இந்த தண்ணீர் ஒரு சொட்டு உங்களுடைய வீட்டில் விழுந்தால் கூட போதும். உங்கள் வீடு முழுவதும் தெய்வீக வாசம் நிரம்பி வழியும்.

theertham
- Advertisement -

சில பேர் வீடுகளில் கெட்ட வாடையானது வீசிக்கொண்டே இருக்கும். வீட்டை என்னதான் சுத்தம் செய்தாலும் வீட்டில் ஒரு தெய்வ கடாட்சம் இருக்கவே இருக்காது. இப்படிப்பட்ட வீட்டில் இருப்பவர்கள் என்ன முயற்சி எடுத்தாலும் அதில் தோல்வி அடைவார்கள். வீட்டில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து உடல் உபாதைகள், வீண் விரயச் செலவுகள் வந்து கொண்டே இருக்கும். என்னவென்றே தெரியாமல் குடும்பத்தில் நிம்மதி நிலைகுலைந்து போகும். இப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையில் வீட்டில் இருப்பவர்களுடைய மனது எப்போதும் சஞ்சலமாக இருக்கும்.

அதாவது ஏன் இந்த கஷ்டம் என்று புரியாமல் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டு கோயில் கோயிலாகப் போய் சுற்றினாலும் எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்காது. காரணம் இவர்களுக்கு கெட்ட நேரம் நடப்பது தான். வீட்டை பிடித்த தரித்திரத்தை கெட்ட நேரத்தை எப்படி விரட்டி அடிப்பது.

- Advertisement -

ஒரு சுலபமான வழி உள்ளது. அதை இப்போது தெரிந்துகொள்வோம். கோவில்களில் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய திருமஞ்சனப் பொடி என்ற ஒன்றை பயன்படுத்துவார்கள். தெய்வீக ஆற்றல் நிறைந்த இந்த பொடி எல்லா பூஜை பொருட்கள் விற்கும் கடையிலும் கிடைக்கும். அதாவது அபிஷேகப் பொருட்கள் விற்கக்கூடிய கடைகள் இருக்கும். அந்த கடையில் கேட்டால் கண்டிப்பாக சுலபமாக நமக்கு இந்த திருமஞ்சன பொடி கிடைத்துவிடும்.

அந்த பொடியை வீட்டிற்கு வாங்கி வரவேண்டும். வீட்டை நன்றாக துடைத்து சுத்தம் செய்துவிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, வீடு முழுவதும் மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு விடுங்கள். ஒரு சொம்பு தண்ணீரில் கொஞ்சமாக திருமஞ்சனப் பொடி ஒரு கைப்பிடி, கல் உப்பு 1 கைப்பிடி, பச்சை கற்பூரம் சிறியது போட்டு கரைத்து உங்கள் வீடு முழுவதும் இதைத் தெளித்து விடலாம்.

- Advertisement -

இந்த தண்ணீரை உங்கள் வீட்டில் இருக்கும் நபரின் தலையிலும் லேசாக தெளித்து விடலாம். இப்படி செய்தால் உங்கள் வீடு தெய்வீக கடாட்சம் நிறைந்ததாக உடனடியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்க வீட்டை பிடித்த கண் திருஷ்டி கெட்ட சக்தி எதுவாக இருந்தாலும் வீட்டில் இருந்து வெளியேறி விடும்.

சில பேருக்கு வேலை செய்ய தோணவே தோணாது. தூக்கம் தூக்கமாக வரும். சோம்பேறித்தனமாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுடைய தலையில் இந்த தண்ணீரை தெளித்துக் கொள்ளலாம். குழந்தைகள் சில சமயம் என்னவென்றே தெரியாமல் அழுதுகொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் லேசாக இந்த தண்ணீரை குழந்தைகள் தலையில் தெளித்து விடலாம்.

அப்படி இல்லை என்றால் இந்த தண்ணீரை கொஞ்சமாக குளிக்கின்ற தண்ணீரில் ஊற்றி கலந்து தலைக்கு குளிக்கலாம். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -