவ்வாறு இவர்களின் தோஷம் நீங்கி திருமணம் விரைவில் நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

marriage
Marriage matching

ஆண், பெண் ஆகிய இருவரில் எவராக இருந்தாலும் திருமண வயது வந்தவுடன் அவர்களின் மனதில் ஒரு ஆசை வந்துவிடும். மற்றவர்களைப் போலவே தனக்கும் விரைவில் திருமணம் ஆக வேண்டும் என்று. ஆனால் பெண் கிடைக்காமல், மணமகன் கிடைக்காமல் இவர்களது திருமணம் கை கூடாமல் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும். இவ்வாறு திருமண வயதை தாண்டி செல்வதும் ஒருவகை தோஷம்தான்.

- Advertisement -

இவ்வாறு திருமண தடை உள்ளவர்கள் அவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்து அதிலுள்ள தோஷத்திற்கான தோஷ பரிகார பூஜை செய்ய வேண்டும். அப்படி முடியாதவர்கள் தொடர்ந்து இருபத்தி ஏழு வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு நெய் விளக்கு எற்றி பூஜை செய்து வந்தாலும் திருமண தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

dhurgai Amman

அவ்வாறு செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அரிந்து, அதன் சாறைப் பிழிந்து, உட்புறமாகத் திருப்பி கொண்டு அகல் போன்று செய்து கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, அதனுள் முக்கூட்டு எண்ணெய் ஊற்ற வேண்டும்.

- Advertisement -

அதாவது நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்று எண்ணெய்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் தீக்குச்சியினால் விளக்கு ஏற்றாமல் ஓர் ஊது பத்தியை பயன்படுத்தி விளக்கின் தீபத்தை ஏற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ராகு காலத்தில் இந்த பூஜையை செய்து வர திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.

vetrilaai

வெற்றிலை பரிகாரம்:
இருபத்தியோரு விரல் மஞ்சளை எடுத்துக் கொண்டு அதில் ஒவ்வொரு மஞ்சளையும் ஒரு வெற்றிலையில் வைத்து சுருட்டி கொண்டு மஞ்சள் நிற நூல் வைத்துக் கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு இருபத்தியோரு விரல் மஞ்சளையும் வெற்றிலையை வைத்து சுற்றி கட்டிக் கொண்டு அவை அனைத்தையும் ஒரு மஞ்சள் நிற நூலை வைத்து மாலையாக செய்து கொள்ள வேண்டும்.

Hindu Marriage

பின்னர் ராகு கால நேரத்தில் இந்த மாலையை துர்க்கை அம்மனுக்கு சாற்றி, நெய் விளக்கு ஏற்றி, திருமண தடை நீங்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து இருபத்தியோரு வாரங்கள் செய்து வர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர திருமணத்தடை நீங்கி விரைவில் திருமண பத்திரிக்கை அடிக்கும் சூழ்நிலை உண்டாகும்.

சற்று முன்