இந்த வார ராசிபலன் 15/8/2022 முதல் 21/8/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan5
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கும் இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. எதிரிகளின் மூலம் பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தெம்பு உங்களிடம் இருக்கும். வீண் வம்பு வாக்குவாதங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். சூதாட்டத்தில் இறங்க வேண்டாம். வெளியூர் பயணங்கள் இருக்கும். உடல் அசதி காணப்படும். புதிய நண்பர்களிடம் பார்த்து பழக வேண்டும். எதிர் பாலின நட்பு கூடாது. சொத்து சம்பந்தப்பட்ட வில்லங்கங்களில் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் கனவு நினைவாகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாதவர்களிடம் கடன் கொடுக்க வேண்டாம். கடனும் வாங்க வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சின்ன சின்ன சச்சரவுகள் வந்து போகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் எவ்வளவு தான் உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. செய்யும் வேலையில் இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொலைதூரப் பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். முக்கியமான பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த பொருட்கள் திருட்டு போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது. முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் நல்லது. தினம் தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிகாரர்கள் இந்த வாரம் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். கோபத்தோடு நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயமும் உங்கள் வாழ்க்கையில் தோல்வியை கொடுக்கும். பொறுமையாக செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்தும் பெரிய வெற்றியை கொடுக்கும். யாரையும் உதாசீனப்படுத்தி பேசாதீங்க. மற்ற படி வீட்டில் சுப காரியங்கள் நடக்க தொடங்கும். சுப செலவுகள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். இருப்பினும் புதிய முதலீட்டை செலுத்த வேண்டாம். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். எதிர்பாலின நட்பு பிரச்சனைகளை உண்டு பண்ணும். புதிய நட்பு வைத்துக் கொள்ளக் கூடாது. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசி காரர்களுக்கு இந்த பாரம் சின்ன சின்ன தடைகள் வந்து போகும். புதிய முயற்சிகளில் உடனடியாக வெற்றி கிடைக்காது. ஆனால் ஒன்றுக்கு பலமுறை முயற்சி செய்யும் போது வெற்றி அடைவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. தொழிலை விரிவு படுத்துவதற்கு இது நல்ல காலம். வேலை செய்யும் இடத்தில் அமைதியாக நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சினை கிடையாது. தேவையில்லாமல் வாய் சவடால் விட்டால் மாட்டிக் கொள்வீர்கள். தடைப்பட்டு வந்த திருமணம் மீண்டும் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். இந்த மாதம் 15, 16 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமும் உள்ளது. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக இருக்கப் போகின்றது. சுறுசுறுப்பாக உற்சாகமாக எல்லா வேலையையும் முன்கூட்டியே செய்து விடுவீர்கள். வெற்றி உங்கள் பக்கம் நிலையாக நிற்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நன்மைகள் காத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் உங்களை சுற்றி இருப்பவர்களிடம் நீங்கள் உஷாராக இருக்க வேண்டும். நல்லவர்கள் போல பேசி சிலர் உங்களை சங்கடத்தில் சிக்கி விடவும் செய்வார்கள். இந்த வாரம் 17, 18 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சங்கடங்கள் சில இருக்கும். அதாவது நிறைய வருமானம் இருக்கும். அதற்கு பின்னாலே பத்து செலவுகள் வந்து நிற்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வரும். எந்த முடிவை எடுப்பது என்று தெரியாமல் தடுமாற்றத்தில் இருப்பீர்கள். சொந்தத் தொழிலில் வருமானம் இல்லாமல் சில பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். என்ன செய்வது என்று சில பேர் திக்கு முக்காட வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். கவலை வேண்டாம் தினம்தோறும் குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அன்றாட வேலையை தொடங்கினால் எல்லாம் நன்மையாகவே நடக்கும்.

விருச்சிகம்:
விருச்சக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமை வெளிப் போகின்ற வாரமாக இருக்க போகின்றது. பெரிய சிக்கல் வந்தாலும் அதை ஒரு நொடிப் பொழுதில் தீர்த்து விடுவீர்கள். உங்களுடைய புத்திசாலித்தனம் அனைவரையும் வியக்கும் வகையில் அமையும். சாதுரியமான பேச்சும், திறமையான செயலிலும் வாழ்க்கையில் உங்களை ஒரு படி மேலே ஏற்றி விடப் போகின்றது. உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுடைய எதிர்காலத்திற்கு நல்லது. தினமும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரம் ஆகத்தான் இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் சிரமப்பட வேண்டியதாக இருக்கும். அவ்வளவுதான். சாதாரணமாக நீங்கள் தினந்தோறும் செய்யக்கூடிய வேலையில் செய்வதற்குகூட அதிக உழைப்பு தேவைப்படும். முன்கோபத்தை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும். மேலதிகாரி சொல்லுவதை காது கொடுத்து கேளுங்கள். எந்த ஒரு பொருளுக்குமே இருக்கின்ற போது அதனுடைய அருமை தெரியாது. அது நம் கையை விட்டு போகும் போது தான் அதனுடைய அருமை பெருமைகளை நாம் தெரிந்து கொள்வோம். எல்லாவற்றையும் இழந்த பின்பு யோசித்து எந்த பிரயோஜனமும் கிடையாது. கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வது போல தான். ஆக பொறுமையாக இருந்து எல்லா விஷயத்தையும் சாதித்துக் கொள்ளுங்கள். மனத்திற்குள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பிரச்சனைகள் சூழ்ந்த வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. நீங்களாக வம்பு தும்புக்கு செல்ல மாட்டீர்கள். வீண் வம்பு உங்களைத் தேடி வரும். உங்களை மேல் பழி போடுவதற்கு உங்களை சுற்றி நாலு பேர் காத்துக் கொண்டே இருப்பார்கள். தேவையில்லாத பிரச்சனையில் சிக்கி கெட்ட பெயர் வாங்குவீர்கள். பண பிரச்சனை இருக்கும். மனக்குழப்பும் இருக்கும். முன்கோபத்தால் உறவுகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் வரும். இப்படி நிறைய குழப்பங்களை சந்தித்து, இந்த வார இறுதியில் தெளிவு பெறுவீர்கள். இதில் உங்களுக்கு என்ன ஆறுதல் என்றால் சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், வழக்கு உங்களுக்கு சாதகமாக இருக்கும். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் குழப்பங்கள் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை, குடும்பத்தில் உறவுகளுக்கு இடையே பிரச்சனைகள் இருக்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும். சின்ன சின்ன மன சஞ்சலத்தால் சோகமாகவே இருப்பீர்கள். கூடுமானவரை பொறுமையாக இருந்து பிரச்சனைகளில் இருந்து வெளிவர யோசிக்க வேண்டும். முன்கோப படக்கூடாது. யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது. பெரியவர்கள் சொல்வதை காது கொடுத்து நிதானமாக கேளுங்கள். நிதானத்தை இழந்தால் பிரச்சனை உங்களுக்குத்தான். தினந்தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாகத் தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மன குழப்பத்திற்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வருமானத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். அதை எப்படியாவது சமாளித்து விடுவீர்கள். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கமிஷன் வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -