இந்த வார ராசிபலன் 22/04/2024 முதல் 28/04/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

vara rasi palan 22 to 28
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நடைபெறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் நிதானம் கண்டிப்பாக தேவை. குடும்ப முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது பிறரிடம் ஆலோசனை கேட்டு எடுப்பது நல்லது. நிலம், சொத்து சம்பந்தப்பட்ட தடைபட்டிருந்த விஷயங்கள் அனைத்தும் நன்மையில் முடியும் வாரம்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். ஆனால் தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிம்மதியான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு பண வரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர் பாராத பண வரவும் ஏற்படலாம். கடன்கள் தீரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் சண்டைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இருப்பினும் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்காமல் இருப்பது நல்லது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் புதிதாக எந்த முயற்சிகளிலும் ஈடுபடாமல் எந்த முக்கியமான விஷயங்களிலும் முடிவெடுக்காமல் தவிர்க்க வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்கும். திடீர் பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவர்.

வேலையை பொருத்தவரை பணி சுமை அதிகமாக இருந்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலையை திறமையாக செய்து முடிப்பீர்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் ஒவ்வொரு முயற்சிக்கும் உடன் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தொழிலை விரிவு படுத்துவதற்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நற்பலன்கள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். மருத்துவ செலவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் அவசியம். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக வாட்டி வதைத்து கொண்டிருந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உண்டாகும். எனினும் சக பணியாளர்களை அனுசரித்து செல்ல வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். தொழிலை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

வேலை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கும் வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்காக கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நற்பலன்கள் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்பட்டாலும் வீண் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் இருக்கிறது. ஒரு சிலருக்கு இதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். கவனம் தேவை. குடும்ப விஷயத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பயணங்களை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. திறமையை காட்டுவதன் மூலம் அதிகாரிகளின் பாராட்டை பெற்று விரும்பிய சலுகைகளை பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு லட்சுமி நாராயணரை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மங்களகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உபாதையாக இருந்தாலும் உடனே சரி செய்து கொள்ள வேண்டும். ஒரு சிலருக்கு வாகன யோகம் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடும் கவனமும் தேவை.

வேலையை பொருத்தவரை புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரம் சற்று எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு வருமானம் ஏற்படும். ஒரு சிலருக்கு உறவினர்களால் சங்கடம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முயற்சிகள் வெற்றி அடைய வாழ்க்கைத் துணை உதவி செய்வார்கள். ஒரு சிலருக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்தி செயலாற்ற வேண்டும். வேலை ரீதியாக இருக்கக்கூடிய மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் மறைமுக எதிரிகளால் பாதிப்புகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. விடாமுயற்சியுடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திருப்திகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். நீண்ட தூர பயணம் வெற்றியைத் தரும். ஒரு சிலருக்கு சுப நிகழ்ச்சிகள் நடைபெற பெறுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. நீண்ட நாட்களாக வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வேலையில் இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். தொழிலில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரம் மேற்கொள்ள வேண்டாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுசரித்து செல்ல வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவு அளவிற்கு பணவரவு ஏற்பட்ட ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். திருமணம் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய முதலீடுகள் செய்யாமல் இருப்பது நல்லது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிப வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும் என்றாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு கையிருப்புகள் கரையும். புதிதாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை தரும். பெரியவர்களிடம் பேசும்பொழுது பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை நல்ல முன்னேற்றம் தென்படும். சமயோகித புத்தியுடன் செயலாற்றுவதால் நினைத்த சலுகைகள் கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்கள் இந்த வாரத்தில் தக்க முயற்சிகளை மேற்கொள்ளலாம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பாராத பண வரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும். போட்டி தேர்வுக்காக முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான முடிவு ஏற்படும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருந்தாலும் உற்சாகமாக செயல்பட்டு அந்த வேலையை முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். இதனால் தொழிலை விரிவு படுத்தவும் சொந்த இடத்திற்கு கடையை மாற்றவும் வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

- Advertisement -