ஜோதிடம் : இந்த வார ராசி பலன் – டிசம்பர் 9 முதல் 15 வரை

Indha vara rasi palan

மேஷம்

Aries zodiac sign

இந்த வாரம் உங்களுக்கு பணவரவு சீராக இருக்கும். திருமணத்தைப் பற்றி பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்தால் அது சுமூகமாக முடியும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்கள் கடன்களை அடைப்பதற்காக நீங்கள் எதிர்பார்க்காத வருமானம் உங்களை வந்து சேரும். நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும் வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

Taurus zodiac sign

தேவைக்கு அதிகமாகவே பணவரவு கிடைக்கும் வாரமாக இது அமையும். திருமண விஷயங்களில் அவசரமாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. கடனாக பணம் கொடுக்கவும் வேண்டாம். கடனாகப் பணம் பெறவும் வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்

Gemini zodiac sign

உங்களது தொழிலிலும் வியாபாரத்திலும் சில மாற்றங்கள் வர வாய்ப்பு உள்ளது. நிதானமாக செயல்பட வேண்டிய வாரம் இது. பிரச்சினைகள் எதுவும் வராது. ஆனால் பொறுமையாக இருப்பது நல்லது. இந்த வாரத்தில் நல்ல காரியங்கள் எதையும் தொடங்க வேண்டாம். பண பரிமாற்றத்தில் கவனம் தேவை.

கடகம்

zodiac sign

இந்த வாரம் உங்களுக்கான வருமானம் சீராக இருக்கும். ஆனால் சுப செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சிம்மம்

Leo zodiac sign

மிகச் சிறப்பான நன்மைகள் நடக்கும் வாரமாக இது அமையும். உங்கள் பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும். பணவரவு சீராக இருக்கும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் ஏற்படும். வேலை செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கான பதவி, உங்களைத் தேடி வர வாய்ப்பு உள்ளது.

கன்னி

Virgo zodiac sign

நீங்கள் இந்த வாரம் மன தைரியத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் பண வரவு சீராக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு, வேலை செய்யும் இடத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். உங்கள் வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். நன்மை தரக்கூடிய வாரமாக இருந்தாலும், உங்கள் பேச்சில் கோபத்தை குறைத்து சாந்தமாக பேசுவது நல்லது.

துலாம்

Libra zodiac sign

வருமானம் சீராக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வண்டி, வாகனம் வாங்குவதாக இருந்தால் இந்த வாரத்தில் வாங்கலாம். எதிர்பாராத யோகம் வரும். உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. கணவன் மனைவி உறவு சுமுகமாக இருக்கும்.

விருச்சிகம்

Scorpius zodiac sign

தேவைக்கு அதிகமான வருமானம் இருந்தாலும், இந்த வாரம் உங்களுக்கு அனாவசியமான செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற அலைச்சலும் ஏற்படும். வெளிநாட்டில் உள்ளவர்கள் உங்களது விசா விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. பண பரிமாற்றத்தில் கவனம் தேவை. உடல் நலனில் அக்கறை கொள்வது அவசியம்.

தனுசு

Sagittarius zodiac sign

எந்த ஒரு முடிவையும் அவசரமாக இந்த வாரத்தில் எடுக்க வேண்டாம். உங்களின் மனநிலை குழப்பமாக இருக்கும். பணவிஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீட்டில் உள்ள பெண்கள் வெளி ஆட்களை நம்ப வேண்டாம். சற்று சிந்தித்து செயல்பட வேண்டிய வாரமாக இது அமையும்.

மகரம்

Capricornus zodiac sign

உங்களுக்கான பண வரவு சீராக இருக்கும். உங்களின் பெற்றோரின் உடல்நலனில் கவனம் செலுத்துவது அவசியம். வேலை மாற்றம், இடமாற்றம் உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் தாய்நாட்டிற்கு வருவார்கள். பெண்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். தனியாக வெளியே செல்லும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கும்பம்

Aquarius zodiac sign

நீங்கள் செய்யும் தொழிலானது லாபம் தரும். உங்களுக்கு சிறப்பான வாரமாக இது அமையும். புதிய சொத்துக்கள் வாங்குவதாக இருந்தால் இந்த வாரத்தில் வாங்கலாம். நீங்கள் செய்யும் சுப காரியங்களை இந்த வாரத்தில் செய்து முடிப்பது நல்லது. நிச்சயம் வெற்றி தரும்.

மீனம்

Pisces zodiac sign

நீங்கள் நினைத்ததை நிறைவேற்றுவதற்கான காலம் இது. உங்கள் தொழில் லாபத்தை கொடுக்கும். பணவரவு சீராக இருக்கும். வண்டி வாகனத்தில் செல்லும் போது மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது சற்று கவனமாக செயல்பட வேண்டும்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.