இந்த வார ராசிபலன் 27/12/2021 முதல் 02/12/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் உங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி முன்னேற்றத்தை காண கூடிய நல்ல வாரமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் முன் வைத்த காலை பின் வைக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பணிகளில் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் உங்களுடைய தனித்திறமைகளை வெளி உலகிற்கு எடுத்துக் காட்டக்கூடிய அற்புத வாரமாக அமைய இருக்கிறது. எவ்வளவு விமர்சனங்களையும் நீங்கள் சர்வ சாதாரணமாக கடந்து செல்வீர்கள். சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் சுற்றியிருக்கும் போட்டியாளர்களை சமாளிக்க வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி பிரச்சினைகளைப் பெரிதாக்காமல் ஆற போடுவது உத்தமம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான நல்ல பலன்களைக் கொடுக்கக் கூடிய அற்புத வாரமாக அமைய இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய வாய்ப்புகள் கிடைக்க இருப்பதால் அதனை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கூடுதல் பொறுப்புகளை சுமப்பதில் சிரமத்தை சந்திக்கலாம். ஆரோக்கியம் கவனம் தேவை.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல வாரமாக அமைந்திருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வெளியிட பயணங்களின் பொழுது கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களில் மற்றவர்களை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணியில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவது உத்தமம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கொடுக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நீங்கள் எதிலும் சற்று கவனமுடன் இருக்கும் வாரமாக அமைய இருக்கிறது. முன்பின் தெரியாதவர்களின் அறிமுகத்தை தவிர்ப்பது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே நீண்ட நாள் நடந்து வந்த பனிப்போர் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சுற்றியுள்ளவர்களின் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கான சுப பலன்கள் கிடைக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுடைய வருமானத்தை இரட்டிப்பாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் சிறு சிறு சண்டை சச்சரவுகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய வேலை குறித்த நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட கூடிய தருணங்கள் அமையும் அற்புத வாரமாக இருக்கிறது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறந்த பலன்களைக் கொடுக்கக் கூடிய வாரமாக அமைய இருக்கிறது. தடைப்பட்டுக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கான முடிவு கிடைக்கும். நீண்ட நாள் சந்திக்க இருந்த நபர் ஒருவரை சந்திப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி சுறுசுறுப்பு உண்டாகும். கணவன் மனைவி இடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி சுமை காரணமாக அவ்வப்போது அசதியை காணலாம். ஆரோக்கியத்தில் அக்கறையுடன் இருப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் உங்களுடைய திறமையை மெருகேற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் அமோகமான வாரமாக அமைகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். இடமாற்றம் குறித்த விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமான உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றில் அனுகூல பலன் உண்டு. ஒரு சிலருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கணவன், மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு முடிவு கட்டக் கூடிய அற்புத வாரமாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய பணியில் கூடுதல் அக்கறையுடன் செயல்படுவீர்கள். பெண்கள் புதிய மாற்றத்தை காணக்கூடிய வாரமாக இவ்வாரம் அமைய இருப்பதால் உற்சாகத்துடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைகள் படிப்படியாக நீங்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் குடும்பத்தில் இருந்து வந்த அமைதி சீர்குலைய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகள் தொல்லை வலுவாகும் என்பதால் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதக பலன்களை பெற இருக்கிறீர்கள். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், வாகன மாற்றம் போன்றவை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நீங்கள் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள கூடிய வாரமாக அமைகிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுடைய பணிகளில் கூடுதல் அக்கறை செலுத்தி முன்னேற பார்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவீர்கள். ஆரோக்கிய ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும்.

- Advertisement -