இந்த வார ராசிபலன் 14-12-2020 முதல் 20-12-2020 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகின்றது. தேவைக்கு அதிகமாகவே உங்களுக்கு பணவரவு இருக்கும். இருப்பினும், அனாவசிய செலவை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். மாத இறுதியில் பணத்தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அலுவலக பணியாக இருந்தாலும் சரி, சொந்தத் தொழிலாக இருந்தாலும் சரி, உடன் வேலை செய்பவர்களுடன் அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்வது நல்லது. வீண் விவாதங்கள் வேண்டவே வேண்டாம். பிரச்சினைகள் நீங்க தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சோம்பலான வரமாகத்தான் அமையப்போகின்றது. முடிந்தவரை, உங்களது சோம்பேறித்தனத்தை தள்ளிவைத்துவிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். இல்லையேல் அலுவலகப் பணியில் பிரச்சனை உண்டாகும். சொந்தத் தொழிலில் தேவையற்ற பிரச்சினைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதோடு சேர்த்து உங்களது உடல் நிலையையும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வார இறுதியில் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க, விடிவு காலம் பிறந்துவிடும். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் இதுநாள் வரை எதிர்பார்த்திருந்த நல்ல விஷயங்கள் உங்கள் செவிகளை வந்து சேரும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வும், சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரப் போகின்றது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சொந்த தொழிலை தாராளமாக கடன் வாங்கி விரிவுபடுத்தலாம். கடன் தொகையை வங்கிகளில் மட்டும் வாங்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கப்போகின்றது. நீங்களே எதிர்பார்க்காத அளவில் தொலைபேசி மூலமாகவோ, நண்பர்களின் மூலமாகவோ நல்ல செய்தி உங்களை வந்து சேரும். அரசாங்க வேலைகளை நிலுவையில் வைத்திருந்தால், இந்த வாரம் தாராளமாக தொடங்கலாம். அரசாங்க ஊழியர்களுக்கும் இந்த வாரம் அதிர்ஷ்டம் தரும் வாரமாக தான் இருக்கப் போகின்றது. உடல் நிலையை மட்டும் சற்று கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். வேலைப்பளு காரணமாக சாப்பிட மறந்து விடாதீர்கள். காலை எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்வது பல நன்மைகளை உங்களுக்கு தேடித்தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரம் திறமையாக செயல்பட்டு, உங்களை சுற்றி உள்ளவர்களிடத்தில் நல்ல பெயரை சம்பாதிக்கப் போகிறீர்கள். உங்களை திட்டியவர்கள் எல்லாம் இந்த வாரம் உங்களை புகழ்ந்து தள்ள போகிறார்கள். இருப்பினும் தலைகனம் வராமல் அடக்கத்தோடு இருந்து கொள்ளுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது. உற்சாகமாக, திறமையாக நீங்கள் செய்யப்போகும் வேலையால் நீங்களே எதிர்பாராத லாபம் உங்களை வந்தடையும். தேவையற்ற சிக்கல்கள் காணாமல் போய்விடும். மன நிம்மதி கிடைக்கும். குலதெய்வ வழிபாட்டை குடும்பத்தோடு செய்ய மறவாதீர்கள்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்தவாரம் தாராளமாக புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். இதை செய்யலாம், அதை செய்யலாம் என்று மனதிற்குள் பிளான் வைத்திருந்தால் உடனடியாக அதை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள். நிச்சயம் வெற்றி உங்களுக்கே. முடிந்தவரை செலவை குறைத்துக் கொள்ளுங்கள். வீண் வம்புக்கு செல்லாதீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பயணங்களின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ள வேண்டியது அவசியம். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை மனதிற்குள் உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு பிரச்சினைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். உங்களுடைய விடாமுயற்சியையும், மன உறுதியையும் மட்டும் கைவிட்டு விடாதீர்கள். நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். எந்த இடத்திலும், பிரச்சனை வந்தாலும் சரி, பொய் சொல்லி பிரச்சினையில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். பயணங்கள் நன்மையில் முடியும். முடிந்தவரை கடன் வாங்குவதை தவிர்த்து கொள்வது நல்லது. தினம் தோறும் நவகிரக சன்னிதிக்குச் சென்று சனி பகவானை வணங்கினால் பல பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. வீட்டில் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. உறவினர்களிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்த்துக் கொள்ளவும். மற்றபடி புதியதாக தொழில் தொடங்கினால் லாபம் கிடைக்கும். அலுவலகப் பணியில் எந்தப் பிரச்சனையும் வராது. சொந்தப் பிரச்சினை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தவரை வீட்டு விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தினம்தோறும் பெருமாள் வழிபாடு நல்ல பலனைக் கொடுக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகின்றது. வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடைபெறும். தேவையற்ற சிக்கல்களில் சிக்கி இருந்தவர்கள், அந்த சிக்கலில் இருந்து இந்த வாரம் வெளிவந்து விடுவார்கள். மனநிம்மதியும் சந்தோஷத்திற்கும் எந்த குறைவும் இருக்கப்போவதில்லை. வண்டி வாகனங்களில் செல்லும் போது மட்டும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். மற்றபடி பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் பொறுமையோடு நடந்துகொள்ள வேண்டியது அவசியம். எந்த விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுத்துக் விட்டு, பின் வருத்தப்படுவது பிரயோஜனமில்லை. அலுவலகப் பணியில் உடன் பணிபுரிபவர்களுடன் சின்ன சின்ன சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. உஷாராக இருங்கள். உங்களுடைய வேலையை நீங்கள் செய்து கொள்ளுங்கள். யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். முன்கோபம் வேண்டவே வேண்டாம். ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் எதிலுமே கவனமாக இருக்க வேண்டும். யாரை நம்பியும் பணம் கொடுக்க வேண்டும். யாரை நம்பியும் பணம் வாங்கவும் வேண்டாம். சிலர் உங்களை ஏமாற்றுவதற்கு என்றே, உங்களை சுற்றி சுற்றி வந்து பாசாங்கு வார்த்தைகளை பேசுவார்கள். நம்பி மயங்கி விடாதீர்கள். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும். உசாரா இருந்துக்குங்க! தினமும் காலை எழுந்தவுடன் 10 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய உறவினர்கள், உங்களுடைய முன்னேற்றத்திற்கு கை கொடுப்பார்கள். சேமிப்பு உயரும். சந்தோஷம் அதிகரிக்கும். உங்களுடைய மனைவிக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கித் தந்து மகிழ்வீர்கள். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. சுப விரயச் செலவுகள் வந்து கொண்டே இருக்கப் போகின்றது. தினம் தோறும் முருகப் பெருமான் வழிபாட்டை மறக்க வேண்டாம்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்

- Advertisement -