இந்த வார ராசிபலன் 14/2/2022 முதல் 20/2/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதற்கான சுப செலவுகளும் காத்திருக்கிறது. வருமானம் அதிகரிக்கும். விட்டுப் போன உறவுகள் ஒன்று சேர்வதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யுமிடத்தில் சில சிக்கல்கள் வரலாம். அனுசரித்து செல்லுங்கள். நல்ல வேலை கிடைக்கும் பட்சத்தில் சண்டை போடாமல் சுமூகமாக வேறு வேலைக்கு மாறுவது நல்லது. சொந்த தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக அடைக்க முடியாத கடனை கொஞ்சம் கொஞ்சமாக திருப்பி கொடுத்து விடுவீர்கள். தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை தேவை. எதிலும் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நீங்கள் தலையிடாதீர்கள். கொடுக்கல் வாங்கல் ஜாமீன் கையெழுத்து என்று போனால் பிரச்சனை உங்கள் தலை மேல் வந்து விடியும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வாய்ப்புகள் வரத் தொடங்கும். சொந்தத் தொழில் முதலீட்டை அதிகப்படுத்தலாம். வங்கி கடன்கள் கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். உங்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் தேவை. நேரத்திற்கு சத்தான ஆகாரங்களை சாப்பிடுங்கள். சிவன் வழிபாடு நன்மை தரும்.

மிதுனம்:
midhunam
நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்து வந்த நல்ல காரியங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து உங்களுக்கு நடக்கப்போகின்றது. இந்த வாரம் முழுவதும் நீங்கள் எதிர்பார்த்தபடி வெற்றி நிச்சயம் உங்களைத் தேடி வரும். ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். சொந்த தொழிலில் யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். புதியதாக கடன் வாங்க வேண்டாம். முதலீட்டை அதிகப்படுத்த வேண்டாம். பங்குதாரர்களிடம் உஷாராக இருந்து கொள்ளுங்கள். வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இந்த வார இறுதிக்குள் எல்லாம் சரியாகிவிடும். உடல் ஆரோக்யத்தில் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தினம் தோறும் அனுமன் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அற்புதமான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பார்த்தபடி உங்களுடைய வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். மனநிறைவு ஏற்படும்‌. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகளும் கிடைக்கும். ஆனால், குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி அனுசரித்து சென்றால் நல்லது. குழந்தைகள் முன்பு சண்டை போடாமல் இருங்கள். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகும். நம்முடைய முன்னேற்றம் அடுத்தவர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும். எதிரி பிரச்சனை வருவதற்கு சில வாய்ப்புகள் உள்ளது. பார்த்துக் கொள்ளுங்கள். தினம்தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் தரக்கூடிய வாரமாக தான் இருக்கப்போகின்றது. எதிர்பாராமல், வராமல் இருந்த கடன் வசூலாகும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல வேலை கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. பூர்வீக சொத்து உங்கள் பக்கம் தீர்ப்பாகும். அதன்மூலம் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். வீடு வண்டி வாகனம் என்று சுகத்தோடு வாழக்கூடிய ஒரு யோகம் அடைப்பதற்கு சிலருக்கு வாய்ப்புகள் தேடி வரலாம். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். தினம்தோறும் அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை சந்தோஷமாக கழிப்பீர்கள். கணவன்-மனைவிக்கு இடையே உள்ள நெருக்கம் அதிகரிக்கும். ஒருவருக்கு ஒருவர் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு சுமூகமான நிலை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். சொந்தத் தொழிலில் எதிர்பாராத திருப்புமுனை ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆக மொத்தத்தில் நிம்மதிக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. சந்தோஷமாக இருக்கலாம். தினம்தோறும் குலதெய்வத்திற்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செல்வச்செழிப்பான வாரமாக தான் இருக்கப் போகின்றது. நீங்கள் எதிர்பாராத லாபம், சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. பூர்வீக சொத்து உங்கள் பக்கம் தீர்ப்பாகும். நீண்ட நாட்களாக வராத கடன் தொகை வசூலாகும். வருமானத்திற்கு மேல் வருமானம் வந்து உங்கள் பையை நிரப்பும். இப்படிப்பட்ட சமயங்களில் சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்து அனாவசிய செலவை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்களின் அருமை பெருமையை தெரிந்து கொள்ளக் கூடிய சில விஷயங்கள் நடக்கலாம். நண்பர்கள் உங்களுக்கு இக்கட்டான சூழ்நிலையில் உதவி செய்வதற்காக வந்து நிற்பார்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக இருக்கப்போகின்றது. எல்லா வேலையையும் முன்கூட்டியே முடித்து விடுவீர்கள். எந்த வேலையிலும் பெண்டிங் இருக்காது. பிறகு எல்லா இடத்திலும் நல்ல பெயர்தான். சுற்றி சுற்றி பம்பரமாக சுழன்று இந்த வார இறுதியில் சோர்ந்து போவது தான் மிச்சம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் வேலைகளை கவனிக்க முடியும். நேரத்திற்கு சத்தான ஆகாரங்களை சாப்பிடுங்கள். குறிப்பாகப் பெண்கள் உடலுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தாலே போதும். சண்டைக்காக யாராவது உங்களை கைபிடித்து கூப்பிட்டால் கூட, நீங்கள் போகக்கூடாது. காரணம் இந்த வாரம் 14, 15, 16 சந்திராஷ்டமம் உள்ளது. தேவையற்ற விவாதங்களும், தேவையற்ற பேச்சுக்களும், தேவையற்ற வார்த்தைகளும், உங்களுக்கு பிரச்சனையை கொண்டு வந்து சேர்த்து விடும். எல்லா விஷயங்களிலும் அனுசரித்து செல்லுங்கள். தினமும் செய்கின்ற வேலையை இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு செய்து வாருங்கள். மனதிற்குள் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் இனிமையான அதிர்ச்சிகள் ஏற்படப்போகிறது. நீங்கள் எதிர்பார்க்காத ஏதோ ஒரு விஷயத்தில் ஏதோ ஒரு நல்லது நடக்கப் போகின்றது. அது தொலைபேசி மூலமாக வரலாம். அல்லது நண்பர்களின் மூலமாக வரலாம். இப்படி யாரோ ஒருவர் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை கொண்டு வந்து சேர்ப்பார்கள். நிச்சயம் அது உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கப் போவதாக இருக்கப்போகின்றது. பண வரவு அதிகரிக்கும். கடன் சுமை குறைய தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். சொந்தத் தொழில் எப்போதும்போல சுமுகமாக செல்லும். சொந்தத் தொழிலை விரிவுபடுத்தலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் லாபமான வாரம் தான். ஒரு பக்கம் பணம் வந்துகொண்டே இருக்க, மறுபக்கம் செலவுகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும். கையில் பத்து ரூபாயைக் கூட சேமிக்க முடியாது. இருப்பினும் ரொம்ப ரொம்ப சிக்கனமாக இருந்தால் மட்டும் தான் உங்களுடைய கடன் பிரச்சனை தீரும்.கடன் இல்லாதவர்கள் பணத்தை சேமித்து வையுங்கள். அனாவசிய செலவு செய்ய வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். அலட்சியப்போக்குடன் இருக்க வேண்டாம். சொந்தத் தொழிலில் அதிக கவனம் தேவை. உங்களுடைய ஆரோக்கியத்திலும் உங்கள் வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துங்கள். தினம் தோறும் மகாலட்சுமி வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தெளிவான வாரமாக இருக்கப்போகின்றது. தேவையற்ற மன குழப்பத்தில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். இதை செய்யலாமா, அதை செய்யலாமா என்ற தடுமாற்றம் நீங்கும். இதை செய்தால் தான் நம் வாழ்விற்கு நல்லது என்பதை உணர்ந்து உங்களுடைய வேலையை செய்ய தொடங்கி விடுவீர்கள். செலவுகளை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். சேமிப்பு மட்டும்தான் உங்களுக்கு எதிர்காலத்தில் பலத்தை கொடுக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். வேலை செய்யும் இடத்தில் அனுசரணை தேவை. சொந்த தொழிலில் நல்ல லாபம் உண்டு. புதியதாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த வாரம் சொந்தத் தொழிலை தொடங்கலாம். அமோகமான வரவேற்பு கிடைக்கும். உங்களுடைய வீட்டில் இருப்பவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அலட்சியப்போக்கு இருக்க வேண்டாம். உறவினர்களுடன் ஒன்றாக சுப நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய தருணங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -