சிறப்பான திருவாதிரை ஏகாதசியான இன்று இதை எல்லாம் செய்தால் பல அறிய பலன்களை பெற்று சிறப்பாக வாழலாம்.

perumal
- Advertisement -

ஒரு மனிதனின் ஆன்ம பலத்தை பன்மடங்கு அதிகரிக்க செய்ய வழி வகுக்கும் விரதம் ஆவணி மாதம் தேய்பிறை ஏகாதசி தினத்தில் கடைபிடிக்கும் விரதமாகும். இந்த ஆவணி தேய்பிறை ஏகாதசி தினம் காமிகா ஏகாதசி என அழைக்கப்படுகின்றது. சிவபெருமானுக்குரிய பிரதோஷ தினங்கள் திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் வருவது எப்படி விசேஷமானதாக கருதப்படுகின்றதோ, அதே போன்று ஏகாதேசி தினங்கள் “பூசம், புனர்பூசம், திருவோணம், ரோகிணி” போன்ற நட்சத்திர தினங்களில் வருவது மிகவும் சிறப்பான ஒரு சுபதினமாக கருதப்படுகின்றது. அதிலும் இன்றைய ஏகாதேசி தினம் திருமாலின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் மனித உருவில் உலகில் அவதரித்து, “விசிஷ்டாத்வைதம்” என்கிற கொள்கையின் அடிப்படையில் வைணவத்தை நிலை நிறுத்திய வைணவ ஆச்சாரியார் “ராமானுஜர்’ அவதரித்த “திருவாதிரை” நட்சத்திரம் மற்றும் மனிதர்களுக்கு செல்வத்தையும், ஞானத்தையும் அளிக்கக்கூடிய ‘குரு” பகவானுக்குரிய வியாழக்கிழமையில் “புனர்பூசம்” நட்சத்திரம் என இரண்டு நட்சத்திரங்களின் சேர்க்கை கொண்ட மிக அற்புதமான தினமாக உள்ளது. எனவே இந்த நன்னாளில் ஏகாதசி விரதம் மேற்கொள்வது எப்படி? அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

ramanujar

பல சிறப்புகள் வாய்ந்த ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு, உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி தாயார் படங்களுக்கு வாசனை மிகுந்த பூக்கள் சாற்றி, பழம் மற்றும் சர்க்கரை பொங்கல், புளியோதரை போன்ற ஏதேனும் ஒரு உணவு வகையினை நைவேத்தியம் செய்து, பெருமாள் மற்றும் லட்சுமி தாயாருக்கு தீப, தூப ஆராதனைகள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

- Advertisement -

உடல்நிலை நன்கு இருப்பவர்கள் இன்றைய நாள் முழுவதும் உணவு ஏதும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து இந்த ஏகாதசி விரதம் மேற்கொள்வது சிறந்தது. நாள் முழுவதும் உணவு உட்கொள்வதற்கு பதிலாக துளசி தீர்த்தத்தை பிரசாதமாக பருகி விரதம் மேற்கொள்ளலாம்.

thulasi chedi

வேலைக்கு செல்வதால் உண்ணாமல் விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள் காலை ஒரு வேளை மட்டுமாவது எந்த வகை உணவும் உண்ணாமல் விரதம் கடைப்பிடித்து, மதியம் முதல் உணவு உட்கொள்ளலாம். உணவு சாப்பிட்டே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்கள் இன்று காய்கறிகள் கலந்து செய்த உணவுகளை தவிர்த்து, பழங்கள் மற்றும் சர்க்கரை கலக்காத பால் உட்கொண்டு விரதம் அனுஷ்டிக்கலாம்.

- Advertisement -

உங்கள் வீட்டில் சிறிய அளவு பெருமாள் விக்ரகங்கள் இருந்தால், துளசி இலைகளை கொண்டு அந்த விக்ரகங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யலாம். இதனால் உங்களுக்கு லட்சுமி தேவியின் அருட்கடாட்சம் கிடைத்து, உங்களின் செல்வ நிலை உயரும். பெருமாள் விக்கிரகம் இல்லையென்றாலும் பெருமாளின் படம் மட்டும் இருந்தால் அந்தப் படத்திற்கும் மேற்சொன்ன முறையில் அர்ச்சனை செய்து வழிபடலாம். இதன் பிறகு மந்திர சக்தி நிறைந்த பெருமாளின் திருப்பெயர்களை கூறும் “விஷ்ணு சகஸ்ர நாமம்” துதித்து வழிபாடு செய்து பூஜையை நிறைவு செய்யலாம். இன்று காலை, மதியம், மாலை, இரவு என நான்கு வேளையும் விஷ்ணு சஹஸ்ரநாமம் துதித்து வழிபடுவதால் கொடிய நோய், தீராக் கடன், எதிர்பாரா ஆபத்துகள் போன்ற எந்த விதமான பாதிப்புகளும் உங்களுக்கு ஏற்படாமல் தடுக்கும்.

perumal-1

இன்று காலை முதல் மாலை வரை மேற்சொன்ன முறையில் ஒரு விரதம் மேற்கொண்டவர்கள் மாலை வேளையில் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாள் மற்றும் தாயாருக்கு துளசி மாலை சாற்றி, நெய் தீபம் ஏற்றி உங்களின் ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி விரதத்தை நிறைவு செய்யலாம். விரதம் முடித்த பிறகு பெருமாளுக்கு வைத்த நைவேத்தியங்களை நீங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பிரசாதமாக சாப்பிடலாம்.

- Advertisement -