உங்கள் வீட்டில் திருஷ்டிக்காக விநாயகர் படம் அல்லது சிலை வைத்து இருக்கிறீர்களா? அப்படின்னா இதை செய்ய மறக்காதீர்கள்!

vinayagar-thirusti

திருஷ்டிக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் அல்லது படங்கள் விசேஷமான சக்திகளைக் கொண்டுள்ளது. இந்த சக்திகள் பெரும்பாலும் நம்மையும், நம் வீட்டையும் காக்க பல்வேறு துஷ்ட சக்திகளை தன்னுள் ஈர்த்துக் கொள்கிறது. இதனால் இதற்கு உரிய பரிகாரங்களை செய்யும் பொழுது திருஷ்டி தோஷங்கள் முழுமையாக நீங்கப் பெறுகின்றன. படங்களையும், சிலைகளையும் வாங்கி வைத்ததோடு சரி என்று விட்டு விட கூடாது. திருஷ்டி தோஷம் நீங்க அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kan-thirusti-vinayagar

திருஷ்டிக்காக பல்வேறு வகையில் விநாயகர் சிலைகள் மற்றும் படங்கள் வீட்டில் மாட்டி வைப்பது உண்டு. அந்த வகையில் முதலாவதாக நாம் பார்ப்பது கண் திருஷ்டி விநாயகர் படம். வீட்டின் தலைவாசல் பகுதியில் மேலே கண் திருஷ்டி விநாயகர் படத்தை மாட்டி வைப்பது வழக்கம். இதன் மூலம் வீட்டிற்குள் வரும் திருஷ்டி தோஷங்கள் தடுக்கப் படுகின்றன என்பது நம்பிக்கை. திருஷ்டி தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் முழுவதையும் திருஷ்டி விநாயகர் படம் தன்னுள்ளே கிரகித்துக் கொள்கிறது.

அடுத்ததாக புதிய வீடு கட்டுபவர்கள் விநாயகர் படம் அல்லது கண் திருஷ்டி விநாயகர் படம் பொறித்த டைல்ஸ்களை மாட்டி வைப்பது வழக்கம். வீட்டின் முன்னே இருக்கும் இந்த கண் திருஷ்டி விநாயகர் டைல்ஸ் இயல்பாகவே திருஷ்டி தோஷங்களை தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்கின்றன.

vinayagar-abishegam

அது போல் வீட்டின் முன் பல்வேறு வீடுகளில் விநாயகர் சிலைகள் கூட வைப்பது வழக்கம். படங்களாக அல்லாமல் சிலைகளாக வைக்கப்படும் பொழுது அதற்குரிய பூஜைகளையும் நாம் செய்வது அவசியமாகும். சிலைகளை வைத்ததோடு மட்டும் விட்டு விட்டால் அதுவும் தோஷமாக மாறி விடும் ஆபத்து உண்டு. ஆகவே சிலைகள் வைப்பவர்கள் கட்டாயம் அதற்குரிய அபிஷேகங்களை செய்வது நலமாகும்.

- Advertisement -

விநாயகர் சிலையை திருஷ்டிக்காக வைத்திருப்பவர்கள் கட்டாயம் அதற்குரிய பூஜைகள் செய்ய வேண்டும். அப்படி பூஜைகள் செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் தினமும் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் ஆவது செய்ய வேண்டும். எதுவும் செய்யாமல் ஒரு கேட் மட்டும் போட்டு மூடி வைத்து விட்டால் நிச்சயம் அந்த இடத்தில் திருஷ்டிகள் அதிகரித்து பல்வேறு கெட்ட அதிர்வலைகளை உண்டு பண்ணி விடும். இதன் மூலம் வீட்டில் தேவையில்லாத பிரச்சனைகள், வம்பு வழக்குகளும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

thirusti

திருஷ்டிக்காக செய்யப்படும் எந்த ஒரு பொருளும் அதிக நாட்கள் நீடிக்க வைத்திருக்கக் கூடாது. திருஷ்டிக்காக கற்றாழை கட்டுவது, பச்சை மிளகாய், எலுமிச்சை சேர்த்துக் கட்டுவது போன்ற விஷயங்களை செய்வது உண்டு. அதனை 48 நாட்களுக்கு ஒரு முறையாவது கட்டாயம் மாற்றி விட வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் அப்படியே அழுகிப் போகும் வரை விட்டு வைத்து விட்டால் அதன் மூலம் கெட்ட அதிர்வலைகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

wall-tile

கண் திருஷ்டி கணபதி படம், டைல்ஸ், சிலை என்று எது வைத்தாலும் அதற்குரிய அபிஷேகம் செய்து திருஷ்டி தோஷங்களை கழித்துக் கொள்ள வேண்டும். அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். இதன் மூலம் திருஷ்டிகளை தன்னுள்ளே கிரகித்துக் கொண்டு இருக்கும் கண் திருஷ்டி கணபதி தூய்மை பெறுகிறார். கண் திருஷ்டி கணபதி படம் வைத்திருப்பவர்கள் அதனை தூசி படுமாறு வைத்திருக்கக் கூடாது. வாரம் ஒரு முறையாவது தூசி தட்டி அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு கொள்ளுங்கள் நல்லதே நடக்கும்.