- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதிருவாதிரை விரதம் இருக்கும் முறை

திருவாதிரை விரதம் இருக்கும் முறை

- Advertisement -

சிவபெருமானுக்குரிய விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக கருதப்படுவது தான் திருவாதிரை விரதம். இதை ஆதிரை விரதம், மாங்கல்ய விரதம், ஆருத்ரா விரதம் என்று பல பெயர்களில் பலரும் கூறுவது உண்டு. வருடத்திற்கு ஒருமுறை அதுவும் மார்கழி மாதத்தில் வரக்கூடியதாக தான் இந்த திருவாதிரை விரதம் திகழ்கிறது. திருவாதிரை நட்சத்திரமும், மார்கழி பௌர்ணமியும் ஒன்றாக சேர்ந்து வரக்கூடிய அந்த நேரத்தில் இந்த வழிபாட்டை அனைத்து சிவாலயங்களிலும் செய்வார்கள். அதிலும் குறிப்பாக நடராஜருக்கு அபிஷேகம் ஆராதனை போன்றவை அனைத்தும் நடைபெறும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த திருவாதிரை நட்சத்திர நாளில் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

திருவாதிரை விரதம் இருக்கும் முறை

மார்கழி மாதம் என்பது பெருமாளுக்கு உரிய மாதம் என்றாலும் அதில் சிவபெருமானுக்குரிய விரத நாட்களும் வரும். அந்த விரத நாட்களில் மிகவும் முக்கியமான விரத நாளாக திகழக் கூடியதுதான் திருவாதிரை விரதம். இந்த விரதத்தை குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்கள் கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் விரதம் இருக்கக்கூடிய பெண்களின் கணவர்கள் அனைத்து விதத்திலும் சிறந்து விளங்குவார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட விரதத்தை மேற்கொள்ளும் முறையைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

திருவாதிரை நட்சத்திரம் என்பது ஜனவரி மாதம் 12ஆம் தேதி காலை 11:47க்கு தொடங்கி ஜனவரி மாதம் 13ஆம் தேதி காலை 11:24 வரை இருக்கிறது. பௌர்ணமி என்பது 13-ஆம் தேதி முழுவதும் இருக்கிறது என்பதால் சிதம்பரம் கோவிலில் நடராஜருக்கு காலை 3 மணியிலிருந்து 6 மணி வரை அபிஷேகம் என்பது நடைபெறும். சிதம்பரத்தில் மட்டுமல்லாமல் எந்தெந்த ஆலயங்களில் நடராஜர் சபை இருக்கிறதோ அந்த ஆலயங்களில் சிறப்பு வாய்ந்த அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெறும்.

அதனால் திருவாதிரை விரதம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் திருவாதிரை நட்சத்திரம் முழுவதும் விரதம் இருக்கலாம். அதாவது டிசம்பர் மாதம் 12ஆம் தேதி மதியத்தில் இருந்து விரதம் இருந்து டிசம்பர் மாதம் 13ஆம் தேதி சிவ தரிசனம் செய்துவிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஜனவரி மாதம் 13ஆம் தேதி முழுவதும் விரதம் இருந்து சிவ வழிபாட்டை மேற்கொண்டு மாலை நேரத்தில் விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த விரதத்தை மேற்கொள்ளும் பொழுது வீட்டில் சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதற்குரிய நேரமாக கருதப்படுவது ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம், காலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள் செய்யலாம், அதே போல் காலை 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் செய்யலாம். ஒருவேளை இந்த நேரங்களில் செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் செய்யலாம்.

பலரும் இந்த திருவாதிரை நட்சத்திர நாளில் மாங்கல்ய சரடை மாற்றுவார்கள். அப்படி மாற்றக்கூடிய பெண்கள் ஜனவரி மாதம் 13-ஆம் தேதி காலை 6:30 மணியிலிருந்து 7:30 மணிக்குள்ளோ அல்லது 9:30 மணியிலிருந்து 10:30 மணிக்குள் தாலி சரளை மாற்றலாம். வீட்டில் எப்படி வழிபாடு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம். வீட்டில் இருக்கக்கூடிய சிவபெருமானின் படத்திற்கு முன்பு அல்லது சிவலிங்கத்திற்கு முன்பு ஒரு வாழை இலையை விரித்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த வாழை இலையில் திருவாதிரை களி, 21 வகையான காய்கறிகளை பயன்படுத்தி அவியல், கூட்டு போன்றவற்றை செய்து வைக்க வேண்டும். ஒரு வேலை 21 காய்கறிகளை பயன்படுத்த செய்ய முடியாது என்று நினைப்பவர்கள் ஏழு, மூன்று என்ற எண்ணிக்கையில் காய்கறிகளை வைத்து அவியல், கூட்டு என்று செய்து கொள்ளலாம். அடுத்ததாக வடை, பாயாசம், இனிப்பு என்று படையலாக போட்டு சிவபெருமானுடைய மந்திரத்தை கூறி முழு மனதோடு கூறி வழிபாடு செய்ய வேண்டும்.

சிவபெருமானுக்கு இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள மறக்காதீர்கள். இந்த முறையில் வழிபாடு செய்து முடித்த பிறகு பெண்கள் அன்றைய தினத்தில் தங்களுடைய கணவர்மார்களிடம் இருந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கணவன்மார்களின் கைகளால் குங்குமத்தை வைக்க சொல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படி செய்வதன் மூலம் திருவாதிரை விரதத்தின் முழுமையான பலனை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: செல்வ வளம் அதிகரிக்கும் மார்கழி கடைசி ஞாயிற்றுக்கிழமை

சிவபெருமானுக்குரிய விரதங்களில் மிகவும் முக்கியமான விரதமாக திகழக்கூடிய இந்த திருவாதிரை விரத நாளில் பெண்கள் விரதம் இருந்து தங்களுடைய கணவரிடம் இருந்து இந்த பொருளை வாங்குவதன் மூலம் அவர்களின் குடும்பத்தில் நல்ல முன்னேற்றமும், ஒற்றுமையும், மகிழ்ச்சியும் நிலவும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்