இந்த வார ராசிபலன் 25/04/2022 முதல் 01/05/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தேவையற்ற வம்பு சண்டைக்கு செல்ல வேண்டாம். வீண் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். யாராவது உங்களை வம்புக்கு இழுப்பதற்கு காத்துக் கொண்டே இருப்பார்கள். வலிய போய் நீங்களே சிக்கி விடாதீர்கள். மற்றபடி வியாபாரத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் எதிர்பார்த்ததை விட நிறைய லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. ஆனால் எந்த ஒரு நல்ல விஷயம் நடந்தாலுமே அதற்குப்பின்னால் ஒரு சிக்கல் வரும். ஜாக்கிரதை, எந்த வேலை செய்வதாக இருந்தாலும் கொஞ்சம் உஷாராக தான் இருக்க வேண்டும். தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பாராத நிறைய நல்ல விஷயங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது. நீங்கள் உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுத்து வைக்கக் கூடிய முதல் அடியே, பெரிய வெற்றியை கொடுக்கும். அதன் பின்பு அடுத்தடுத்து வெற்றிகள் வந்து குவியும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்க தொடங்கும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. குறிப்பாக இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிட்டும். தினம்தோறும் அம்பாள் வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக அமையப்போகின்றது. நாளைக்கு செய்ய வேண்டிய வேலையை இன்றே செய்து முடித்து விட்டு, நிம்மதியாக இருக்க போகிறீர்கள். சொந்தத் தொழிலில் அதிக முதலீட்டை போடவேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதனை சமாளிக்கும் அளவிற்கு உங்களுடைய புத்திக்கூர்மை அதிகரிக்கும். சில இடங்களில் உங்களுடைய பேச்சாற்றலால் வந்த சிக்கலை ஒன்றுமே இல்லாமல் சுக்குநூறாக உடைத்து விடுவீர்கள். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலையில் அதிக கவனம் தேவை. எந்த வேலையாக இருந்தாலும் அதை முதலில் உங்களால் செய்ய முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். செய்யமுடியாத வேலைக்கு வாக்கு கொடுத்து மாட்டிக் கொள்ளாதீர்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் சின்ன சின்ன அவமானம் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெற்றோர்களுக்கு பெருமை ஏற்படும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உடல் உபாதைகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இந்த வாரம் அதாவது ஏப்ரல் மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. ஆனால், எல்லா விஷயத்திலும் நீங்கள் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட கூடாது. குறிப்பாக வாழ்க்கை துணையிடம் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். நீ பெரியவரா? நான் பெரியவரா? என்ற பஞ்சாயத்துக்கு செல்ல வேண்டாம். சரண்டர் ஆவது மட்டும் தான் ஒரே வழி. உங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் வேலை செய்யும் போது தங்களுடைய வேலையில் கவனமாக இருக்க வேண்டும். காய்கறி வெட்டும் போது அடுப்பில் சமைக்கும் போது கவனம் தேவை. வியாபாரத்தில் நல்ல லாபம் இருக்கும். சொத்து சுகம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரம் 27 ஆம் தேதி கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். உங்களுக்கு சந்திராஷ்டமம். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. இது நமக்கு சரிப்பட்டு வருமா என்று சந்தேகத்தோடு நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் அது உங்களுக்கு வெற்றி தான். கவலையே படாதீர்கள். அவசரப்பட்டு யாரிடமும் கை நீட்டி கடன் வாங்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். ரியல் எஸ்டேட் பிசினஸ் நல்ல லாபத்தை கொடுக்கும் அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் பழகும்போது கொஞ்சம் கவனம் தேவை. சில நேரங்களில் சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தலைகுனிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாக்கு கொடுத்து மாட்டிக்காதீங்க. தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே வாருங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மந்தமான சூழ்நிலையை காணப்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வருமே தவிர, எந்த வேலையையும் சீராக முடிக்க முடியாது. ஆனால் ஒரு வேலையை நீங்கள் மீண்டும் மீண்டும் முயற்சி செய்யும் போது நீண்ட போராட்டத்திற்குப் பின்பு அதில் உங்களுக்கு நிச்சயமாக வெற்றி கிட்டும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் ஏற்படும் மன குழப்பம் அவ்வப்போது வந்து போகத்தான் செய்யும். பரவாயில்லை இந்த வார இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். சொந்தத் தொழிலில் தேவையற்ற போட்டி பொறாமைகள் இருக்கும். புதிய முதலீட்டினை செலுத்த வேண்டாம். லாபம் அவ்வப்போது நிறைவாக கிடைக்காது. தினம் தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். நீங்கள் கஷ்டம் என்று நிற்கும்போது உங்களை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் உங்களை தாங்கி பிடிக்க போகிறார்கள். உறவுகளின் அருமை பெருமைகளையும் நண்பர்களின் அன்பு அருமை பெருமைகளையும் நீங்கள் உணர போகும் காலம் இது. சொந்த தொழிலில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மை தரும். பயணத்தின் போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். பூர்வீக சொத்து உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். தினம்தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்வது நல்லது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரும் வாரமாக இருக்கப்போகின்றது. சொத்துசுகம் வாங்குவதற்கு நேரம் காலமும் கைகூடிவரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். கையில் சேமிப்பு அதிகரிக்கும். மனநிறைவான வாரம் இது. குடும்பத்தோடு முடிந்தால் ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் யாருடைய கையையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. உங்களுடைய சொந்தக் காலில் நின்று நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க போகிறீர்கள். உங்களை ஏளனம் பேசியவர்கள் முன்பு தலைநிமிர்ந்து நடக்கும் அளவிற்கு ஒரு சில நல்ல காரியங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாத அலைச்சல் மன கஷ்டத்தின் மூலம் உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு நிம்மதியை புத்துணர்ச்சியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத பாராட்டுகளும் சம்பள உயர்வும் கிடைக்கும். வார இறுதியில் கை செலவுக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகின்றது. தேவையில்லாத பல பிரச்சினைகளில் இருந்து வெளிவந்து அப்பாடா என அமரப் போகிறீர்கள். வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகள் குவியும். வீட்டில் வேலை செய்யும் பெண்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காய்கறிகள் நறுக்கும்போது அடுப்பில் சமைக்கும் போது கவனம் அதிகமாகவே இருக்கட்டும். ரத்த காயம் ஆவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். விரோதிகளும் உங்களிடம் முட்டி மோதி ஜெயிக்க முடியாமல் சோர்ந்து போக போகிறார்கள். தினந்தோரும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். இருந்த போதிலும் உங்களுடைய வேலையில் எந்த தடையும் இருக்காது. நீங்கள் செய்ய வேண்டிய வேலையை சரியாக செய்து முடித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் மதிப்பும் உயரும். உயர்பதவிகள் கிடைப்பதற்கு கூட நிறைய வாய்ப்புகள் உள்ளது. பண விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். கையிலிருந்து பணம் தண்ணீராக செலவாகும். இருப்பினும் கடன் வாங்காதீர்கள். செலவுகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். கணவன்-மனைவிக்கிடையே சந்தோஷம் அதிகரிக்கும். முடங்கிப்போன தொழில் கூட முன்னேற்றத்தை அடையும். புதிய எதிர்பாலின நட்புகளுடன் கொஞ்சம் உஷாராக இருங்கள். தெரியாத மனிதர்களிடம் பழகும்போது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிறகு கெட்டபெயர் உங்களுக்கு தான் வரும். தினம்தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்தால் பல நன்மைகள் ஏற்படும்.

- Advertisement -