இந்த வார ராசிபலன் 19/12/2022 முதல் 25/12/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத பதவி உயர்வு, எதிர்பாராத சம்பள உயர்வு, உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும். சொந்தத் தொழிலில் எதிர்பார்க்காத நிறைய நல்லது நடக்கப் போகிறது. நிறைய லாபம் வந்து பையை நிரப்பும். தொழிலை விரிவு படுத்த நிறைய புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பை கூடுதல் ஆக்குங்கள். எதிர்காலத்திற்கு நல்லது. இந்த மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. தினமும் விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் அலட்சியமாக செயல்படக் கூடாது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூர பயணத்தை அடுத்த வாரம் ஒத்தி வைத்துக் கொள்ளுங்கள். பொறுமையாக யோசித்து எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும். அவசரம் கூடவே கூடாது. வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். புதிய வேலை தேடக்கூடிய சூழ்நிலையை கொண்டு வராதீங்க. வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கும். இந்த மாதம் 22 ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம். தினமும் துர்கை அம்மன் வழிபாடு செய்யுங்க. நன்மை நடக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் எதைத் தொட்டாலும் அது உங்களுக்கு போராட்டமாக தான் இருக்கும். ஆனால் இறுதியில் வெற்றி உங்களுக்கு தான் கிடைக்கும். பயப்படாதீங்க, எந்த பிரச்சனை வந்தாலும் துணிந்து எதிர்த்து நில்லுங்கள். ஆனால் கண்மூடித்தனமாக மூன்றாவது நபரின் பேச்சை கேட்காதீங்க. கூட இருக்கும் நண்பர்கள் கூட உங்கள் பின்னால் குழி தோண்டுவார்கள். புதிய சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் இருக்கிறது. குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கும். பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். தினம் தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கப் போகின்றது. நீங்கள் மனதில் நினைத்த நல்ல விஷயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக நடக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்‌. கைத்தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். உங்களுடைய குழந்தைகளின் நடவடிக்கைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு உறவுகளிடையே விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனை இல்லை. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். கையில் சேமித்து வைத்திருந்த சேமிப்பு எல்லாம் கரையும். சில பேருக்கு கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை கூட ஏற்படும். மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். வீட்டில் விருந்தினர்களின் வருகையால் சந்தோஷம் அதிகரிக்கும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட பூஜைகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். சில விஷயங்களில் நீங்கள் எடுக்கக்கூடிய துணிச்சலான முடிவு உங்களுக்கு சாதகமாக அமையும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டுகள் குவியும். உங்களுடைய பேச்சுத் திறமையால் நீங்கள் நிறைய விஷயத்தை சாதிக்கப் போகிறீர்கள். குறிப்பாக ஆசிரியர் தொழில் செய்பவர்கள், வக்கீல் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. எவ்வளவுதான் முயற்சி செய்து சாதிக்க முடியாத சில விஷயங்களை கூட, உங்களுடைய பேச்சு திறமையால், சட்டென முடித்து விடுவீர்கள். புத்தி கூர்மை அதிகமாக போகின்றது. வாழ்க்கை துணைக்கு தேவையான ஆடம்பரமான பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்ச்சி அடையச் செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். காதல் திருமணம் கைகூடும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில தடைகள் இருக்கும். எந்த ஒரு புதிய விஷயத்தையும் தொடங்காதீர்கள். செய்யக்கூடிய வேலையை திறமையாக அப்படியே செய்து வாருங்கள். சோம்பேறித்தனம் உங்களுக்கு சில பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்து, சுறுசுறுப்பாக செயல்படுவது நல்லது. செலவு அதிகரிக்கும். வருமானம் குறையும். வீண் விரயம் ஏற்படும். குடும்பத்தில் உறவுகளை விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். வாய் தகராறு கைகலப்பாவதற்க்கு வாய்ப்பு உள்ளது. நிதானமாக இருங்கள். தினம் தோறும் மனதை அமைதியாக வைக்க ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை சொல்லி வாருங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி காரர்களுக்கு இந்த வாரம் குழப்பம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எது நல்லது எது கெட்டது என்று தெரியாமல் சில குழப்பங்கள் வரும். ஆழம் தெரியாமல் காலை விடாதீங்க. உங்களுக்கு தெரிந்த விஷயங்களில் மட்டும் தலையிடுங்கள். தெரியாத விஷயங்கள் இருந்து விட்டு விலக்குவது நல்லது. உதாரணத்திற்கு புதியதாக தொழில் ஆரம்பித்தால் லட்சக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என்று சொன்னால் அவர்களை நம்பவே நம்பாதீங்க. இந்த பேங்கில் பணத்தை போட்டால் பல மடங்கு வட்டி கிடைக்கும் என்று சொன்னால் அதையும் நம்பாதீங்க. நம்பி மோசம் போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உஷாரா இருந்துக்கோங்க. மனக்கவலை நீங்க தினந்தோறும் காலையில் எழுந்து அமர்ந்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுங்கள்‌. தெரியாத வேலைக்கு போகவே போகாதீங்க அதுதான் இந்த வாரம் உங்களுக்கு நல்லது.

தனுசு:
தனுசு ராசிக்கு இந்த வாரம் வருமானம் அதிக போகின்றது. வாங்கிய கடனை திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். நீங்களே அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு பணக்காரரா மாறிடுவீங்க. வருமானம் அமோகமாக இருக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரக்கூடிய தருணங்கள் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்த மணவாழ்க்கை அமையும். சந்தோஷம் அதிகரிக்கும். அதிகரித்த சந்தோஷம் நிலைத்திருக்க செய்ய தினமும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில இடைஞ்சல்கள் இருக்கும். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதை குறை சொல்ல ஒருவர் வந்துவிடுவார். அந்த வேலையை தடை செய்வதற்காகவே ஒரு பிரச்சனை முளைக்கும். இப்படி பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். தேவையில்லாத சில பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். செலவு கொஞ்சம் அதிகரிக்கும். எதிர்பாராத ரூபத்தில் பிரச்சனைகள் கிளம்பும்போது சில சமயம், மனதும் உடலும் சோர்வடையும். கொஞ்சம் உஷாரா இருங்க. தினமும் குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்து விட்டு வீட்டிலிருந்து வேலைக்கு செல்லவும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்தது நடக்கும். வாழ்க்கை துணையின் சந்தோஷத்திற்காக சில விஷயங்களை செய்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடனை படிப்படியாக திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். புதியதாக கடன் வாங்காமல் இருப்பதற்கு உண்டான வழிகளை பாருங்கள். விவசாயிகளுக்கு நன்மைகள் நடக்கும் வாரம் இது. குடும்பத் தலைவிகளுக்கு சந்தோஷம் நிறைந்த வாரம் இது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாகனத்தில் செல்லும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கர்ப்பிணி பெண்களாக இருப்பவர்கள் தங்களுடைய ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. விற்க முடியாத சொத்துக்களை கூட விற்று கடன் பிரச்சனைகளை முடிப்பீர்கள். மனது நிம்மதி அடையும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருப்பதால், சுப செலவுகள் ஏற்படும். இத்தனை நாட்களாக குடைச்சல் கொடுத்து வந்த மேல் அதிகாரிகள் கூட இனிவரும் காலகட்டத்தில் உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள். உழைப்பு அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும். சந்தோஷமும் அதிகரிக்கும். எதை செய்தாலும், எந்த முடிவு எடுத்தாலும் அதை வாழ்க்கை துணையோடு பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்களாக முடிவு எடுக்காதீங்க. தினந்தோறும் ஐயப்பன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -