இந்த வார ராசிபலன் 22/8/2022 முதல் 28/8/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

vara-palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கப்போகிறது. முடிக்கவே முடியாமல் கிடப்பில் போட்டுக் கிடந்த வேலைகளை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து செய்து முடித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழிலில் எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தில் தடைபத்து வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். கூடுமானவரை பண விஷயங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. யாருக்கும் நம்பி பணம் கொடுக்காதீங்க. கைநீட்டி பணம் கடனாக வாங்காதீங்க. சொத்து சுகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வார இறுதியில் சில வீண் விரைய செலவுகள் ஏற்படும். தினம் தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன தடைகள் இருக்கும். அதாவது ஒரு வெற்றியை நோக்கி செல்வதற்கு நீங்கள் பல தடைகளை தாண்டி செல்ல வேண்டியதாக இருக்கும். ஆனால் கட்டாயமாக வெற்றி நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். ஆகவே எந்த முயற்சியிலும் சோர்ந்து போகக்கூடாது. மன உறுதியோடு போராட வேண்டும். சேமிப்பு அதிகரிக்கும். வருமானத்தை உயர்த்த தேவையான வழிகளை தேடிக் கொள்வீர்கள். சில பேருக்கு வெளியூர்களில் வேலை வாய்ப்புகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் காட்ட வேண்டும். சொந்தத் தொழிலில் வரும் போட்டிகளை எதிர்த்து சமாளித்துக் கொள்வீர்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் தாமதம் இருக்கும். எந்த முயற்சியை எடுத்தாலும் அதில் சில தோல்விகள் வந்து எட்டிப் பார்க்கும். வருமானத்தில் பற்றாக்குறை இருக்கும். வீண் செலவு அதிகரிக்கும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாத சங்கடங்கள் ஏற்படும். இப்படி சின்ன சின்ன சிக்கல் .களை எதிர் கொள்ள வேண்டியதாக சில சிரமங்கள் உங்களுக்கு வரும். இருப்பினும் உங்களுடைய பேச்சுத் திறமையால் எல்லாவற்றையும் சமாளித்து விடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகள் சில விஷயங்களை சொன்னால் அதை காது கொடுத்து கேட்க வேண்டும். முன் கோபம் வரக்கூடாது. குடும்பத்தில் அனுசரணையாக நடக்க வேண்டும். குறிப்பாக கணவன்மார்கள், மனைவி சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆத்திரப்பட்டு முன் கோபப்படக்கூடாது. தேவையற்ற விரோதங்களை சம்பாதித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்கள் பேச்சுக்கு மரியாதை கொடுத்த நடக்க வேண்டும். மற்றபடி நிறைய நல்ல விஷயங்கள் உங்களுக்கு இந்த வாரம் காத்துக் கொண்டிருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மட்டும் கொஞ்சம் சிந்தித்து செயல்பட வேண்டும். பெரியோரது ஆலோசனைகளை கேளுங்கள். அவசரப்பட்டு ஆழம் தெரியாமல் எதிலும் காலை விடாதீங்க. வீட்டில் பொன் பொருள் சேர்க்கை இருக்கும். தினம் தோறும் குரு பகவான் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லாவற்றையும் பிளான் செய்து சக்சஸ் பண்ணுவீங்க. எந்த வேலைகளை எப்போ செய்தால் அது சரியாக வரும் என்பது உங்களுக்கு தெரியும். புதியதாக  வாகனம் வீடு நிலம் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்த நிலத்தில் வீடு கட்டுவதற்கான வாய்ப்புகள் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் அதை சமாளிக்க நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். செய்யும் தொழில் மட்டும் எதிர்பார்த்த லாபம் கொடுக்காது. அதிக உழைப்பு போட்டால் தான், கொஞ்ச லாபமாவது கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை அலட்சியமாக வைக்கும் போது சில இழப்புகள் உண்டாகும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். அதாவது அலட்சியப் போக்கோடு வேலை செய்யக்கூடாது. சமையலறையில் வேலை செய்யும் பெண்களாக இருந்தாலும் சரி, வண்டி ஓட்டும் ஆண்களாக இருந்தாலும் சரி, அல்லது மற்ற வேலைகளை பார்க்கக் கூடியவர்களாக இருந்தாலும் சரி, உங்களுடைய வேலையை நீங்கள் கவனத்தோடு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு கத்தியை பிடித்து காய் நறுக்கும் போதும் கூட கொஞ்சம் கவனம் தேவை. சின்ன சின்ன காயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். வியாபாரம் நல்லபடியாக நடக்கும். அழகு சாதன பொருட்களை விற்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. உங்களுடைய பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுறுசுறுப்பான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலைகளை செய்வதோடு சேர்த்து அடுத்தவர்களுடைய வேலையையும் செய்து முடித்து விடுவீர்கள். அந்த அளவிற்கு எறும்பு போல உற்சாகம் உங்களோடு இருக்கும். ஆனால் வீட்டில் சுபகாரிய விஷயங்களில் சின்ன சின்ன தடைகள் உண்டாகும். விரும்பிய சில விஷயங்கள் கிடைக்காமல் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும். ஆனால் சில எதிரிகள் தொல்லை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் சிறிய குறைபாடுகள் உண்டாகும். நேரத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நிறைய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனை உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும். பிரச்சனை என்று வரும்போது உங்களுடைய நண்பர்கள் உதவி கரம் நீட்டுவார்கள். உறவினர்களும் உங்களுடைய முன்னேற்றத்திற்கு கை கொடுப்பார்கள். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரம் 22, 23, ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினம்தோறும் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்கு உச்சரிப்பது நல்லது.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பண வரவு இருக்கும். சேமிப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கும். இருப்பினும் உங்களுடைய வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக பணத்தை செலவு செய்யாதீங்க. கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய கடின உழைப்பை பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். வீட்டில் சுபகாரிய செலவுகள் ஏற்படும். பிரிந்த கணவன் மனைவி சேர்வதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. எதிர்ப்பாலின நட்போடு பழகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். யாரை நம்பியும், எதற்கும் இதை செய்கிறேன், அதை செய்கிறேன் என்று வாக்கு கொடுத்து மாட்டிக்காதீங்க. உங்கள் வேலையை நீங்கள் பார்த்துக் கொண்டால் வரும் சில சங்கடங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த வாரம் 24, 25 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லேசான மன குழப்பம் இருக்கும். பிரச்சனைகள் வந்தால் எந்த முடிவை எடுக்கலாம் என்று தெரியாமல் சில சமயம் தடுமாறுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடந்துக்கோங்க. எதிலும் அவசரம் வேண்டாம். வீடு வாங்குவது விற்பது போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் அதில் பொறுமை காட்ட வேண்டும். நிச்சயதார்த்தம் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். காதல் கைகூடும். வாகனங்களை ஓட்டி செல்பவர்கள் ரொம்பவும் கவனமாக இருக்க வேண்டும். ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டி செல்லக்கூடாது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டக்கூடாது. தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் பிரச்சனைகளுக்கு உண்டான சரியான தீர்வை எடுப்பீர்கள். குழப்பமான மனநிலையிலும் உங்களுக்கு எது சரி, என்று படுகிறதோ அந்த முடிவு உங்களுக்கு நன்மையை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். நிறைய சிக்கல்களுக்கு உண்டான தீர்வை இந்த வாரம் பெறுவீர்கள். எதிர்ப்பாலின நட்போடு பழக வேண்டாம். அது உங்களுக்கு பிரச்சனையை கொடுத்து விடும். கடன் சுமை மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். படிப்படியாக கடனை திருப்பிக் கொடுக்க பாருங்கள். மேலும் மேலும் கடன் வாங்கும் தவறை செய்யாதீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கும் பழக்கத்தை அடியோடு நிறுத்தி விடுவீர்கள். காலம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்து இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நல்லது. வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வெளியூர்களில் வேலை செய்பவர்களுக்கு சில மன கஷ்டம் இருக்கும். தினம்தோறும் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்யுங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்தையும் நம்பிக்கையோடு செய்வீங்க. இதுநாள் வரை இருந்த கஷ்டங்களுக்கு, இந்த வாரம் விடிவு காலம் பிறக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சின்ன சின்ன வியாபாரிகள் கூட நிறைய லாபத்தை காண்பீர்கள். சில உறவுகள் உங்களுக்கு சில பிரச்சனைகளை கொடுக்கலாம். குடும்பம் சம்பந்தப்பட்ட தகராறுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் சொந்தம் பந்தங்களை எதிர்த்துக் கொள்ள வேண்டாம். வார்த்தையில் நிதானம் தேவை. நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்தை நல்ல விலைக்கு விற்பீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு, மனைவியின் ஆலோசனையுடன் பொறுமையாக முடிவுகளை எடுக்கும் போது நல்லது நடக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -