இந்த வார ராசிபலன் 12/12/2022 முதல் 18/12/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan4
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதி தரக்கூடிய வாரமாக அமையப் போகின்றது. நீண்ட நாள் தீர்க்க முடியாத சிக்கல்கள் எல்லாம் இந்த வாரம் தீரும். மனக்குழப்பம் நீங்கும். மனம் தெளிவு பெறும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். மருத்துவ செலவு படிப்படியாக குறைய தொடங்கும். சொந்தத் தொழிலில் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். அரசு அதிகாரிகள் உங்களுடைய பெரிய பெரிய வேலைக்கு கூட ஒத்துழைப்பு கொடுப்பார்கள். முகம் பொலிவு பெறும். தினம் தோறும் ஐயப்பன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் ஈட்ட கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எந்த வேலையை செய்தாலும் அதில் உங்களுக்கு ஒரு நல்ல லாபம் கிடைக்கும். அது பணம் காசு மட்டும் என்று கிடையாது. சில நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். அல்லது உங்களுக்கு சாதகமாக வேறு ஏதாவது வேலைகள் கூட நடக்கலாம். ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு ஆதாயம் கிடைத்து விடும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது மனிதர்களிடம் உஷாராக பழகுங்கள். கடன் பிரச்சனை படிப்படியாக குறைய தொடங்கும். குடும்பத்தில் மட்டும் அவ்வப்போது சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வெளியூர் பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. வரக்கூடிய மார்கழி மாதம் முழுவதும் தினமும் பெருமாள் வழிபாடு செய்வது நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுசரணையான வாரமாக இருக்கும். உங்களுடைய கஷ்டங்களுக்கு தோள் கொடுக்க உங்களுடைய உறவினர்களும் நண்பர்களும் இருப்பார்கள். உதவிக்கு கூப்பிட்ட குரலுக்கு 100 பேரை சேர்க்கக்கூடிய சக்தி உங்களுக்கு இருக்கும். நீங்கள் எதிர்பாராத வகையில் பெரிய லாபம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. அது தொழிலிலும் கிடைக்கலாம். அல்லது சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்கள் பக்கம் சாதகமாகியும் ஒரு தொகையானது வரலாம். கணவன் மனைவிகடையே அன்பு அதிகரிக்கும். விவசாயிகளுக்கு நன்மை நடக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். முன கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களுடைய திறமை வெளிப்படக் கூடிய வாரம் இது. தயக்கம் இல்லாமல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சில பேருக்கு சில இடங்களில் லேசாக மனது தடுமாற்றம் அடையும். குழப்பத்தோடு புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். நீண்ட தூர பயணத்திற்கு வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு பெரிய லாபம் கிடைக்கும். தினம் தோறும் மார்கழி மாதம் சிவன் வழிபாடு செய்வது நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நினைத்தபடி நடக்கக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் உஷாராக இருங்க. மூன்றாவது நபரை நம்பி புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். உங்களுக்கு தெரிந்த தொழிலை செய்வது நல்லது. குறிப்பாக பெரிய முதலீட்டை யாரை நம்பியும் போடாதீங்க. பேராசை பெருநஷ்டம் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளது. திருமணம் காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்துக் கொள்வது நல்லது. கடன் பிரச்சனை தீரும். தினந்தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சொந்த தொழிலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஒப்பந்தங்களில் கையெழுத்து போடும்போது ஒன்றுக்கு பலமுறை பத்திரங்களை படித்து பாருங்கள். அடுத்தவர்கள் பேச்சை கேட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்காதீங்க. கூட இருக்கும் நண்பர்களை கூட நம்ப வேண்டாம். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். சுப காரியத்தடை விலகும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். கோர்ட் கேஸ் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். செலவுகளை குறைப்பது நல்லது. அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. தினம்தோறும் வரக்கூடிய மார்கழி மாதத்தில் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுடைய திறமை வெளிப்படும். பேச்சாற்றல் அதிகரிக்கும். பெரிய பெரிய பிரச்சனைகளுக்கு எல்லாம் சுலபமாக பஞ்சாயத்து செய்து தீர்ப்பை வழங்கி விடுவீர்கள். அந்த அளவிற்கு உங்களுடைய புத்தி வேலை செய்யப் போகின்றது. ஆனால் அதை குறுக்கு வழியில் பயன்படுத்தாதீங்க. பிரச்சனை உங்களுக்கு தான். உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்படுபவர்கள். உங்களுக்கு பின்னால் குழி தோண்ட காத்திருப்பார்கள். எதிரிகளையும் துரோகிகளையும் சமாளிப்பது ஒரு சவாலாக அமையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சில பிரச்சனைகளை சந்தித்தாலும் இறுதியில் வெற்றி உங்களுக்கு தான். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். யாராவது உங்களை ஏமாற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய பொருட்களையும் கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான சில பொருட்கள் திருடு போகவும் வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்ற கனவு கூடிய சீக்கிரத்தில் நினைவாகும். தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். மனதிற்குப் பிடித்த மணமகள் மணமகன் அமையும். பெரிய மனிதர்களின் சந்திப்பு வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும். வேலை செய்யும் இடத்தில் பெயர் புகழ் கிடைக்கும். இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் சரியாகும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் சுமாரான வாரமாக தான் இருக்கப் போகின்றது. மனது நிம்மதியாக இருக்காது. இரவில் படுத்தால் சரியான தூக்கம் வராது. சில புதிய சங்கடங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். எந்த பிரச்சனைக்கு எப்படி முடிவை எடுப்பது என்று தெரியாமல் சிலர் திக்கு முக்காடுவார்கள். மணக்குழப்பத்திற்கு தீர்வு கிடைக்க தினமும் காலையில் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து விட்டு உங்களுடைய வேலையை தொடங்க வேண்டும். மாணவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். இல்லத்தரசிகளுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எல்லா விஷயத்திலும் மௌனம் பதிலாக இருந்தால் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். இந்த வாரம் 12ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது ஜாக்கிரதை.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரக்கூடிய வாரமாக இருக்கும். நீங்கள் அலட்சிய போக்கில் செய்த காரியம் கூட உங்களுக்கு நிறைய லாபத்தை கொடுத்து விடும். மண்ணை தொட்டால் பொன்னாக மாறும் என்று சொல்லுவார்கள் அல்லவா அப்படி ஒரு அற்புதமான பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. சந்தோஷமாக நாட்களை கழிக்க போகிறீர்கள். ஆனால் சொந்த பந்தங்களுக்கு இடையே வரக்கூடிய சின்ன சின்ன சஞ்சலங்கள் லேசாக மனக்கசப்பை கொடுக்கும். பயப்படாதீங்க, உறவுகளுக்குள் விரிசல் ஏற்படாது. மனஸ்தாபம் மட்டுமே. அடம்பிடித்து எந்த ஒரு வேலையையும் செய்யாதீங்க  உங்களுக்கு நடக்க வேண்டிய நல்லது தானாக நடக்கும். இந்த வாரம் 13, 14 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதை தினம் தோறும் அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கு போடுவது நல்லது.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரக்கூடிய வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். கமிஷன் தொழில் செய்பவர்கள் அதிக வருமானத்தை ஈட்ட முடியும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் உண்டு. பழைய கடன் வசூல் ஆகும். வருமானம் அதிகரிக்கும். மனைவியின் மூலம் நிறைய நல்லது நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது‌. நீண்ட தூர பயணத்தின் போது கவனம் தேவை. வாகனம் ஓட்டுநர்கள் தங்களுடைய வேலையை கவனமாக செய்ய வேண்டும். இந்த வாரம் 15 ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஜாக்கிரதை, மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்க.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. கடவுள் உங்களுக்கு இந்த வாரம் ஆசிர்வாதத்தை கொடுக்கப் போகின்றார். எங்கிருந்து தான் ஞானோதயம் பிறைந்ததோ என்று தெரியாது. செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் அவ்வளவு அழகாக செய்து முடிப்பீர்கள். பாராட்டை பெறுவீர்கள். அந்த ஆண்டவனின் ஆசிர்வாதம் பெற்ற குழந்தை போலவே உங்களுக்கு இந்த வாரம் நல்லது நடக்கும். வழக்கம் போல வேலையில் அலைச்சல் இருந்தாலும் சில விஷயங்களை சாதித்து காட்டுவீர்கள். சொத்து சுகம் சேர்கை இருக்கும். மன நிம்மதி பிறக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். இதனால் வரை இருந்த சொதப்பலான வாழ்க்கைக்கு, சந்தோஷம் பிறக்கும். தினமும் மார்கழி மாதம் முழுவதும் ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது நன்மையை தரும்.

- Advertisement -