இந்த வார ராசிபலன் 06/02/2023 முதல் 12/02/2023 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

varapalan5
- Advertisement -

மேஷம்:
Aries zodiac sign
மேஷ ராசிக்காரர்களுக்கு தடங்கலான காரியங்கள் எல்லாம் கூட இனி ஒவ்வொன்றாக கைக்கூடி வரும். எல்லாம் நல்லபடியாக நடக்கும். தொழிலில் இதனால் வரை தொல்லை கொடுத்து வந்த சின்ன சின்ன பிரச்சனைகள், தடைகள் கூட சரியாகும். ஏறுமுகமான நல்ல வாய்ப்புகள் வாசல் கதவை தட்டும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சந்தோஷத்தில் எந்த குறைபாடும் இருக்காது. ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் தேவை. ஆரோக்கியமான உணவை நேரத்தோடு, அளவோடு சாப்பிடுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். தினம் தோறும் துர்க்கை அம்மன் வழிபாடு நன்மை தரும்.

ரிஷபம்:
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியமாக செய்யக்கூடாது. சிக்கலில் கொண்டு போய் நிறுத்தி விடும். குறிப்பாக நீங்கள் பணிபுரியும் அலுவலகத்தில் கூட கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு வேலையையும் கவனக் குறைவோடு செய்யாதீங்க. தொழிலிலும் கொஞ்சம் ஏமாந்தால் கையில் இருக்கும் பணம் எல்லாம் காணாமல் போய்விடும். சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் நிக்கிறீங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. கண் கொத்தி பாம்பாக இருப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. அலட்சியமாக இருந்தால் மட்டும் சில பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். தினம்தோறும் மனதிற்குள் ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லி வாருங்கள்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எந்த ஒரு காரியத்தை தொட்டாலும் அது உடனடியாக வெற்றியை கொடுக்காது. இழுபறியாக இருக்கும் அவ்வளவுதான். முயற்சி திருவினையாக்கும் என்ற தாரக மந்திரத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப பிரச்சினையை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். மூன்றாவது நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும். உயிர்த்தோழனை கூட நம்பாதீங்க. உடல் ஆரோக்கியம் கொஞ்சம் கொஞ்சமாக சீர் பெறும். மனக்குழப்பத்திற்கு எல்லாம் விடிவு காலம் பிறக்கும். இந்த வார இறுதிக்குள் தெளிவு பெறுவீர்கள். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நினைத்ததெல்லாம் நல்லபடியாக நடக்கும். எதிரிகளின் முன்னால் தலை நிமிர்ந்து வாழக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் முழுவதும் வெற்றிவாகை சூடி கொண்டாடப் போகிறீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைக்கும். கோர்ட்டு கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். முன்பின் தெரியாத எதிர் பாலின  நட்பு கூடவே கூடாது. பெயர் கெட்டுப் போகும் அளவுக்கு விவகாரங்கள் வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதை, சொந்த தொழிலை விரிவுபடுத்த அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. இந்த சூழ்நிலையில் கடன் வாங்கினால் திருப்பிக் கொடுப்பதில் சிரமம் ஏற்படும். தினம் தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை அவசியம் தேவை. தேவையில்லாத வம்பு வழக்குகளில் தலையிடக்கூடாது. உங்கள் வேலையை நீங்கள் பார்த்தால் மட்டும் போதும். அடுத்தவர்களுடைய வேலையில் மூக்கை நுழைக்காதீங்க. அது உங்களுக்கு பெரிய பிரச்சினையை கொண்டு வந்து நிறுத்தி விடும். எதிரிகளால் சின்ன சின்ன பிரச்சனைகள் ஏற்படும். நியாயமாக நீங்கள் எதை பேசினாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். துஷ்டர்களை கண்டால் நீங்க தூர விலகிடுங்க. அதுதான் உங்களுக்கு நல்லது. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். எதிரிகளை எப்போதும் குறைவாக எடை போடாதீங்க. தினம் தோறும் நரசிம்மர் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அமோகமான வருமானம் இருக்கும். சந்தோஷமும், கெல்லா பெட்டியும் பெட்டியும் நிறைந்து இருக்க போகின்றது. கவலையே இல்லை. ஆனால் வீண் செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் சுப காரியங்களுக்கு சின்ன சின்ன தடைகள் வரும். சின்ன சின்ன சண்டைகளுக்கு பிறகு, அந்த சுபகாரியங்கள் நல்லபடியாக முடியும். எதற்கும் கவலைப்பட வேண்டாம். எதிரிகளை அடித்து துவம்சம் செய்து வெற்றி காண்பீர்கள். மனைவிக்கு பிடித்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்து மனம் மகிழ்வீர்கள். உங்களுடைய பொருட்களை கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக மூணாவது மனிதரின் பிரச்சினையில் மூக்கை நுழைக்க வேண்டாம். தினம் தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்வது நன்மை தரும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன சங்கடங்கள் வந்து போகும். பெரிய அளவில் குழப்பங்கள் வந்தாலும் அதிரடி முடிவை இந்த வாரம் எடுக்காதீங்க. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முக்கியமான முடிவை அடுத்த வாரம் தள்ளி போடுங்கள். கணவன் மனைவிக்குள் முக்கியமாக ரொம்ப ரொம்ப பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. உங்கள் அவசர முடிவு வாழ்க்கையில் நிரந்தரமாக கசப்பை கொடுத்து விடும். வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பிக் கொடுக்க வேண்டும். முடியவில்லை என்றால், கடன் வாங்கியவரிடம் பேசி, கொஞ்சம் டைம் வாங்கி பிரச்சனையை சரி செய்யுங்கள். பேசாமல் ஓடி ஒளிய வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய வாரம் இது. தினம் தோறும் குலதெய்வ வழிபாடு நன்மையை தரும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றி வாகை சூட கூடிய வாரமாக இருக்கப் போகின்றது. உங்களுக்கு பிரச்சனை கொடுத்து வரும் அத்தனை பேரையும் வீழ்த்தி வெற்றி அடைவீர்கள். புத்திசாலித்தனத்தால் எல்லா பிரச்சனையையும் சரி செய்து விடுவீர்கள். எல்லோரும் வியந்து பார்க்கும் அளவிற்கு உங்களுடைய அறிவுத்திறன் வெளிப்படும். வாழ்க்கையில் மேன்மேலும் உயர்வதற்கு தேவையான வாய்ப்புகளும் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் உங்களை தேடி வரும். அமோகமான முன்னேற்றம் தரக்கூடிய வாரம் இது. ஆனால் உடல் சோர்வு, அசதி, அலைச்சல் காரணமாக உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுப செலவுகள் ஏற்படும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தவிர்க்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கூடுதல் செலவுகள் இருக்கும். வீட்டில் பழுதடைந்த பொருட்களை எல்லாம் சரி பார்ப்பீர்கள். வீட்டை சுத்தம் செய்து, வீட்டை புதுப்பிக்க கூடிய வேலையை செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதேசமயம் வீட்டில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சின்ன சின்ன வீன் விரயங்கள் உண்டாகத்தான் செய்யும். அடுத்த வாரத்திற்குள் இந்த வீண் விரைய செலவுகள் எல்லாம் சரியாகிவிடும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். சின்ன சின்ன இடையூறுகள் இருந்தாலும், சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவதில் சின்ன சின்ன தடங்கல்கள் வரச்செய்யும். முட்டி மோதி அதிலும் வெற்றி காண்பீர்கள். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வரவுக்கு மீறிய செலவு இருக்கும். திடீரென்று ஒரு சுபச் செலவு ஏற்படும். திடீரென்று வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள். இப்படி சுபச் செலவுகளாக இருந்தாலும் செலவுகளை சமாளிப்பது என்பது கொஞ்சம் கஷ்டம் தான். சேமிப்பு கரையத்தான் செய்யும். கவலைப்படாதீங்க. அடுத்த மாதம் எல்லா செலவுகளையும் சரி கட்டிவிடலாம். கணவன் மனைவி வாக்குவாதம் செய்யக்கூடாது. ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளுடைய படிப்பில் அக்கறை காட்ட வேண்டும். அதாவது உங்களுடைய பிள்ளைகள் போக்கு எப்படி இருக்கிறது என்பதை கொஞ்சம் பாருங்கள். அவர்கள் கையில் அதிக நேரம் மொபைல் கொடுக்காதீங்க. மற்றபடி சந்தோஷம் நிறைந்த வாரம் தான் இது. தினம் தோறும் குடும்பத்தோடு குலதெய்வ வழிபாடு செய்வது நன்மை தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சின்ன சின்ன உடல் உபாதைகள் ஏற்படும். வேலை செய்வதற்கே சோம்பேறித்தனமாக இருக்கும். கை கால் வலி உங்களை கொஞ்சம் முடக்கி போடும். இருந்தாலும், சரியான மருத்துவரை அணுகி அதை சரி செய்து கொள்ளுங்கள். இதுநாள் வரை வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் இருந்திருக்கும். அது எல்லாம் இந்த வாரம் சரி செய்து விடுவீர்கள். முன்கோபப்படுவது உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனை. முன்கோபம் படவில்லை என்றால் இனி நீங்கள் அம்பானியாக கூட மாறியிருக்கலாம். முன்கோபத்தை குறையுங்கள். யாரிடம் என்ன பேசுவது என்று தெரிந்து பேசுங்கள். உறவுகளை இழந்து விட்டால் மீண்டும் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தினம் தோறும் மனதை அமைதி படுத்த காலை 10 நிமிடம் ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி தியானம் செய்ய வேண்டும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் போட்டி பொறாமைகள் நிறைந்த வாரமாக இருக்க போகின்றது. உங்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல் சில பேர் தடுப்பார்கள். நீங்கள் ஒரு காலை தூக்கி முன்னாடி வைத்தால், பின்னங்காலை இழுத்து விட தயாராக ஒரு துரோகி பின்னால் காத்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லை என்றால் முன்னேற்றம் தடைபடும். யார் எதைச் சொன்னாலும் காதில் போட்டுக் கொள்ளாமல், உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் முன்னேற்றத்திற்கும் எது நல்லதோ அதை மட்டும் யோசித்து செயல்படுவது நல்லது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு வருமானத்தை உயர்த்தும்.

- Advertisement -