இந்த வார ராசிபலன் 29/8/2022 முதல் 03/9/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

vara-palan1
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய தனித்திறமை வெளிப்பட்டு அதன் மூலம் பெரிய பெரிய வெற்றிகளை காண்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சில பேருக்கு எதிரிகளின் மூலம் தொந்தரவு இருக்கும். இந்த வார இறுதியில் மன கஷ்டம் தரக்கூடிய சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த வாரம் துணிச்சலான வாரமாக இருக்கப் போகின்றது. மனதில் இருக்கும் பயத்தை எல்லாம் தூக்கி வெளியே போட்டு விட்டு, தைரியமாக எல்லா முடிவையும் எடுக்கப் போகிறீர்கள். பாராட்டுகள் குவியும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். மாணவர்களுக்கு இந்த வாரம் நல்ல முன்னேற்றமான வாரமாக அமையப் போகின்றது. விவசாயம் செய்வார்கள் குடிசை தொழில் செய்பவர்கள் சிறு வியாபாரிகள் இவர்கள் எல்லாம் நல்ல லாபத்தை பெறுவார்கள். விரோதத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். எதிரிகளின் சூழ்ச்சியால் உங்களுக்கு சில இடங்களில் அவமானம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பக்குவத்தில் இருப்பீர்கள். திறமையாக வேலை செய்து அடுத்தவர்களின் பாராட்டை பெறுவீர்கள். எடுத்த காரியம் வெற்றி பெறும். சொத்து வாங்கக் கூடிய யோகம் உள்ளது. குறிப்பாக தாய் வழி சம்பந்தப்பட்ட உறவுகளால் உங்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கும். வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய வேண்டும் என்று உங்கள் கனவு கூடிய சீக்கிரம் நினைவாக போகின்றது. தடைப்பட்டு வந்த திருமண காரியம் மீண்டும் நடக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் சுமை படிப்படியாக குறையும். உங்களுடைய உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற மருத்துவ செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் அனாவசியமாக யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மை நடக்கப் போகின்றது. உங்களுடைய புதிய முயற்சிகள் வெற்றி தரும். திறமைக்கு உண்டான அங்கீகாரத்தை பெறுவீர்கள். தாய் வழி சம்பந்தப்பட்ட சொத்து பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களுடைய பேச்சு திறமையால் சில பேருடைய வாயை அடைப்பீர்கள். உங்களிடம் பேசவே எதிராளி பயப்படுவார்கள். கணவன் மனைவிக்கிடையே மட்டும் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்தால் பிரச்சனை இல்லை. தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். சொத்து சேர்க்கை இருக்கும். தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்கள் வாங்குவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. செய்யும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தேவையற்ற செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். ஆடம்பர செலவு கடன் வாங்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவிடும். பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். எதிரியை தோற்கடிப்பீர்கள். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. உங்களுடைய வேலையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அடுத்தவர்களுடைய பேச்சை கேட்டு, குறுக்கு வழியில் செல்லக்கூடாது. குறிப்பாக இதில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று யார் சொன்னாலும் நம்பாதீங்க. உங்களுடைய அதிக முதலீட்டை யாரை நம்பியும் எந்த தொழிலிலும் போடாதீங்க. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி பேசக்கூடாது. இடத்திற்கு தகுந்தவாறு காய் நகர்த்தும் விதையை கற்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பிழைக்க முடியும். எதிர் பாலின நட்பு கூடவே கூடாது. குறிப்பாக முன்பின் அறிமுகம் இல்லாத, முகம் தெரியாத நபரிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். புதியதாக தொழில் தொடங்குபவர்கள் இந்த வாரம் முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உங்களுடைய சொந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வீட்டில் உறவினர்களின் வருகையால் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். வீண்விரயம் ஏற்படும். பிளான் செய்யாமல் எந்த காரியத்திலும் காலை வைக்காதீங்க. நீங்க ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பிடிவாதத்தை விட்டு விட்டு, வாழ்க்கை போகும் போக்கில் நீங்கள் சென்றால் பிரச்சனை இல்லை. தினம் தோறும் நவகிரக வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கும். பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பண சிக்கல் தீரும். தீர்க்க முடியாத சில சிக்கல்களுக்கு கூட இந்த வாரம் நல்லதொரு தீர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதிற்குள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திட்டமிட்ட காரியங்கள் எல்லாம் சுறுசுறுப்பாக நடக்காது. எல்லாம் கொஞ்சம் பின் தங்கிய நிலையில் இருக்கும். நிதி நிலைமை சீராக அமையாது. கையில் இருக்கும் பணம் தண்ணீராக கரையும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் சொந்த தொழிலில் பெரியதாக பிரச்சினை வருவதற்கு வாய்ப்பு கிடையாது. வேலை செய்யும் இடத்தில் நீங்கள் செய்யும் பணி சுமூகமாகத்தான் நடைபெறும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அதிகமாக கோபப்படாதீர்கள். அவர்கள் தவறு செய்தால் பொறுமையாக சொல்லி திருத்துங்கள். தினம்தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வாரம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மருத்துவ செலவு அதிகரிக்கும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. கடனை திருப்பிக் கொடுப்பதில் சிக்கல் உண்டாகிவிடும். சொந்த தொழிலிலும் எதிர்பார்த்த லாபம் என்பது கிடைக்காது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அலட்சியத்தோடு நடந்து கொண்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு கை நிறைய பணம் சேரும். சில விஷயங்களில் நீங்கள் எடுக்கும் துணிச்சலான முடிவு உங்களுக்கு நன்மையை தரும். வீட்டில் சுப மங்கல நிகழ்ச்சிகள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. யாரிடமும் சண்டைக்கு போகாதீங்க. வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள். பிரச்சனை என்று வந்தால் கூட அந்த இடத்தில் இருந்து நீங்கள் அமைதியாக வெளியே சென்று விட வேண்டும். பொறுமையாக இருந்தால் இந்த வாரம் ஜெயித்து விடலாம். சொந்த தொழிலில் நல்ல லாபம் இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அடுத்தவர்களை நம்பி எதையும் செய்யாதீங்க. ஒரு கான்ட்ராக்ட் கையொப்பம் இடுவதாக இருந்தாலும், அதை நீங்கள் தான் முழுமையாக படிக்க வேண்டும். செலவு கொஞ்சம் அதிகரிக்க தான் செய்யும். வரவுக்கு மீறிய செலவு இருப்பதால் கொஞ்சம் பண பிரச்சனை இருக்கும். இந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாம் நல்லபடியாக நடக்கப் போகின்றது. உங்களுடைய திறமை வெளிப்படக்கூடிய வாரம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். இவ்வளவு நாளாக வேலையே இல்லாமல் சும்மாவே இருந்தவர்களுக்கு கூட சூப்பரான வேலை கிடைக்கும். பிரச்சனைகளை சமூகமாக தீர்த்து வைப்பீர்கள். பிரச்சனை என்று உங்களிடம் யார் வந்து நின்றாலும் அவர்களுக்கு உதவி செய்யும் பெருந்தன்மை உங்களிடம் இருக்கும். அடுத்தவர்களுக்கு ஓடி ஓடி போய் உதவி செய்யும் உங்களுக்கு பிரச்சனை என்றால் உதவி கரம் நீட்ட ஒருத்தர் கூட இருக்க மாட்டாங்க. கலை துறையினருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு அமோகமான லாபம் உண்டு. குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன சண்டைகள் அவ்வப்போது வந்து எட்டி பார்க்கும். தினம்தோறும் மீனாட்சி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -