- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருமண தடையை நீக்கும் குரு பரிகாரம்

திருமண தடையை நீக்கும் குரு பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பலவிதமான சுபகாரியங்கள் நடைபெறுவது உண்டு. இருப்பினும் உற்றார் உறவினர் அனைவரையும் அழைத்து செய்யக்கூடிய ஒரு சுபகாரியமாக திருமணம் திகழ்கிறது. ஒருவருடைய வாழ்க்கையில் திருமணம் தான் திருப்புமுனையாக அமையும் என்று கூறியும் கேள்விப்பட்டிருப்போம். திருமணத்திற்கு முன்பு வரை சிறு பிள்ளைகளாக இருக்கக்கூடியவர்கள் உலக நடவடிக்கையை புரிந்து கொள்ளாத விளையாட்டு தனத்துடன் இருப்பவர்கள் கூட திருமணமான பிறகு பொறுப்புடனும் குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனும் மாறி முழு மனிதனாக திகழ்வார்கள்.

அப்படிப்பட்ட திருமணம் நடைபெறுவதற்குரிய வயதில் நடைபெறாமல் தள்ளிச் செல்லும் பொழுது சம்பந்தப்பட்ட நபருக்கும் சரி அவருடைய குடும்பத்தாருக்கும் சரி கஷ்டமான ஒரு நிலையாகவே இருக்கும். திருமணம் நடைபெறுவது தள்ளிப் போவது அல்லது திருமண தடைகள் உண்டாவதற்கு முக்கியமான காரணமாக திகழப்படுபவர் குருபகவான். குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். ஒருவருடைய ஜாதகத்தில் குரு சரியான இடத்தில் பலமாக இருந்தார் என்றால் அவருக்கு அனைத்து விதமான சுப காரியங்களும் எந்தவித தடையும் இல்லாமல் நடைபெறும் என்றும் ஜோதிட ரீதியாக கூறுவது உண்டு. அப்படிப்பட்ட குருவின் பலத்தை பெற்று திருமண தடையை நீக்குவதற்கு செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்

- Advertisement -

திருமண தடை நீக்க குரு பரிகாரம்

இந்த பரிகாரத்தை வியாழக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். வியாழக்கிழமை அன்று சூரிய உதயம் ஆன பிறகு இரண்டு ஸ்பூன் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரே ஒரு குங்குமப்பூவை போட்டு நன்றாக கலந்து அதை உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 21 முறை அல்லது 11 முறை கூற வேண்டும். பிறகு இந்த பாலை அப்படியே எடுத்துக்கொண்டு அருகில் எந்த இடத்தில் அரசமரம் இருக்கிறதோ அங்கு சென்று அந்த அரச மரத்தடியில் இந்த பாலை ஊற்றிவிட்டு அரச மரத்தை 5 முறை வலம் வந்து உங்களுடைய திருமணம் விரைவில் நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து வணங்கி விட்டு வர வேண்டும்.

இப்படி தொடர்ச்சியாக ஐந்து வாரங்கள் வியாழக்கிழமை தோறும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது குரு பலம் அதிகரிக்கும். குரு பலம் அதிகரிப்பதால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் யோகமும் உண்டாகும். மேலும் வியாழக்கிழமை தோறும் ஆலயத்தில் இருக்கக்கூடிய அர்ச்சகருக்கு, குருக்களுக்கு அல்லது நம்முடைய குருமார்களுக்கோ நம்மால் இயன்ற பணிவிடைகளையும் தான தர்மங்களையும் செய்வதன் மூலம் குருவின் அருளை பெற முடியும்.

- Advertisement -

மந்திரம்

” ஓம் காத்யாயநி மஹாமாயே மஹாயோகிந் யதிஸ்வரி
நந்த கோபசுதம் தேவிபதிம் மே குரு தே நமஹ “

இதையும் படிக்கலாமே: பணம் முடக்கத்தை நீக்கும் பரிகாரம்

குரு பகவானின் அருளை பெறுவதற்கு உதவக்கூடிய இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு திருமண தடை இருக்கக்கூடிய நபர்கள் செய்து வர விரைவிலேயே திருமணம் கைகூடும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்