திருநரையூர் அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் சிறப்புக்கள்

saneeswaran-temple
- Advertisement -

மனிதனாக பிறந்த அனைவருக்குமே நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்கிற விருப்பம் இருப்பதில் தவறேதுமில்லை. ஜோதிடத்தின் படி ஒரு மனிதனின் ஆயுட்காலத்தை தீர்மானிக்கும் கிரகமாக சனி பகவான் இருக்கிறார். ஏழையாக இருந்தாலும் சரி, பல நாடுகளை ஆளும் பேரரசனாக இருந்தாலும் சரி சனி பகவான் தான் வழங்கும் பலன்களில் பாரபட்சம் காட்டுவதில்லை. அப்படிப்பட்ட சனி பகவான் தனது குடும்பத்தோடு கோவில் கொண்டிருக்கும் “திருநரையூர் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில்” பற்றிய சில சிறப்பு தகவல்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

அருள்மிகு ராமநாதர் கோயில் வரலாறு
1000 ஆண்டுகளுக்குமேல் பழமையான இக்கோயில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலின் இறைவனான சிவபெருமான் ராமநாதர் என்றும், இறைவி பர்வதவர்த்தினி எனவும் அழைக்கப்படுகின்றனர். தல புராணத்தின் படி அயோத்தியை ஆண்ட தசரத சக்ரவத்தி தன்னை பாதித்திருக்கும் நீண்ட கால நோய் தீர, இத்தலத்தில் இருக்கும் குளத்தில் நீராடி இங்கிருக்கும் இறைவனையும், சனி பகவானையும் வழிபட்ட போது தனது நோய் நீங்க பெற்றார்.

- Advertisement -

தசரதரின் மைந்தனான ஸ்ரீ ராமரும் ராவண யுத்தம் முடிந்த பிறகு, தசரதர் வழிபட்ட இக்கோவிலை பற்றியறிந்து இங்கு வந்து புனித நீராடி, மண்ணாலான ஒரு லிங்கத்தை செய்து வழிபட்டு இறைவனை வழிபட்டு நலம் பெற்றார். அவரின் அணுக்க தொண்டரான அனுமனும் இங்கிருக்கும் சிவபெருமானை பூஜை செய்து ஒரு லிங்கத்தை ஸ்தாபித்தார். அந்த லிங்கம் அனுமந்த லிங்கம் என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வணக்கப்படுகிறது.

ராமநாதர் கோவில் சிறப்பு:

- Advertisement -

இந்த ராமநாதர் கோயில் சனி பகவானுக்குரிய ஒரு சிறந்த பரிகார கோவிலாக கருதப்படுகிறது. மேலும் இக்கோயிலில் வேறெங்கும் காணமுடியாத அதிசயமாக சனி பகவான் தனது இரு மனைவியர்களான “மந்தா” தேவி, “ஜேஷ்டா” தேவியுடனும், தனது மகன்களான “குளிகன், மாந்தி” ஆகியோருடனும் காட்சியளிக்கிறார். மூலவருக்கு கொடிமரம் இல்லாமல் சனி பகவானுக்கு கொடிமரம், பலிபீடம் மற்றும் காக வாகனம் இருப்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் இருக்கும் எப்பேர்ப்பட்ட சனிதோஷங்களையும் நீக்கவும், நீண்ட நாட்கள் நோய்கள் தீரவும், சகல ஐஸ்வரியங்கள் கிடைக்கவும் சிறந்த பரிகார தலமாக இது இருக்கிறது. தங்களின் வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஸ்வாமிக்கும், அம்பாளுக்கும் வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

கோயில் அமைவிடம்

- Advertisement -

அருள்மிகு ராமநாதர் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் திருநரையூர் என்கிற ஊரில் அமைந்திருக்கிறது. இந்த ஊருக்கு செல்ல மாவட்டத்திலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 7 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு ராமநாதர் திருக்கோயில்
திருநரையூர்
தஞ்சாவூர் மாவட்டம் – 612 620

தொலைபேசி எண்

தொலைபேசி எண் இல்லை

இதையும் படிக்கலாமே:
உவரி சுயம்புலிங்க ஸ்வாமி திருக்கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thirunaraiyur temple in Tamil.

- Advertisement -