உங்களுடைய வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் படுபவர்களால் எந்த திருஷ்டியும் ஏற்படாமல் இருக்க, சனி தோஷம் நீங்க வீட்டில் இப்படி செய்து பாருங்கள்.

sani-barli-rice
- Advertisement -

ஒருவருடைய வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுவது கண் திருஷ்டியாக மாறக்கூடும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். அதனால் தான் நாம் ஏதாவது சாதிக்கும் பொழுது, அல்லது நமக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் பொழுது பெரியவர்கள் திருஷ்டி சுற்றி போடுகிறார்கள். யாரும் எளிதாக வளர்ச்சியை கண்டு விடுவதில்லை. அதற்காக பல வருட காலம் பல போராட்டங்களை சந்தித்து இருப்போம். அதையெல்லாம் யோசிக்காமல் நம்மைப் பார்த்து பொறாமைப்படும் அவர்களை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

success

இவர்களுடைய கண்பார்வை கண்திருஷ்டியாக மாறக்கூடும். இந்த திருஷ்டிகள் நீங்க வீட்டில் இப்படி செய்து பார்க்கலாம். அதுபோல் சனி தோஷம் இருப்பவர்களுக்கு இயல்பாகவே திருஷ்டிகள் ஏற்படும். சனி கொடுக்க யார் தடுப்பார்? என்கிற ஜோதிட பழமொழி ஒன்று உண்டு. சனி பகவான் கெட்டது செய்தாலும், நல்லது செய்தாலும் அதிகமாகவே செய்வார்.

- Advertisement -

அதனால் சனி தோஷம் இருப்பவர்கள் திடீரென அதிர்ஷ்டத்தையும், திடீரென தோல்வியையும் சந்திப்பார்கள். எந்த நேரத்தில் நமக்கு எது நடக்கும் என்பது தெரியாது. இதனால் ஏற்படும் திருஷ்டிகள் நீங்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். அதைப் பற்றிய விரிவான தகவல்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

sani-baghavan

நம் மேல் திருஷ்டி இருக்கிறது என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது? நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் நாம் நன்றாக தான் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள் என்று நம்புவது மூடத்தனம். இந்த உலகத்தில் மற்றவர்களை காட்டிலும், நம்முடன் இருப்பவர்கள் தான் நம் முதுகில் அதிகமாக குத்துவார்கள். வெளியில் தெரியும் முகம் ஒன்றாகவும், உள்ளே இருக்கும் முகம் வேறொன்றாகவும் இருக்கும். இதனை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதல்ல என்றாலும், ஏதாவது ஒரு சமயத்தில் நம்மால் அதனை உணர முடியும். அந்த சமயத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் ஒவ்வொருவரும் தங்களுடைய வீட்டில் திருஷ்டி போக எளிதாக இப்படி செய்து பார்க்கலாம். மஞ்சள் தோய்த்த வெள்ளை நிற துணி, அல்லது மஞ்சள் துணியில் சிறிதளவு பார்லி அரிசியை போட்டுக் கொள்ள வேண்டும். பார்லி அரிசியில் திருஷ்டியை ஈர்க்கும் சக்தி உள்ளதாக சாஸ்திர குறிப்புகள் கூறுகின்றன. இதனை ஒரு சிறிய முடிப்பாக முடிந்து கொண்டு வீட்டின் கிழக்கு மூலையில் வைத்து விடுங்கள்.

barli-rice

மறுநாள் காலையில் அந்த துணியில் இருக்கும் அரிசியை மட்டும் ஓடும் நீர்நிலைகள், கிணறு அல்லது செடிகளில் யாருடைய கால்களிலும் மிதி படாத வண்ணம் போட்டு விடலாம். இப்படி ஒவ்வொரு திங்கள் கிழமை அன்றும் செய்து கொண்டு வந்தால் உங்களுடைய வளர்ச்சியில் தடைகள் இல்லாமல் சிறப்பான முன்னேற்றத்தை காண முடியும்.

- Advertisement -

Sani Bagavan

சனி தோஷத்தால் பாதிப்பு உள்ளவர்கள் சனிக்கிழமையில் ஏழை எளியவர்களுக்கு நீல நிற வஸ்திரத்தை தானம் செய்யலாம். நீங்கள் முதலாளிகளாக இருந்தால், உங்களுக்கு கீழ் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு இந்த தானத்தை செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சனி தோஷம் நீங்கி, கஷ்டங்கள் குறைந்து நிம்மதி கிடைக்கும். ஒரு சில சமயங்களில் உங்களுக்கு திடீரென வரும் அதிர்ஷ்டம் ஒரு விதமான மன பயத்தை ஏற்படுத்தும் பொழுது இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே
சமையலறையில் இருக்கக்கூடாத 5 பொருட்கள் என்ன? தரித்திரம் தரும் இந்த 5 பொருட்கள் சமையலறையில் இருந்தால் உடனே இடத்தை மாற்றி விடுங்கள்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -