இந்த வார ராசிபலன் 01-02-2021 முதல் 07-02-2021 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு

Indha vara rasi palan

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக அமையப்போகின்றது. உறவினர்களிடையே இருந்த பகை விளங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும். சொந்தத் தொழில் முன்னேற்றப்பாதையில் செல்லும். புதியதாக வீடு வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பதவி உயர்வு கிடைக்கப் போகின்றது. தினம் தோறும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு வந்தால் எல்லாம் வெற்றியே.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக அமையப்போகின்றது. நீங்கள் எதிர்பாராத நல்ல வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும். அதை உங்களுக்கு தகுந்தவாறு பயன்படுத்திக் கொள்ளும் திறமை உங்களிடத்தில் தான் உள்ளது. குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். குடும்ப விவகாரங்களை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சனை தீரும். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு தேவையான சில விஷயங்கள் இந்த வார நாட்களில் நிச்சயம் நடக்கும். குலதெய்வ வழிபாடு அவசியம் தேவை.

மிதுனம்:
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டிய வாரமாக தான் இருக்கப்போகின்றது. யாரையாவது நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களிடம் திடீரென்று நெருங்கிப் பழகும் எவரையும் உடனடியாக நம்பிவிட வேண்டாம். அறிமுகமில்லாத நபரிடம் பணத்தை கொடுப்பதோ, தேவையற்ற பொருட்களை பணம் கொடுத்து வாங்குவது, எந்த ஒரு பரிமாற்றத்தையும் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களது பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருந்து கொண்டால், ஏமாற்றத்தை தவிர்த்துவிடலாம். மற்றபடி எல்லாம் சுமூகமாக நடைபெறும் வாரமாக தான் அமையும். கஷ்டங்கள் நீங்க தினந்தோறும் முருகர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

கடகம்:
zodiac sign
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை தரும் வாரமாக தான் அமையப்போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றி தரும். சனி பகவானை நினைத்து யாரும் கலங்க வேண்டாம். தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து விடுபடும் நேரம் வந்து விட்டது. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கத் தொடங்கும். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. சொந்தத் தொழில் அலுவலகப் பணி எல்லாமே முன்னேற்றப்பாதையில் செல்லும். தினம் தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப் போகின்றது. அதாவது கோர்ட் கேஸ் வழக்குகள் நீண்ட நாட்களாக நடந்து வந்து இருந்தாலும் அது உங்களுக்கு சாதகமாக முடியும். அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகள் நிலுவையில் இருந்தாலும் அது உங்களுக்கு சாதகமாக முடியப் போகின்றது. உங்களை பின்தொடர்ந்த கஷ்டங்கள் உங்களை விட்டு விலகிச் செல்ல போகின்றது. உங்களது மனம் தெளிவு பெறும். வீட்டில் சுப காரியங்கள் நடக்க தொடங்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சந்தோஷம் இருக்கும். தினந்தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Virgo zodiac sign
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபம் தரும் வாரமாக அமையப்போகின்றது. நீங்கள் வரவே வராது என்று நினைத்துக் கொண்டிருந்த கடன் தொகை வசூலாகும். சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பாராதவிதமாக ஏதாவது ஒரு இடத்திலிருந்து பணம் வந்து, உங்கள் பையை நிரப்பி விடும். நீண்ட நாட்களாக திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு கூட, திருமண பேச்சை இப்போது தொடங்கலாம். நிச்சயம் சுபமாக முடியும். வெளியிடங்களுக்கு செல்லும் போது மட்டும் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். மாஸ்க் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம். வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொண்டால் நல்லது. ஆரோக்கியத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். தினமும் விநாயகர் வழிபாடு வெற்றி தரும்.

- Advertisement -

துலாம்:
Libra zodiac sign
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக அமையப்போகின்றது. எந்த ஒரு வேலையையும் தொடங்குவதற்கு முன்பு ‘நிச்சயம் வெற்றி அடைய முடியும்’ என்ற நம்பிக்கையோடு தொடங்குங்கள். மன பயத்தை விட்டுவிடுங்கள். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். உங்கள் வாழ்க்கைக்கு முன்னேற்றமான நிறைய சந்தர்ப்பங்கள், நிறைய வாய்ப்புகள் உங்களைத் தேடி வந்தாலும் உங்களுடைய மன பயத்தால் அதை நீங்கள் தவிர்ப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபட்டுக் கொண்டே வருகின்றது. மன உறுதியோடு செயல்பட்டால் வெற்றி அடைய முடியும் என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தினம் தோறும் அம்மன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

விருச்சிகம்:
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று மந்தமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. சோம்பேறித்தனம் இல்லாத முயற்சி இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். வேலையில் அவ்வப்போது முன்னேற்றம் இருந்தாலும் மேலதிகாரிகளின் பிரஷர் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். அனுசரித்து செல்வது நல்லது. யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை வாக்குவாதம் செய்யாமல் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்வது நல்லது. தினந்தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் தரும் வாரமாக அமைந்தாலும் அவ்வப்போது மனதில் சிறிய குழப்பங்கள் எழும். அந்த குழப்பத்தின் மூலம் எப்போதுமே சோகத்தில் இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு பிரச்சினை எதுவுமே இல்லை. எல்லாம் பிரம்மை தான். சுறுசுறுப்பாக வேலை செய்து, சுறுசுறுப்பாக வெற்றியடையும் வாரம் தான் இது. மன பயத்தை மட்டும் நீக்கி கொள்ள வேண்டும். தினந்தோறும் காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்து விட்டு, ஓம் நமசிவாய மந்திரத்தை ஐந்து நிமிடங்கள் உச்சரித்து தியானம் செய்தால் மனம் தெளிவு பெறும். முக்கியமான முடிவுகளை எடுப்பதாக இருந்தால் மட்டும் அடுத்த வாரம் தள்ளிப் போடுங்கள்.

மகரம்:
Capricornus zodiac sign
மகர ராசிக்காரர்கள், உங்களுடைய அன்றாட சராசரி வாழ்க்கையை எப்போதும்போல நடத்திச் செல்லலாம். புதியதாக ஏதேனும் முடிவு எடுப்பதாக இருந்தால் மட்டும், அடுத்த வாரம் தள்ளிப் போடுவது மிகவும் நல்லது. புதிய முடிவு எடுப்பதற்கு முன் ஒன்றுக்கு பலமுறை யோசித்து செயல்பட வேண்டும். யோசிக்காமல் எந்த ஒரு விஷயத்திலும் காலை வைக்க வேண்டாம். முடிந்தவரை பணம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இந்த வாரம் பரிமாற்றத்தை நடத்தாமல் இருப்பது நல்லது. பயணத்தின் போது கவனம் தேவை. கையெழுத்திடும்போது கவனம் தேவை. எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருப்பது நன்மையை கொடுக்கும். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்தால் வரக்கூடிய பண இழப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

கும்பம்:
Aquarius zodiac sign
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் விரையம் தரும் வாரமாக தான் அமைக்கப் போகிறது. முடிந்தவரை செலவுகளை கட்டுப்படுத்த பாருங்கள். சுப செலவாக இருந்தாலும், அளவோடு செலவு செய்வது தான் நல்லது. கடன் வாங்க வேண்டாம். பணம் கையில் இல்லாததால் பல வகைப்பட்ட பிரச்சினைகளில் சிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். யாரிடமும் உங்களது முன் கோபத்தை காட்ட வேண்டாம். அலுவலகத்தில் எல்லோரையும் அனுசரித்து செல்வது தான் நல்லது. பொறுமை காக்க வேண்டிய வாரம் இது. தினம்தோறும் காலையில் எழுந்து மனதை அமைதிப்படுத்தி தியானம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியே கிளம்புங்கள்.

மீனம்:
Pisces zodiac sign
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பாராட்டுகள் குவியப் போகிறது. உங்களை சுற்றி உள்ளவர்களிடத்தில் நல்ல பேரை வாங்க போகிறீர்கள். செல்வாக்கும் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். சொல்லப்போனால் பெரிய மனிதர் ஆகி விடுவீர்கள். இந்த நேரத்தில் தலைக்கனமும் கர்வமும், தலை தூக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, உங்கள் கையில்தான் உள்ளது. அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசத் தொடங்கிவிட்டது. எதைத் தொட்டாலும் முன்னேற்றம்தான். எதை தொட்டாலும் வெற்றி தான். சந்தோஷத்திற்கு குறைவிருக்காது நிறைவான சந்தோஷத்தோடு, குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இந்த வாரம் ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்