சமையலறையில் இருக்கும் இந்த 2 பொருட்களை வீட்டில் இப்படி மட்டும் வைத்து பாருங்கள்! பணத்திற்கு பஞ்சமே வராது!

salt-lemon-cash

ஒருவருடைய வீட்டில் பணம் நிரந்தரமாக தங்குவதற்கு அந்த வீட்டில் எந்த விதமான திருஷ்டி தோஷங்களும் இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு வகையில் நமக்கு திருஷ்டி தோஷங்கள் இருந்தால் நாம் என்ன தான் உழைத்து சம்பாதித்தாலும், கஷ்டப்பட்டாலும் பணம் என்பது நம்மிடம் நிலைக்காமல் போய்விடும். திருஷ்டிக்கு அத்தகைய மாபெரும் சக்தி உண்டு. ‘கல்லடி பட்டாலும் படலாம், கண் அடி படக்கூடாது’ என்று கூறுவார்கள். அது இதற்காக தான். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளும், பண ரீதியான பிரச்சினைகளும் திருஷ்டிகள் இருக்கும் பொழுது ஒருவருக்கு ஏற்படுகிறது.

lemon

இதிலிருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வீட்டில் இப்படி எளிமையான பரிகாரம் ஒன்றை செய்யலாம். இதற்கு நமக்கு மகாலட்சுமியின் ஸ்வரூபமாக விளங்கும் கல் உப்பு மற்றும் ஆன்மீகத்திற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் தேவ கனி என்று கூறப்படும் எலுமிச்சையும் போதும். இதை வைத்து என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

கல் உப்பு மற்றும் எலுமிச்சை இந்த இரண்டு ஆன்மீக பொருட்களும் மிகுந்த சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த இரண்டு பொருள்களும் நல்ல விஷயங்கள் செய்யவும் பயன்படுகிறது! இதை வைத்து பில்லி, சூனியம், ஏவல் போன்ற கெட்ட விஷயங்களையும் செய்யப் பயன்படுத்துகிறார்கள். எதனையும் உட்கிரகிக்கும் ஆற்றல் இதற்கு இருப்பதால் இந்த இரண்டு விஷயங்களுக்கும் இந்த இரண்டு பொருட்கள் பயன்படுகிறது.

salt1

இதை வீட்டில் இப்படி வைக்கும் பொழுது வீட்டில் இருக்கும் கெடு திருஷ்டிகள், கெட்ட சக்திகள் அனைத்தும் வீட்டை விட்டு வெளியேறி விடுவதாக ஐதீகம் உண்டு. அதன் பிறகு வீட்டில் பண வரவு ஏற்படுவது தடை உண்டாவது இல்லை, மென்மேலும் பணமானது பெருகிக் கொண்டே இருக்கும். ஒரு சிறிய தட்டில் கல் உப்பை பரப்பி கொள்ளுங்கள். அதன் மீது ஒரு எலுமிச்சை கனியை நான்காக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதாங்க! இதை தினமும் அல்லது வாரம் ஒரு முறை செய்வது மிகுதியான பலன்களை நமக்கு கொடுக்கும்.

ஒரு நாள் முழுவதும் நம்முடைய வீட்டில் இந்த பொருட்கள் அப்படியே இருக்க வேண்டும் இதனை மற்றவர்களுடைய பாதம் படாத இடத்தில் தனியே ஒதுக்குப்புறமாக பத்திரமாக வைக்க வேண்டும். மறுநாள் இதனை வீட்டில் இருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும். யாருடைய கால்களிலும் படாத இடத்தில் கொட்டி விட வேண்டும். உப்பை தண்ணீரில் கரைத்து ஊற்றி விடலாம். இதனை தினமும் செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை செய்யலாம். வியாழன் கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்வது கூடுதல் பலனை கொடுக்கும் என்பதால் அந்த கிழமையில் இப்படி செய்து வைக்கலாம்.

kan-thirusti

வீட்டில் இருக்கும் கெட்ட அதிர்வலைகளை நீக்கி, நமக்கு நல்ல அதிர்வலைகளை இந்த பரிகாரம் உண்டு பண்ணும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. தேவ கனியான எலுமிச்சைக்கு கெட்ட சக்திகளை கிரகிக்கும் ஆற்றல் உண்டு. அதனால் தான் அதை ஏவலுக்கு பயன்படுத்துகிறார்கள். கல் உப்பு திருஷ்டிகளை கிரகித்து வீட்டை விட்டு வெளியேற்றி விடும். இதிலிருந்து உண்டாகக்கூடிய அதிர்வலைகள் நமக்கு கெட்டதை நீக்கி நல்லதை கொடுக்கும். நம் வீட்டில் இருக்கும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் புதிதாக பிறக்கும்.