இந்த வார ராசிபலன் 26/12/2022 முதல் 01/01/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan1
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் துணிச்சல் நிறைந்த வாரமாக இருக்கப் போகின்றது. எதிரிகளை அப்படியே பந்தாடுவீர்கள். அடுத்தவர்கள் உங்களை பார்த்தாலே நடுங்கும் அளவிற்கு உங்களுடைய செயல்பாடுகள் விஸ்வரூபம் எடுக்கும். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை காத்துக் கொண்டிருக்கிறது. நேர்மையான குணம் கொண்ட உங்களை வீழ்த்துவதற்கு யாராலும் முடியாது. ஆனால் நீங்கள் எப்போதும் பொறுமை காக்க வேண்டும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். தினம் தோறும் மனதை சாந்தப்படுத்திக் கொள்ள ஸ்ரீராமஜெயம் மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி தரக்கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. பல நாட்களாக இருந்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள் எல்லாம் ஒவ்வொன்றாக விலகும். மனசை எப்போதும் லேசாக வைத்துக் கொள்ளுங்கள். எதை நினைத்தும் வருத்தப்படாதீங்க. குழப்பம் அடையாதீர்கள். தொழிலை விரிவு படுத்தலாம். அதற்கு தேவையான வங்கி கடன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளும் குவியும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். மற்றபடி பிரச்சினைகள் பெருசாக இருக்காது. தினம்தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ரொம்ப ரொம்ப கவனம் தேவை. அலட்சியப் போக்கோடு செய்யக்கூடிய காரியம் ஆபத்தை உண்டாக்கிவிடும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாதீங்க. முன் பின் தெரியாத நபர் சொல் கேட்டு எந்த முடிவும் எடுக்காதீங்க. மற்றபடி எல்லாம் நன்மையை நடக்கும். செய்யும் தொழிலில் லாபம் சீராக கிடைக்கும். குறிப்பாக கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய புத்திசாலித்தனத்தை பார்த்து வியந்து பாராட்டி நிறைய பொறுப்புகளை கொடுக்கப் போறாங்க. அதையெல்லாம் பொறுப்பா செய்யுங்கள். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணை அமைய போகின்றது. வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. இந்த மாதம் 26 ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றமான வாரம் ஆக இருக்கும். எல்லாத்தையும் ப்ளான் செய்து சரியான முறையில் நடத்துவீர்கள். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் ஒரு ரூபாயை கூட கையில் இருந்து கொடுக்காதீங்க. உங்களுடைய  பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். யாரை நம்பியும் விலை உயர்ந்த எந்த பொருட்களையும் ஒப்படைக்காதீர்கள். யாருக்கும் வாக்கும் கொடுக்கக் கூடவே கூடாது. பின்னால் பிரச்சனை வந்துவிடும். தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை தேவை. ஆழம் தெரியாமல் எந்த விஷயத்திலும் காலை வைக்கக்கூடாது. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொண்டு மன நிறைவை பெறுவீர்கள். சொந்த தொழிலில் தேவையற்ற போட்டிகள் வரத்தான் செய்யும். அதை சமாளித்து தான் ஆக வேண்டும். மற்றபடி நஷ்டம் ஆவதற்கு எந்த கஷ்டமும் வராது. தினமும் காலையில் காலை எழுந்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லுவது நல்லது. இந்த வாரம் 29ஆம் தேதி சந்திராஷ்டமம் ஜாக்கிரதை.

கன்னி:
இந்த வாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு சந்தோஷமான வாரமாக இருக்கப் போகின்றது. உறவுகளுக்கிடையே இருந்த சண்டை சச்சரவு விலகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். சொந்தத் தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். புதுசு புதுசாக நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதே சமயம் அனுபவ அறிவு அதிகமாகும். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீங்க. யாரை நம்பியும் கடன் வாங்காதீங்க. இரண்டுமே பிரச்சனை தான். சில சமயம் உடல் அசதியாக இருக்கும். கவலை வேண்டாம். சுப காரிய நிகழ்ச்சிகளை அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள். தினம்தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிறைவான வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் பிள்ளைகளின் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். அவர்களுடைய விஷயத்தில் முடிவெடுக்கும் போது கொஞ்சம் நிதானம் தேவை. சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உடன் வேலை செய்பவர்களை கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். முன்பின் தெரியாத மனிதர்களிடம் உங்களுடைய குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். தினம்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையும் நிதானமும் இருக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. வாழ்க்கை துணையிடம் வாக்குவாதம் கூடாது. சொந்த தொழில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். அதாவது எதிர்பாராத விபத்துகளின் மூலம் நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிலும் அலட்சியம் வேண்டாம். கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். மற்றபடி வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். சொத்து சுகம் வாங்க கூடிய யோகம் இருக்கிறது. வேலை செய்பவர்களுக்கு அவர்களுடைய வேலையில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் தொகை வசூல் ஆகும். தினம் தோறும் ஈசன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சோர்வு என்பது உங்கள் பக்கம் நெருங்காது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சம்பள உயர்வு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் குடும்பத்தில் மட்டும் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். உறவுகளை அனுசரித்து செல்லுங்கள். குறிப்பாக கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பு உயரும். பழைய கடன் பாக்கியங்களை திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். வார்த்தையில் கவனம் தேவை. அநாவசியமான வார்த்தைகளை பேசக்கூடாது. தினம் தோறும் வாராஹி அம்மன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதுப்புது ஐடியாக்கள் வரும். எல்லா வேலைகளையும் அப்படியே பம்பரம் போல சுழன்று சுழன்று செய்வீர்கள். உங்களுடைய புத்தி கூர்மையை பார்த்து எல்லோரும் வியப்பார்கள். பாராட்டு மழையை பொழிவார்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் முன்னாள் இருப்பீர்கள். கொடுக்கும் வாக்கை நிறைவேற்றுவீர்கள். அடுத்தவர்களுடைய பொறாமை கண் உங்கள் மீது விழும். அந்த அளவுக்கு இந்த வாரம் உங்களுக்கு உயர்வான வாரமாக இருக்கும். ஆனால் தொலைதூர பயணங்களில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வீண்விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பெரிய மனிதர்களின் சந்திப்பு லாபத்தை கொடுக்கும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சோர்வான வாரமாக இருக்கப் போகின்றது. வேலை பார்த்து பார்த்து சோர்ந்து போக போறீங்க. ஆனாலும் நல்ல பெயர் கிடைக்காது. மனம் லேசாக வருத்தப்படும். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். நீங்கள் தவறு செய்யவில்லை என்றாலும் உங்கள் மேல் பழி போட ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது. சில துணிச்சலான முடிவுகள் துன்பத்தைக் கொடுக்கும். உறவுகளை நாசுக்காக கையாள வேண்டும். ஆரோக்கிய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரக்கூடிய வாரமாக இருக்கும். மன நிறைவான நிறைய விஷயங்கள் நடக்கும். சந்தோஷத்திற்கு அளவே இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் அளவோடு சாப்பிடுங்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. கட்டுமானத் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். கலைஞர்களுக்கு நல்ல பெயர் புகழ் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் தொடங்கும். தினம் தோறும் ஐயப்பன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -