இந்த வார ராசிபலன் – 13/12/2021 முதல் 19/12/2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப்போகின்றது. நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகளில் எந்த தடையும் இல்லாமல் அடுத்த படிக்கு முன்னேறிச் செல்லலாம். உங்கள் தேவைக்கு ஏற்ப பணவரவு இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் உறவினர்களின் வருகை சந்தோஷத்தை கொடுக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபமே கிடைக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதலான மதிப்பும் மரியாதையும் உயரத்தான் போகின்றது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நிறைய வேலைகளை செய்யாமல் பாதியிலேயே கிடப்பில் போட்டு வைத்திருப்பீர்கள். அந்த வேலைகள் எல்லாம் ஒவ்வொன்றாக இந்த வாரம் சரியான முறையில் நடந்து முடியும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். அக்கறை எடுத்து வேலை சுமையை சீக்கிரத்தில் முடித்து விடுங்கள். புதியதாக சொத்து வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய தொழில் தொடங்க முயற்சி செய்யலாம். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கூட கூடிய விரைவில் நல்ல வேலை கிடைக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கப் போகின்றது. வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் பாராட்டை பெறுவீர்கள். கடன்தொகை வசூலாகும். வீட்டில் குழந்தைகளால் நல்லது நடக்கும். நிறைய நன்மைகள் கொண்ட இந்த வாரத்தில் குடும்பத்தோடு சேர்ந்து குலதெய்வ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு எதிர் பாராத செலவுகள் வந்து கையை கடிக்க போகின்றது. சுப செலவுகள் தான், இருப்பினும் கையில் இருக்கும் இருப்பு கொஞ்சம் கரையும். வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் வந்துபோகும். அனாவசியமாக கோபப்பட்டு எந்த ஒரு வார்த்தையையும் விட்டுவிட வேண்டாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். குடும்ப விஷயத்தை அனாவசியமாக வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். தினந்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதலான கவனம் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியத்தோடு செய்யக்கூடாது. உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பத்திரமாக நீங்களே வைத்துக்கொள்ளுங்கள். யாரை நம்பியும் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மற்றபடி குடும்பத்தில் நிறைவான சந்தோஷம் இருக்கும். கவலைகள் குறையும். குடும்பத்தோடு வீட்டின் அருகில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் மேலும் நன்மைகள் உண்டு.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் உங்களுடைய வேலையை மட்டும் பார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அனாவசியமாக அடுத்தவர்களுடைய வேலையில் மூக்கை நுழைக்காதீர்கள். அனாவசியமாக பேசாதீர்கள். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். பிரச்சினைகளில் போய் முன்னே நின்றீர்கள் என்றால், விபரீத விளைவுகள் உங்களை வந்து சேர்ந்துவிடும். கூடுமானவரை எல்லா பிரச்சனைக்கும் மௌனமே பதிலாக வையுங்கள். எல்லா வேலைகளும் கொஞ்சம் இழுபறியாகத்தான் இருக்கும். விடாமுயற்சி நிச்சயமாக நல்ல வெற்றியை தரும். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் உறவினர்களுடைய முக்கியத்துவத்தை உணர்வீர்கள். உங்களுக்கு பிரச்சினை என்று வரும்போது உங்களுடைய நெருங்கிய உறவுகள் கைகொடுக்கும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத நன்மை ஒன்று, இந்த வார இறுதிக்குள் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. புதியதாக சொத்துக்கள் வாங்கலாம். சொந்த தொழிலில் எப்போதும்போல சீரான லாபத்தினை கொடுக்கும். தினம்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல வகைகளில் பணம் வந்து பையை நிரப்பும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத சம்பள உயர்வு போனஸ் கிடைப்பதற்கு கூட வாய்ப்பு உள்ளது. அதாவது நல்ல வேலை செஞ்சீங்கன்றதற்காக கொஞ்சம் கூடுதலான இன்சென்டிவ் கிடைக்கலாம். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கின்றது. வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். சொத்துக்கள் வாங்க சில நல்ல வாய்ப்புகள் தேடிவரும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே சந்தோஷம் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து படிப்படியாக வெளி வந்து விடுவீர்கள். தினந்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் மந்தமான சூழ்நிலையே நிலவும். தேவையில்லாத சின்ன சின்ன பிரச்சனைகள் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். அமைதியாக இருந்து கொள்ளுங்கள். இந்த வார இறுதியில் எல்லா பிரச்சினைக்கும் ஒரு முற்றுப்புள்ளி கிடைத்து விடும். வேலை செய்ததற்கு ஒரு பாராட்டும் கிடைக்காது. ஆனால் செய்த வேலையை குறை சொல்வதற்கு வரிசை கட்டி நிற்பார்கள். சொந்தத் தொழிலில் கொஞ்சம் கவனம் தேவை. புதிய முதலீடு செய்ய வேண்டாம். கவலை வேண்டாம். மனதார தினம்தோறும் காலையில் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி வாருங்கள். சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும்.

மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் நின்று நிதானமாக யோசித்து செயல்பட வேண்டும். அவசர அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுக்கக் கூடாது. முக்கியமான விஷயங்களை கூடுமானவரை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். செலவுகள் அதிகரிக்கும். அதிகமான செலவு என்பதால் கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். செலவை முடிந்தவரை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். நண்பர்களின் மூலம் ஒரு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கின்றது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் காட்டுங்கள். சிறிய பிரச்சினை என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். தினம் தோறும் சனிபகவான் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பேச்சுத்திறமை அதிகரிக்கப் போகின்றது. பேசிப்பேசியே நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க போகிறீர்கள். வாயாஜால வித்தையில் உங்களை வெல்ல யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு வாக்குவன்மை அதிகரிக்கும். நிறைய நன்மைகள் நடக்கப்போகும் வாரம் இது. வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். நல்ல முன்னேற்றம் இருக்கும். செய்யும் தொழிலை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்புகள் வரும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால், நல்ல முன்னேற்றம் உண்டு. தினம்தோறும் விநாயகர் வழிபாடு நல்லது.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுப்புகள் நிறைய இருக்கும். உங்களுடைய வேலைகளை நீங்கள் அக்கறை எடுத்து சரியான முறையில் செய்து முடித்தால்தான் வாழ்வில் சில படிகள் முன்னேற முடியும். நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த உடல் உபாதைகள் இனி படிப்படியாக குறையத் தொடங்கும். வீடு வாகனம் வாங்குவதாக இருந்தால் இந்த வாரம் முயற்சி எடுக்கலாம். நீண்ட நாட்களாக வசூல் செய்ய முடியாத கடன் தொகையை வசூல் செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வார இறுதியில் சுபச்செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வாராகி வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -