இந்த வார ராசிபலன் 04/12/2023 முதல் 10/12/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

dec 04 to 10
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை போதுமான அளவு பணவரவு இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மற்றவர்களின் விஷயத்தில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது நன்மை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சுமூகமாக நல்ல முறையில் நடைபெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு எதிர் பாராத பண வரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல் நலனில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேரும் வாய்ப்பு ஏற்படும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை லாபம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். அதனால் பழைய கடன்களை தீர்ப்பதற்காக முயற்சி செய்வீர்கள். தனியாக தொழில் செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு தாராளமாக இருக்கும். இருந்தாலும் வரவைவிட செலவு அதிகமாக இருக்கும் என்பதால் ஒரு சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உடல் நலனில் சிறிது கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனத்துடன் இருப்பது நன்மையைத் தரும். பிறரிடம் பேசும் பொழுது கவனத்துடன் நிதானத்துடனும் பேசுவதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக எந்த முயற்சிகளையும் முதலீடுகளையும் செய்வதை இந்த வாரம் தள்ளி வைப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த பணவரவு கிடைப்பது கடினமாகவே இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கக்கூடும். உடல் நலனில் அக்கறை தேவை. உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அனைத்தும் நீங்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருந்தாலும் உடன் பணிபுரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைப்பது கடினமாகவே இருக்கும். அதனால் கூடுதலாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பணவரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையுடன் செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு தாராளமாக இருக்கும். எவ்வளவு செலவுகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. முடிவுகளை எடுக்கும் பொழுது பொறுமையை கையாளுவது மிகவும் அவசியம்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை விரைவாக செய்து முடிப்பதன் மூலம் வேண்டிய சலுகைகளை பெறலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்காது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கு தொழிலில் எந்தவித சலுகைகளையும் கொடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல்நலம் சீராகும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். உறவினர்கள் வருகையால் சிறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை குறைவாகவே இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். அதனால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண ரீதியாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டு பெரும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை போதுமான அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு கடன் வாங்கும் அளவிற்கு செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உடல் நலனில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து சேருவர்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவும். திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும். கடினமாக உழைத்து அதிக லாபத்தை பெறுவீர்கள். அதனால் தொழிலை மேலும் விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு கிடைக்கும். இருந்தாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கையாளுவது பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற நற்பெயர் கிடைக்க வாய்ப்புகள் குறைவாகவே இருக்கிறது. எதிர்பார்த்த சலுகைகள் எதுவும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. இருப்பினும் வேலையை கவனத்துடன் செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை லாபம் சுமாராகத்தான் இருக்கும். தொழிலை மேம்படுத்த எடுக்கும் முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ரங்கநாத பெருமாளை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆதாயம் தரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். செலவுக்கேற்ற பணவரவு தேடி வரும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாக இருக்கும். புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்வதை இந்த வாரம் தவிர்ப்பது நன்மை தரும். தொழிலைப் பொருத்தவரை லாபம் அதிகரிக்க அதிகமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். மறைமுக எதிரிகளால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. கவனம் தேவை. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாமர்த்தியமாக செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எந்த செயலில் ஈடுபடுவதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து உடன் இருப்பவர்களின் ஆலோசனையை பெற்று ஈடுபடுவது நன்மையை தரும். சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலை நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை விரிவு படுத்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த பணவரவு ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மையை தரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. புதிதாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும் வாய்ப்புகள் இருக்கிறது.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதுவரை இருந்து வந்த அவப்பெயர் நீங்கி மதிப்பும் மரியாதையும் அலுவலகத்தில் அதிகரிக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். புதிய தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு இந்த வாரம் ஏற்ற வாரமாக திகழப்போகிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விஷ்ணுவை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக பண வரவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு பொருள் சேர்க்கை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியை நிறைந்திருக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தையும் பெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடன் பணி புரிபவர்களின் ஆதரவு அதிகமாக இருக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்களும் தொழிலில் முதலீடு செய்ய நினைப்பவர்களும் இந்த வாரத்தில் மேற்கொள்வதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

- Advertisement -