இந்த வார ராசிபலன் 28.12.2020 முதல் 03.01.2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக இருக்கப் போகின்றது. துணிச்சலுடன் எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். மன தைரியம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் ஆசையைக் கூட, துணிச்சலுடன் எதிர்கொண்டு நிறைவேற்றிக் கொள்வீர்கள். இத்தனை நாட்களாக நல்லது கெட்டது தெரியாமல் சிக்கிக் கொண்டிருந்த சிக்கல்களிலிருந்து, இனி விடிவு காலம் பிறக்கப் போகின்றது. தெளிவான மனதை பெற ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்க!

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகின்றது. குடும்பத்தில் உறவினர்களின் வருகை இருக்கும். சுப செலவுகள் வந்து கொண்டே இருக்கும். சொந்தத் தொழில் லாபத்தோடு செல்லும். அலுவலகப் பணியில் உற்சாகம் கூடும். மன நிறைவு உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களிலிருந்து, எதிர்பார்த்த தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். பண கஷ்டம் இருக்காது. ஆனாலும், அதேசமயம் சேமிக்கவும் முடியாது. தினம் தோறும் மகாலட்சுமியை நினைத்து வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். உங்களை ஏமாற்றுவதற்காகவே சிலபேர் உங்களை தேடி வரப் போகிறார்கள். யாரை நம்பியும் பணத்தை கொடுக்காதீர்கள். யாரிடமிருந்தும் பணத்தை உங்கள் கைகளால் வாங்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து யாரை நம்பியும் போட்டுவிடாதீர்கள். தேவையற்ற மன கஷ்டம் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. எல்லா பிரச்சனைகளிலும் இருந்து சற்று ஒதுங்கிக் கொள்வது உங்களுக்கு நல்லது. வாயை திறக்காதீர்கள். மௌனம் மட்டுமே பதிலாக வைத்துக்கொள்ளுங்கள். தினந்தோறும் விநாயகர் வழிபாடு, அல்லது அனுமன் வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக தான் அமையப்போகின்றது. தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். சந்தோஷமான மனநிலை இருக்கும். அவசரப்பட்டு யாரை நம்பியும் எந்தத் தொழிலிலும் வருமானம் அதிகமாக வரும் என்று நம்பி, முதலீடு செய்ய வேண்டாம். சொந்தத் தொழில் செய்பவர்கள் அப்படியே உங்களது தொழிலை வழி நடத்திச் செல்லுங்கள். மற்றபடி வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நல்ல முன்னேற்றமான வாரமாக தான் இருக்கப்போகின்றது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சுமாரான வாரமாக தான் இருக்கப்போகின்றது. முடிந்தவரை வெளி இடங்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது நல்லது. நீண்டதூர பிரயாணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். வெளியிடங்களில் சாப்பிட வேண்டாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது அலுவலகப் பணியும் சொந்தத் தொழிலும் எப்போதும்போல செல்லும். அவ்வபோது சில சில பிரச்சினைகள் வந்தாலும், அதை நீங்கள் சமாளித்துக் கொள்வீர்கள். கொஞ்சம் அசதி இருக்கத்தான் செய்யும். மன அமைதிக்காக காலையில் ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை உச்சரித்து தியானம் செய்வது நல்லது.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் பொறுமை காக்க வேண்டிய வாரமாக அமையப்போகின்றது. இந்த வாரம் எந்த விஷயத்திலும் புதியதாக எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். அவசரமாக அவசியமாக முடிவு எடுக்க வேண்டும் என்றால் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு கொள்ளுங்கள். வண்டி ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். மாஸ்க் போடாமல் வெளியே செல்ல வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். எந்த விஷயத்திலும் அலட்சியப்போக்கை காட்டாமல், கொஞ்சம் கவனத்தோடு இருந்தால் பிரச்சினைகளிலிருந்து சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகின்றது. வருமானத்திற்கு எந்த ஒரு குறையும் இருக்காது. நீங்கள் கேட்ட இடத்திலிருந்து நிச்சயம் கடன் தொகை உங்கள் கைக்கு வந்து சேரும். சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். அதிக வட்டிக்கு மட்டும் கடனை வாங்கி விடாதீர்கள். வீட்டில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல முன்னேற்றம்தான். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை கொடுக்கும்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சினைகள் துயரங்கள் துன்பங்கள் எல்லாம் படிப்படியாக குறைய ஆரம்பிக்க போகின்றது. அதற்கான வேலையை இந்த வாரமே நீங்கள் செய்ய தொடங்கப் போகிறீர்கள். சந்தோஷமாக தைரியமாக, மன பயத்தை தள்ளிவைத்து விட்டு, வேலையை தொடங்குங்கள். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். அசதி ஏற்படும். விடாமுயற்சி வெற்றியைத் தரும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்க்கும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. அனாவசியமான பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். மேலதிகாரிகள் திட்டினாலும் சரி, அதை வாங்கிக்கொண்டு, கண்டும் காணாமல் இருப்பது தான் நல்லது. அவசரப்பட்டு வேலையை விட்டுவிட வேண்டாம். தொழிலில் நல்ல லாபம் இருக்கும். பொறுமை காத்தால் எல்லா விஷயத்திலும் வெற்றி உங்களுக்கே! எல்லா விஷயங்களிலும் சற்று நிதானமாக சிந்தித்து செயல்படுங்கள். மற்றபடி தேவையற்ற சஞ்சலங்கள் படிப்படியாக இனி குறைய ஆரம்பித்துவிடும். பைரவர் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள் இந்தவாரம் எல்லாரையும் உங்களுடைய பேச்சுத் திறமையால் கவர்ந்து இழுக்க போகிறீர்கள். உங்களது திறமையை பார்த்து அடுத்தவர்கள் வாய் மேல் கையை வைக்கும் அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள். அந்த அளவிற்கு உங்களது திறமை வெளிப்பட போகின்றது. வருமானம் வந்துகொண்டே இருக்கும். அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். சேமிப்பில் வைப்பதுதான் நல்லது. கடுமையாக கஷ்டப்பட்டு உழைப்பீர்கள். அதற்கேற்ற லாபத்தையும் அடைவீர்கள். அதை எப்படி சேமித்து வைப்பது என்று மட்டும் சிந்திக்க மாட்டீங்க! கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ. தினம் தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக தான் அமையப்போகின்றது. விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்கான யோகம் உண்டு. சொத்துக்கள் வாங்குவதாக இருந்தாலும், வாங்கலாம். ஆனால், பண பரிமாற்றத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். முன்கோபத்தை தள்ளி வைத்து விடுங்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். பொறுமையாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அலுவலக பணி எப்போதும் போல சுமுகமாக செல்லும். சொந்த தொழில் முதலீடு செய்யாதீர்கள். அதிகப்படியான கடனையும் வாங்க வேண்டாம். பிற்காலத்தில் அடைக்க நீங்கள்தான் சிரமப்பட வேண்டும். பெருமாள் வழிபாடு நன்மையை கொடுக்கும்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. இதுநாள்வரை நஷ்டத்தில் இருந்ததும், லாபமாக மாறும். நல்ல முன்னேற்றம் உண்டு. வரும் லாபத்தை சேமிக்க பாருங்கள். பிற்காலத்தில் இந்த சேமிப்பு மட்டும்தான் உங்களை காப்பாற்ற போகின்றது. மற்றபடி சொந்தத் தொழிலும், அலுவலகப் பணியும் எப்போதும்போல சுமுகமாக செல்லும். உங்களது முன்கோபத்தால் தான் பல இழப்புகளை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கோபத்தை குறைத்துக் கொண்டு, நிதானமாக செயல்பட்டு, நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள். பின் எல்லாம் உங்களுக்கு சாதகமாக அமையப் போகின்றது. தினந்தோறும் முருகன் வழிபாடு செய்ய மறந்து விடாதீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்