திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் இவற்றை செய்தால் அதிர்ஷ்டமான வாழ்க்கை உண்டாகும்

rahu

வானில் தினந்தோறும் பல வானியல் அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. நமது பண்டைய ஜோதிட சாஸ்திரங்களிலேயே வானில் நிகழுகின்ற எந்த ஒரு மாற்றங்களும் பூமியில் வசிக்கும் உயிரினங்கள் மீது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிற விஞ்ஞான ரீதியான உண்மை கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் பூமியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய கூடிய ஒரு காலமாக சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் இருக்கின்றன. இந்த சூரிய சந்திர கிரகணங்களின் போது ஏற்படுகின்ற நிழலை ராகு – கேது என ஜோதிட சாஸ்திரம் வரையறுத்துள்ளது. இதில் ராகு பகவான் ஒரு மனிதனின் அதி வீரத்தன்மை மற்றும் எல்லாக் காலத்திலும் எதிரிகளை வெற்றி கொள்ளும் நிலை ஆகியவற்றுக்கு காரணமாக இருக்கிறார். இந்த ராகு பகவானுக்குரிய ஒரு அற்புத நட்சத்திரமாக திருவாதிரை நட்சத்திரம் இருக்கிறது. அந்த திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் மிகுதியான யோகங்களை பெற செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

rahu 1

27 நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவதாக வருகின்ற நட்சத்திரம் திருவாதிரை நட்சத்திரமாகும். நவக்கிரக நாயகர்களில் திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் இருக்கிறார். திருவாதிரை நட்சத்திரத்தின் அதிதேவதை ருத்ரன் எனப்படும் சிவபெருமான் இருக்கிறார். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் இடர்கள் அனைத்தும் நீங்கி மிகுதியான அதிர்ஷ்டங்களும், யோகங்களும் உண்டாக கீழ்கண்ட பரிகாரங்களை முறைப்படி செய்து வந்தால் நன்மைகள் பெறலாம்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் ஜென்ம நட்சத்திர தினத்தன்று தஞ்சை மாவட்டத்திலிருக்கும் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலுக்கு சென்று, சிவபெருமானுக்கும் பார்வதிக்கும் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து, வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு அங்கிருக்கும் ராகு பகவானின் பாலாபிஷேக பூஜைக்கு, பால் தானம் தந்து வழிபாடு செய்வதால் உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்பட்டிருக்கும் ராகு கிரகத்தின் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். தினமும் காலை எழுந்து குளித்து முடித்ததும் சிவபெருமானுக்குரிய ருத்ர மகாமந்திரத்தை உங்களால் முடிந்த எண்ணிக்கையில் துதித்து வழிபடுவது உங்கள் வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும்.

Rahu Ketu

திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தலவிருட்சமாக செங்காலி மரம் இருக்கிறது. செங்காலி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று செங்காலி மரத்தையும், அங்கிருக்கும் இறைவனையும் வழிபடுவது உங்களின் அனைத்து வகையான தோஷங்களையும் நீக்கி, நன்மைகளை கிடைக்கச் செய்யும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் யாரேனும் ஒருவருக்கு ஆடைகள், புற்று நோய் குணமாக மருந்துகள் வாங்கித் தருவது ராகுபகவானின் மனம் குளிரச் செய்து உங்களுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கச் செய்யும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
உங்களுக்கு சீக்கிரம் வேலை கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thiruvathirai nakshatra dosha pariharam in Tamil. It is also called Thiruvathirai natchathiram in Tamil or Natchathira pariharangal in Tamil or Rahu bhagavan natchathirangal in Tamil or Thiruvathirai natchathira pariharangal in Tamil.