இந்த வார ராசிபலன் 1/8/2022 முதல் 7/8/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் செய்யும் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது. அலட்சியம் தேவையற்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். சுய தொழில் செய்பவர்களுக்கு நீண்ட நாள் எதிர்பார்த்த ஒரு விஷயம் சுமூகமாக முடிவுக்கு வரும். பெரிய மனிதர்களின் ஆதரவை பெறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு பின் செயலாற்றுவது நல்லது. கிடைக்கின்ற வாய்ப்புகளை தவற விட்டால் பின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டி இருக்கும். பரிகாரமாக குரு பகவானை வழிபட்டு வாருங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் ரொம்பவும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உடல் சோர்வு மட்டும் அல்லாமல் மனசோர்வும் நீங்கி புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் வரவு செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தீட்டிய திட்டங்கள் பற்றிய விவாதம் தவிர்ப்பது நல்லது. பழைய பகைவர்கள் கொடுத்து வந்த தொல்லைகளில் இருந்து விடுபடலாம். பொருளாதாரம் ஏற்றத்தை நோக்கி பயணிக்கும். பரிகாரமாக குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் உங்களுடைய தேவையற்ற மன பயத்தை தவிர்ப்பது நல்லது. நீங்கள் நினைத்தது நடக்கப் போகிறது எனவே மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். சுயதொழியில் உள்ளவர்களுக்கு அவ்வப்போது தடுமாற்றம் ஏற்பட்டாலும் தடை இல்லாமல் ஏற்றம் காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து பணம் வருவதில் இருந்து வந்த இடையூறுகள் நீங்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆரோக்கியத்தை பேணி காப்பது நல்லது. பரிகாரமாக விநாயகரை வழிபடுங்கள்.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் பல தடைகளை தாண்டிய வெற்றியை பெற போகிறீர்கள். தேவையற்ற விமர்சனங்களில் இருந்து விடுபட்டு நற்பலன்கள் அடைய போகிறீர்கள். குடும்பத்தில் அமைதிக்கு குறைவிருக்காது. கணவன் மனைவி உறவுக்கு இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பின் சீராகி விடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகத்தால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சாதக பலன் கிடைக்கும். பரிகாரமாக ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாட்சி வழிபடுவது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் எதிலும் அனுசரித்து செல்வது நல்லது. உங்களுடைய முன் கோபத்தால் தேவையற்ற இழப்புகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை பெரிதாக கொள்ளாமல் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய அமைப்பாக உள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சலுகைகள் கிடைத்து மகிழ்ச்சியை உண்டாக்கும். பரிகாரமாக வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகரை வழிபடுங்கள்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் தேவையற்ற குழப்பங்களில் இருந்து விடுபடலாம். மனதில் இருந்து வந்த குழப்பமான சூழ்நிலை மாறி தெளிவான சிந்தனையுடன், நேர்மறை ஆற்றல் அதிகரித்து காணப்படுவீர்கள். சுயதொழியில் உள்ளவர்களுக்கு இழுப்பறியாக இருந்த வேலைகள் ஒரு வழியாக இவ்வாரம் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் நண்பர்களுடன் இருந்து வந்த மன கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை பாராட்டுவீர்கள். பொருளாதார ரீதியான ஏற்றம் வீட்டில் இருப்பவர்களை திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கிறது. பரிகாரமாக லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்து வழிபடுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கிறதா? என்பதை பலமுறை சிந்தித்துப் பார்ப்பது நல்லது. குடும்பத்தில் நெருக்கமானவர்கள் மத்தியில் உங்களுடைய கருத்து வேறுபடுவதற்கு வாய்ப்புகள் உண்டு. அனாவசிய வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை பகைத்துக் கொள்ளாமல் உங்களுடைய திறமையை அமைதியாக காண்பிப்பது நல்லது. பரிகாரமாக நவகிரக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் இடைப்பட்ட பணியை மீண்டும் எடுத்து ஆரம்பிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் மட்டம் தட்டாமல் மற்றவர்களை காட்டிலும் உறுதுணையாக நிற்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதை படிப்படியாக தகர்த்து எறிந்து தொடர்ந்து முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன ரீதியான பாதிப்புகள் உங்களுக்கு மந்த நிலையில் ஏற்படுத்தும் எனவே கூடுமானவரை உங்களை நீங்களே ஊக்குவிப்பது நல்லது. பரிகாரமாக சிவனை நோக்கி தியானிப்பது நல்லது.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை பெற போகிறீர்கள். உங்களுடைய கடுமையான முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போகப் போவதில்லை. எனவே பொறுமையை கையாளுவது நல்லது. கணவன் மனைவி இடையே பணி போர் நடக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அனுகூலம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் அற்புதமான வெற்றி அடையும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு துரைசார் நிபுணர்களின் ஆலோசனை கிடைக்கும். பரிகாரமாக சனிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள் .

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் உங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் குடும்பத்திற்காக முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. விடா முயற்சிகளுக்கு உரிய பலன் நிச்சயம் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் கூட்டு முயற்சிகளில் அதிக லாபம் காணும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு காரிய வெற்றி நீங்களும் எதிர்பார்க்காத வகையில் அமோகமாக நடைபெறும். எதிலும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து விட்டு முடிவெடுங்கள். ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை. பரிகாரமாக சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமையில் வழிபடங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் சற்று அனுபவித்து வளைந்து செல்லக்கூடிய வாரமாக இருக்கிறது. தேவையற்ற முன்கோபம் தேவையற்ற பிரச்சனையை கொடுக்கும். உங்களுடைய சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட வாய்ப்புகள் உண்டு எனவே சாமர்த்தியமாக எதையும் கையாளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். பரிகாரமாக ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுங்கள் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்கள் இந்த வாரம் உங்களுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துக் கொள்வீர்கள். உங்களால் முடியாது என்று சொன்னவர்கள் மத்தியில் அதை முடித்துக் காட்டி கம்பீரமான வெற்றியை பெறுவீர்கள். சுய தொழிலில் திட்டிய திட்டங்களை தீட்டியபடி நிறைவேற்ற விடா முயற்சி தேவை. முன் பின் தெரியாதவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு பெருகும். உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நபர் ஒருவரை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். பரிகாரமாக துர்க்கை அம்மனை வழிபடுங்கள்.

- Advertisement -