ஆடி மாதம் முதல் நாள் அம்மன் கோவிலில் இந்த பொருட்களை தானமாக கொடுத்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கும்.

amman4
- Advertisement -

திருமண வயதை கடந்தும் நீண்ட நாட்களாக திருமணம் ஆகாத பெண்கள் நாளை வரக்கூடிய ஆடி மாத, முதல் நாளை தவிர விடாதீர்கள். நீண்ட நாட்களாக வரன் பார்த்து வருகின்றோம். ஒரு வரன் கூட அமையவே இல்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். ஜாதக கட்டத்தில் தோஷம் உள்ளது. தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்தாகிவிட்டது. இருப்பினும் நல்ல வரன் அமையவில்லை என்பவர்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். திருமணம் ஆகாத ஆண் பிள்ளைகள் உங்கள் வீட்டில் இருந்தால் அந்தப் பிள்ளைக்காக அவர்களுடைய தாய் இந்த பரிகாரத்தை செய்யும் போது நிச்சயமாக நல்ல பலனை கொடுக்கும்.

திருமணம் ஆகாமல் இருக்கக்கூடிய பெண் நாளைய தினம் அதிகாலை வேளையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விட வேண்டும். நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி வேப்பிலையை போட்டு கங்கா! கங்கா! கங்கா! என்று மூன்று முறை உச்சரித்துவிட்டு அந்த தண்ணீரில் தலைக்கு குளித்து விடுங்கள். கங்கா என்பது கங்கா தீர்த்தம். கங்காதேவியை நினைத்து நாளைய தினம் தலைக்கு குளியுங்கள். கங்காதேவியும் ஒரு அம்பாள் தான்.

- Advertisement -

அதன் பின்பு முடிந்த வரை மஞ்சள் நிறத்தில் புடவை உடுத்திக் கொண்டு கோவிலுக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்ய வேண்டும். வெற்றிலை பாக்கு, விரலி மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம், குங்குமம், தாலிக்கயிறு, பூ இந்த பொருட்களை எல்லாம் ஒன்றாக வாங்கிக் கொள்ளுங்கள். வாங்க இந்த பொருட்களை எல்லாம் மொத்தமாக அம்பாள் பாதங்களில் வைத்து அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இந்த பொருட்களை கோவிலுக்கு வரும் பெண்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். எத்தனை பேருக்கு கொடுக்க வேண்டும் என்பது உங்களுடைய சௌகரியம். 3, 5, 11 அதற்கு மேல் எத்தனை பேருக்கு வேண்டும் என்றாலும் நீங்கள் இந்த பொருட்களை எல்லாம் வாங்கி தானமாக கொடுக்கலாம்.

ஒரு தாம்பல தட்டில் ஒரு செட்டாக இந்த பொருட்களை எல்லாம் அடுக்கி கோவிலுக்கு வரக்கூடிய திருமணம் ஆன பெண் பக்தர்களுக்கு இந்த பொருட்களை எல்லாம், திருமணம் ஆகாத பெண்ணின் கையால் தானமாக கொடுக்கச் சொல்லுங்கள். இது ஒரு பரிகாரம். இந்த பரிகாரத்தை கட்டாயமாக செய்து விடுங்கள். இதோடு சேர்ந்து உங்களால் முடிந்தால் ஒரு ஏழை பெண்ணுக்கு புடவை, ரவிக்கை துணி வெற்றிலை பாக்கு மஞ்சள் கயிறை எடுத்து வைத்து தானம் கொடுப்பது மேலும் சிறந்த பலனை கொடுக்கும். (இந்த புடவை தானத்தை ஆடி மாதம் முடிவதற்குள் ஏதாவது ஒரு நாளில் செய்து கொள்ளுங்கள்.)

- Advertisement -

அதாவது திருமணம் ஆன வயதில் மூத்தவர்கள் இருப்பார்கள் அல்லவா. அவர்களுக்கு இந்த தானத்தை கொடுத்து விட்டு, திருமணம் ஆகாத பெண், அவர்களுடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வது சிறப்பான பலனை தரும். ஆனால் இந்த தானத்தை உங்களுக்கு தெரிந்தவர்கள் உங்கள் சொந்த பந்தங்களுக்கு கொடுக்கக் கூடாது. யாரேனும் தெரியாதவர்கள் ஏழையாக இருப்பவர்களுக்கு இந்த தானத்தை செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

இந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று ஏதாவது ஒரு அம்மனுக்கு வேப்பிலையை உங்கள் கையாலேயே கட்டி மாலையாக போட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தாலும் வீட்டில் இருக்கக் கூடிய சுப காரியத்தடை விலகும். நீங்கள் திருமணம் ஆன பெண்ணாக இருந்து உங்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறது என்றால், இந்த ஆடி மாதத்தில் உங்களால் முடிந்த வளையல்களை வாங்கி கோவிலுக்கு வரக்கூடிய சிறிய குழந்தைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.

கண்ணாடி வளையல் வாங்கிக் கொள்ள வேண்டும். குழந்தைகள் அணியும் அளவிற்கு சின்ன சைஸில் வளையல்களை வாங்கி உங்களால் எப்போது முடிகிறதோ அப்போது கோவிலுக்கு சென்று அம்பாளின் பாதங்களில் இந்த வளையலை வைத்து மனம் உருக குழந்தை வரம் வேண்டி, இந்த வளையல் தானத்தை குழந்தைகளுக்கு கொடுங்கள். நிச்சயமாக அடுத்த வருடம் உங்களுடைய மடியிலும் ஒரு குழந்தை தவழும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -