இந்த வார ராசிபலன் – ஏப்ரல் 6 முதல் 12 வரை

Indha vara rasi palan

மேஷம்:

Aries zodiac sign

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகிறது. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். நிதானம் தேவை. ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். உடல் உபாதைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. வியாபாரத்தில் வருமானம் சீராக இருக்கும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பெண்கள் வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்ய முடியாத சூழ்நிலை நிலவும். தினம் தோறும் முருகன் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

ரிஷபம்:

Taurus zodiac sign:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையப்போகிறது. நீங்கள் எதிர்பார்த்ததை விட பணவரவு அதிகப்படியாகவே கிடைக்கும். ஆனால் அடுத்த மாதத்திற்கு தேவை என்பதை புரிந்து கொண்டு சிக்கனமாக செலவு செய்யுங்கள். சுபகாரியப் பேச்சுகளை வீட்டில் தொடங்கலாம். வியாபாரத்தில் எந்த ஒரு முடிவையும் தற்சமயம் எடுக்க வேண்டாம். அலுவலகப் பணி வீட்டிலிருந்தே செய்யப்பட்டாலும், சீராக செல்லும். வீட்டில் உள்ள பெண்களுக்கு சந்தோஷமும், மன அமைதியும் நிறைந்திருக்கும். தினம்தோறும் சிவன் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

- Advertisement -

மிதுனம்:

Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனை இந்த வாரம் கட்டாயம் தீர்ந்துவிடும். செலவுகளை சமாளிக்க வருமானம் உங்கள் கைக்கு வந்து சேரும். முடிந்த வரை வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருப்பது நல்லது. தற்சமயம் எல்லோருக்கும் அந்த சூழ்நிலை தான். உங்களுக்கு அவசியம் ஏற்பட்டால் கூட வீட்டிலிருந்து வெளியே செல்லக்கூடாது. வீட்டில் இருந்து அலுவலகப் பணியை செய்பவர்களுக்கு பாராட்டுக்கள் வந்துசேரும். வீட்டில் உள்ள பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நல்ல பலனைத் தரும்

கடகம்:

zodiac sign

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் தரக்கூடிய வாரமாக தான் அமையப்போகிறது. வருமானத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. அனாவசியமாக உங்களது குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். எக்காரணத்தைக் கொண்டும் உறவினர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் அதிக கவனம் தேவைப்படுகிறது. வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்பவர்கள் சற்று கவனமாக, உங்களது பணியை விரைவாக செய்து முடிக்க வேண்டியது அவசியம். வீட்டில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக தான் இந்த வாரம் அமையும். தினம் தோறும் அம்மன் வழிபாடு மனநிம்மதியை தரும்.

சிம்மம்:

Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகிறது. வீட்டில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள்கூட இந்த வாரம் ஒரு முடிவுக்கு வந்துவிடும். செலவுக்கு தேவையான பணம் வரவு உங்கள் கைகளுக்கு வந்து சேரும். ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு குறைபாடும் இருக்காது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். பணியில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான வாரமாக தான்  அமையப்போகிறது. தினம்தோறும் அம்மன் வழிபாடு மன அமைதியை தரும்.

கன்னி:

Virgo zodiac sign

கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை தரக்கூடிய வாரமாக தான் இந்த வாரம் அமையப் போகிறது. அனாவசிய பேச்சை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். செலவுகள் அதிகரிக்கக் கூடும் என்பதால், சேமிப்பையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். திருடு போக வாய்ப்பு உள்ளது. வியாபாரம் சற்று மந்தமாகத்தான் இருக்கும். வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்பவர்கள் வேலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு வீட்டு வேலை சுமை காரணமாக உடல் சோர்வு ஏற்படும். தினம் தோறும் முருகன் வழிபாடு மன அமைதியை தேடி தரும்.

துலாம்:

Libra zodiac sign

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப் போகின்றது. பணவரவு சீராக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் ஏற்படும். வியாபாரம் எப்பவும் போல் சுமூகமான நிலையில் செல்லும். வீட்டிலிருந்தே வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வீட்டிலுள்ள பெண்கள் மனநிறைவோடு இருக்கக்கூடிய வாரமாக அமையப்போகிறது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு மன அமைதியைத் தேடித்தரும்.

விருச்சிகம்:

Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வருமானம் அதிகரிக்கக்கூடிய வாரமாக அமையப்போகிறது. உங்கள் தேவைக்கு அதிகப்படியான பணவரவு கிடைத்தாலும், அடுத்த மாதத்திற்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களால், உடன் சேர்ந்து பிரச்சினைகளும் வர வாய்ப்பு உள்ளது. ஆகவே உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்லுங்கள். வியாபாரத்தில் அதிக உழைப்பை போடும் பட்சத்தில் அதிக லாபம் கிடைக்கலாம். வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்பவர்களுக்கு உற்சாக நிலை நிலவும். வீட்டில் உள்ள பெண்களுக்கு மன அமைதியான வாரமாக இந்த வாரம் அமையும். தினம் தோறும் முருகன் வழிபாடு மன அமைதி தேடித்தரும்.

தனுசு

Dhanusu Rasi

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் அதிகரிக்க கூடிய வாரமாகதான் அமையப் போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த விரிசல்கள் சரியாகிவிடும். தற்சமயம் வியாபாரத்திலோ, அலுவலகப் பணியிலோ புதிய முயற்சியில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முடிவினை, இந்த வாரம் எடுக்க வேண்டாம். அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. சற்று மந்தமாகத்தான் செல்லும். வீட்டில் உள்ள பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கும் சூழ்நிலை ஏற்படும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நல்ல பலனைத் தரும்.

மகரம்:

Capricornus zodiac sign

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகிறது. அநாவசிய பேச்சை மட்டும் தவிர்த்துக் கொண்டால் பிரச்சினைகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவேண்டும். வார்த்தைகளை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளும் குறையும் என்பதை மறந்துவிடாதீர்கள். வியாபாரத்தில் தற்சமயம் எந்த ஒரு புதிய முயற்சியையும் செய்ய வேண்டாம். வீட்டிலிருந்தே அலுவலகப் பணியை செய்பவர்கள் கவனமாக உங்கள் பணியை தொடருங்கள். பிரச்சினைகள் எதுவும் வராது. வீட்டில் உள்ள பெண்களுக்கு வேலைப்பளு சற்று அதிகரிக்கும். தினந்தோறும் சிவன் வழிபாடு மன அமைதி தரும்.

கும்பம்:

Aquarius zodiac sign

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரமாக அமையப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத ஒரு செய்தி உங்கள் காதுக்கு வரும். அந்த செய்தியினால் உங்களின் மனது சந்தோஷம் அடையும். பணவரவிற்கு எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது. நாளையும் பணத்தேவை இருக்கின்றது என்பதை மனதில் வைத்துக்கொண்டு சேமிப்பது மிக நல்லது. உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை அனாவசியமாக மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். அலுவலகப் பணியை வீட்டிலிருந்தே செய்பவர்களுக்கு சற்று சோம்பேறித்தனம் ஏற்பட்டு விலகும். வீட்டில் உள்ள பெண்களுக்கு வீட்டுச் செலவு கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அம்மன் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.

மீனம்:

Pisces zodiac sign

மீன ராசிக்காரர்களுக்கு பணவரவை தரக்கூடிய வாரமாக இந்த வாரம் அமையப் போகிறது. இந்த மாதம் செலவை சமாளித்து விடுவீர்கள். அடுத்த மாதத்திற்கும் தேவை உள்ளது என்பதை உணர்ந்து சேமிப்பது மிகவும் நல்லது. வீட்டில் சுப நிகழ்ச்சிகளை பற்றிய பேச்சை தொடங்கலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். அத்தியாவசிய தேவைக்கான வியாபாரம் என்றால் கட்டாயம் அதிக லாபம் கிடைக்கும். வரும் நாட்களில் உங்களது வியாபாரம் நன்றாக சூடு பிடிக்க வாய்ப்பு உள்ளது. வீட்டில் உள்ள பெண்கள் உங்கள் வீட்டு விஷயத்தை பக்கத்து வீட்டுக்காரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தினம்தோறும் அம்மன் வழிபாடு மன அமைதியை தேடித்தரும்.