கெட்ட எண்ணம் உள்ளவர்களின் பொறாமை பார்வைகள் உங்கள் மீது படாமல் இருக்க வீட்டு வாசலில் வெட்டிவேரை இப்படித்தான் கட்டி வைக்க வேண்டும் தெரியுமா?

vetti-ver-vasal
- Advertisement -

எல்லோருமே நம்மை நல்ல கண்ணோடு பார்ப்பார்கள் என்று சொல்லி விட முடியாது. இன்று நம்மை சுற்றி இருக்கும் பலரும் பொறாமை கண்களோடு நம்மை அணுகுகின்றனர். இதனால் நமக்கு வரக்கூடிய நன்மைகள் அங்கு தடைபடுகிறது. ஒரு படி மேலே ஏறினால், இரண்டு படி கீழே இறங்க வேண்டி இருக்கிறது. இது போல பொறாமை, திருஷ்டிகள் நம்மை நெருங்காமல் இருக்க நம் வீட்டு வாசலில் வெட்டிவேரை இப்படித்தான் கட்டி வைக்க வேண்டும். இதை பற்றிய ஆன்மீக தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

வெட்டிவேர் வாசம் ஆன்மீக ரீதியாக நல்ல சக்திகளை ஈர்க்கக் கூடிய ஒரு தன்மை கொண்டுள்ளது. வெட்டிவேரில் இருக்கும் குணாதிசயங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் மிகுந்த நன்மைகளை செய்யக் கூடியது ஆகும். மனதில் இருக்கும் தீய எண்ணங்களை அடியோடு அழிக்க கூடிய சக்தி இந்த வெட்டிவேரின் வாசத்திற்கு உண்டு.

- Advertisement -

அது போல வெட்டிவேர் இருக்கும் இடங்களில் தீய சக்திகள் அணு அளவும் நெருங்கக் கூட செய்யாது. வெட்டி வேருடன் எலுமிச்சை பழத்தை சேர்த்து நாம் வீட்டு வாசலில் கட்டி வைத்தால் துஷ்ட சக்திகள், துர்தேவதைகள், கெட்ட விஷயங்கள் எதுவும் நம்மை அணுகாது. முக்கியமாக நம்மை தீய எண்ணங்களோடு, பொறாமைப் பார்வையோடு பார்ப்பவர்கள் உடைய திருஷ்டி பார்வைகள் நொறுங்கி விடும்.

அதீத சக்தி வாய்ந்த இந்த வெட்டிவேர் நாட்டு மருந்து கடைகள் அல்லது பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மலிவான விலைக்கு கிடைக்கும். ஒரு கொத்து வெட்டிவேரை வாங்கி வந்து வைத்துக் கொள்ளுங்கள். நாற்பத்தி எட்டு நாட்களுக்கு நீங்கள் கட்டி வைக்கும் இந்த வெட்டி வேருக்கு அதீத சக்தி இருக்கும். அதன் பிறகு சக்தி குறைய ஆரம்பித்துவிடும். எனவே நாற்பத்தி எட்டு நாட்களுக்கு ஒரு முறை இது போல் செய்ய வேண்டும்.

- Advertisement -

வெட்டிவேர் பரிகாரம் செய்யும் பொழுது நீங்கள் பௌர்ணமி அல்லது அமாவாசை தினங்களில் செய்வது மிகவும் விசேஷமானது. ஏனென்றால் அந்த தினங்களில் பிரபஞ்சத்தின் சக்தி அதிகமாக இருக்கும். இதனால் அதற்கு மிகுந்த சக்தி ஏற்படும். பவுர்ணமி அல்லது அமாவாசை நாளில் வெட்டி வேரில் ஒரு எலுமிச்சம் பழத்தை வைத்து மடித்துக் கொள்ள வேண்டும். பின்பு எலுமிச்சை பழம் கீழே விழாதவாறு மஞ்சள் நூல் கொண்டு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும். இதை பன்னீர் கொஞ்சம் தெளித்து வைப்பது சிறப்பிற்கு உரியது.

வாசம் மிகுந்த வெட்டிவேர், பன்னீர் மற்றும் எலுமிச்சை பழத்தை இது போல் செய்தால் எதிர்மறை எண்ணங்களும் ஒழியும். பின்பு எல்லோருக்கும் தெரியும் படியாக அதில் கொஞ்சம் மஞ்சள் மற்றும் குங்குமத்தை பொட்டாக வைக்க வேண்டும். பின்பு இதை வீட்டு தலைவாசலில் நடுவே தலையில் இடிக்காதபடி கட்டி வைக்க வேண்டும். உள்ளே போய் வரும் பொழுது குடும்பத்தினர் யாருடைய தலையும் அதில் இடிபடக் கூடாது என்பதை முக்கியமாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு ஒரு முறை செய்து வைத்து விட்டால் நாற்பத்தி எட்டு நாட்களுக்கு எந்த விதமான தீய சக்திகளும் வராமல் பொறாமை பார்வைகளும், திருஷ்டி தோஷங்களும் உங்களை அணுகாது பாதுகாப்பாக உணரலாம்.

- Advertisement -