இந்த வார ராசிபலன் 8/8/2022 முதல் 14/8/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan4
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத வருமானம் மனநிறைவை கொடுக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்துக்களை வாங்கவோ விற்கவோ செய்யலாம். சொந்த தொழிலில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் கடனுக்கு பொருட்களை கொடுக்காதீர்கள்‌. ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன அலைச்சல்கள் இருக்கும். வெளியூர் பயணத்தை அடுத்த வாரம் தள்ளிப் போடுவது நல்லது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எடுக்கக்கூடிய எல்லா முயற்சிகளிலும் அதிக கவனம் தேவை. குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. முன்பின் தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்கக் கூடாது. புதியதாக தொழில் தொடங்கும் முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல மாற்றம் உண்டாகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. இந்த வாரம் 9, 10 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. கொஞ்சம் கவனம் தேவை. தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி கிடைக்கக்கூடிய வாரமாக இருக்கும். ஆனால் அந்த வெற்றி கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் விடாமுயற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒரு வேலையை கையில் எடுத்து முடித்தோம் என்று இருக்காது. இழுபரியாகத்தான் இருக்கும். நீங்கள் தான் துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும். இக்கட்டான சூழ்நிலையில் உங்களுடைய உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு கை கொடுத்து உதவி செய்வார்கள். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டு‌. சொந்த பந்தங்கள் இடையே முன்கோபம் காட்ட வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் இருக்கக் கூடாது. இந்த வாரம் 11ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியை தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக குழப்பத்தில் இருந்து வந்த எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் தொடர்ந்து நடக்கும். குழந்தை பேருக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். விலை உயர்ந்த பொருட்களை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுபச் செலவுகள் ஏற்படும். சின்ன சின்ன கடன் பிரச்சனை கஷ்டத்தை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். சந்தோஷத்திற்கு எந்த குறையும் கிடையாது‌. ஆனால் வெளியிடங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். அலைச்சலின் மூலம் உடல் உபாதைகள் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிவது நல்லது. வேலை செய்யும் இடத்தில் வாக்குவாதங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீண் வம்புக்கு செல்ல வேண்டாம். நின்று நிதானமாக யோசித்து எல்லா விஷயத்திலும் முடிவு எடுப்பது நல்லது. முன்கோபத்தில் முடிவு எடுப்பது நல்லதை தராது. தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. நிதி நிலைமை சீராக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் அனுசரணையாக பேசுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சங்கடங்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடந்தாலும் ஏதாவது ஒன்றை மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருப்பீர்கள். குழப்பத்தை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தைரியமாக உங்களுடைய வேலைகளை செய்யுங்கள். உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். எதிர் காலத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். இன்று உங்களுடைய வேலையை கவனத்தோடு செய்தால், நாளை பலன் நல்லதாகவே கிடைக்கும். தொழில் சுமாராகத்தான் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் எட்டிப் பார்க்கத்தான் செய்யும். இருப்பினும் விடாமுயற்சியையும் மன தைரியத்தையும் கைவிட வேண்டாம். தினம் தோறும் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு வேலையை தொடங்குங்கள். நல்லதே நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக தான் இருக்கப் போகின்றது. பிரச்சினைகள் என்று வந்தாலும் அதை சரி செய்ய நண்பர்களும் உறவினர்களும் முன்வந்து நிற்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. நேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு வேலையை பாருங்கள். ஆரோக்கியமான உணவு அவசியம் தேவை. குடும்பத்தோடு சந்தோஷமாக சுற்றுலா சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் உண்டு. சொந்தத் தொழிலில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நிறைய முதலீட்டை செய்ய வேண்டாம். பங்குதாரர்களை நம்ப வேண்டாம். கணக்கு வழக்குகளை சரியாக பாருங்கள். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் குடும்ப விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். முடிவெடுப்பதற்கு முன்பு ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவோடு நீங்கள் செய்யக்கூடிய வேலை பல பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்த்து விடும். வருமானத்தில் பிரச்சனை உண்டாகும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். செய்யக்கூடிய வேலையில் பிரச்சனைகள் உண்டாகும். சில பேருக்கு புதிய வேலைகள் தேடுவதற்கான சூழ்நிலைகூட ஏற்படலாம். எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கமிஷன் வியாபாரத்திற்கு பிரச்சனை இருக்காது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிக்கல் பிடுங்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் அமைதியாக இருந்தாலும் வம்பு சண்டை உங்களைத் தேடி வரும். நீங்கள் வாயை திறந்தாலே வரக்கூடிய வார்த்தைகளில், எதிரொலி குற்றம் கண்டுபிடிப்பார்கள். ஆக இந்த வாரம் முழுவதும் மௌன விரதம் இருப்பது மிக மிக நல்லது. வீண்விரயம் ஏற்படும். சொந்தத் தொழிலில் மந்தமான போக்கே நிலவும். விரைய செலவு உண்டாகும். புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். நீங்கள் நினைத்தபடி திருமணம் கைகூடும். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் குறுக்கு வழியில் செல்ல நினைக்கக் கூடாது. நேர்மையாக நின்று சாதித்தால் எதிர்காலத்தில் பிரச்சனை இல்லை. தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மைகள் நடக்கக்கூடிய பாரமாகத்தான் இருக்கப் போகின்றது. உங்களுக்கு பாதகமாக நடந்த காரியங்கள் கூட, சாதகமான பலனை கொடுக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். மனக்கவலை நீங்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த தம்பதியர் கூட ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. வீட்டில் இருக்கக்கூடிய பெண்கள் குடும்ப உறவுகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். கடன் சுமை படிப்படியாக குறையும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமைகள் வெளிப்படக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. வாழ்க்கையில் அடிமேல் அடி விழும். ஆனால் அந்த எல்லா பிரச்சனையில் இருந்தும் மீளக்கூடிய தெம்பு உங்களிடம் உள்ளது. வரவேண்டிய தேதியில் சம்பளம் கைக்கு வராது. ஆனால் கடனை திருப்பி கட்ட வேண்டும். வாடகை கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலை. வருமானம் இல்லை என்றாலும் அதை சமாளிக்க கூடிய தெம்பை அந்த கடவுள் உங்களுக்கு கொடுப்பார். வாழ்க்கையில் இருக்க கூடிய சிக்கல்களுக்கு கூடிய சீக்கிரத்தில் விடிவு காலம் பிறக்கப் போகின்றது. விடாமுயற்சியோடு செயல்படுங்கள். புதிய நண்பர்களிடம் பழகுவதில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் நட்பு கொள்ள வேண்டாம். எதிர்ப்பாலின நட்பு கூடவே கூடாது. தினமும் குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -