தாலியைக் காணிக்கையாகப் பெற்று மாங்கல்ய பலம் அருளும் கருமாரியம்மன்!

amman-1

பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை’ என அம்மன் தாலாட்டில் விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன்  திருக்கோலம் அப்படியே காண வேண்டுமா? அப்படியானால் நீங்கள் திருவேற்காடுக்குத்தான் வரவேண்டும். ஆம், மிகப்பெரிய புற்றில் கருநாகமாக அன்னை குடி கொண்டு இருந்ததும், வேம்பு வடிவமாகவே சக்தி உருமாறி நின்றதும் இங்குதான். அருள் பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கே காட்சி தருவது அற்புதமான காட்சி. வாருங்கள் வேற்காட்டு மாரியை விழி விரிய தரிசிப்போம்.

amman
மாரி என்றால் மழை போன்றவள். கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். க – கலைமகள்; ரு – ருத்ரி; மா – திருமகள்; ரி – ரீங்காரி (நாத வடிவானவள்) என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது தலவரலாறு.

ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால், கோபம் கொண்ட சக்தி அவனை சபித்து இருளாக்கினாள். பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்று தலவரலாறு கூறுகிறது. புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள்.

amman

புற்றில் இருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள்.

காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு ஒரு ஆன்மிக மருத்துவமனையாகவே விளங்கி வருகிறது.

temple

இந்த ஆலயத்தில் இருக்கும் ‘பதி விளக்கு’ அணையாத விளக்கு. அம்மனையும், இந்த விளக்கையும் தரிசித்தால் மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ன்னை நம்பி வரும் பெண்களுக்கு மாங்கல்ய வரமளித்து, அவர்களை சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகளே அதிகம் காணிக்கையாக அளிக்கப்படுகிறது. செவ்வாய் தோறும் இங்கு காலை 10 மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை சிறப்பானது.