இந்த வார ராசிபலன் 7/2/2022 முதல் 13/2/2022 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு.

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷமான வாரமாக இருக்கப்போகிறது. வாராக் கடன் வசூலாகும். தேவைக்கு அதிகமாக கையிருப்பு இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். வேலையை விட்டுவிட வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரவேண்டாம். எல்லாம் கடந்து போகும் என்ற எண்ணத்தோடு தினசரி நாளை சந்தோஷமாக தொடங்குங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும். தினம்தோறும் வாராகி அம்மன் வழிபாடு மனதைரியத்தை அதிகப்படுத்தும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானத்தோடு எந்த வேலையையும் செய்ய வேண்டும். அவசரப்பட்டு ஏதாவது ஒரு வேலையை சிந்திக்காமல் செய்துவிட்டால், அதன் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உதாரணத்திற்கு யாரையும் நம்பி கடன் கொடுக்க வேண்டாம். யாரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். யாரையும் நம்பி உங்களுடைய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய பொருட்களை கூட நீங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். வேலையில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். மற்றபடி எல்லா சுபகாரியங்களும் எப்போதும் போல நடக்கும். எல்லா விஷயத்திலும் உஷாராக இருக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. தினம்தோறும் ஹனுமன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். முன்கோபம் கூடாது. ஒரு விஷயத்தை கையில் எடுத்த உடனேயே, இது கெட்டது இது நல்லது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். எந்த முடிவாக இருந்தாலும் அடுத்த வாரம் வரை தள்ளிப் போடுங்கள். அவசர முடிவு ஆபத்தில் கொண்டு போய் விட்டு விடும். நேரத்திற்கு சத்தான உணவினை சாப்பிடவேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் காட்ட வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. தினந்தோறும் பைரவர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் துணிச்சலோடு செயல்படுவார்கள். மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கப் போகின்றது. இருப்பினும் எல்லா இடத்திலும் ஒரு பொறுப்பு இருக்க வேண்டும். அலட்சியமாக எந்த வேலையையும் செய்யக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்தத் தொழிலில் அதிக முதலீட்டை போடவேண்டாம். என்ன தான் எல்லா விஷயங்களும் நல்லதாகவே நடந்தாலும், ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் உடல் நிலையை ஒழுங்காக பாதுகாத்துக் கொண்டால் தான், வேலைகளை ஒழுங்காக செய்ய முடியும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினம்தோறும் அம்மன் வழிபாடு நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சில குழப்பங்கள் வந்து போவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த முடிவை எடுப்பது என்று தடுமாறிக் கொண்டு இருப்பீர்கள். பொறுமையாக இருங்கள். அவசரம் தேவையில்லை. முக்கியமான முடிவுகளை அடுத்த வாரம் எடுத்துக் கொள்ளலாம். கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையும். வேலையில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். விட்டுப்போன சுபகாரியங்கள் மீண்டும் நடக்கத் தொடங்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தினம் தோறும் முருகன் வழிபாடு நன்மை தரும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோகங்கள் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. எதிர்பாராத சொத்து சேர்க்கை இருக்கும். பூர்வீக சொத்து உங்கள் பக்கம் தீர்ப்பாவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தோடு சுற்றுலா செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வேலையில் நிறைய நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்பட போகின்றது. எதிர்பார்த்த பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். உயரதிகாரிகள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். அது உங்களுக்கு மனநிறைவை கொடுக்கக் கூடியதாக இருக்கும். சந்தோஷம் நிறைந்த இந்த வாரத்தில் குடும்பத்தோடு குலதெய்வ வழிபாட்டை செய்யுங்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சந்தோஷம் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. வேலை செய்யுமிடத்தில் பாராட்டுகளும் பரிசுகளும் குவியும். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். அதனால் சுப செலவுகளும் ஏற்படும். நல்ல உறவின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ள கூடிய காலம் இது. திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் தேடி வந்து அமையும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய வரவு இருக்கப்போகின்றது. புதிய வண்டி வாகனம் வாங்கலாம். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பூர்வீகச் சொத்தின் மூலம் பணம் வந்து அதன்மூலம் புதிய சொத்துக்கள் சேர நிறையவே வாய்ப்புகள் உள்ளது. இதுநாள் வரை இருந்து வந்த எதிர்ப்புகள், எதிரி தொல்லைகள் படிப்படியாக குறையத் தொடங்கும். சந்தோஷமாக உற்சாகமான மனநிலையில் இந்த வாரம் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள். ஆகவே எல்லா விஷயத்திலும் உங்களுக்கு வெற்றி தான் தினந்தோறும் ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பரபரப்பான சிக்கல்கள் நிறைந்த வாரமாக இருக்கப்போகின்றது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். தேவையற்ற வீண் விவாதங்களுக்கு செல்ல வேண்டாம். யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. குடும்பத்தில் குழப்பங்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கூடுமானவரை குடும்ப விஷயத்தை 3வது மனிதரிடம் பகிர்ந்து கொள்ள தேவையில்லை. இதை செய்யலாமா அதை செய்யலாமா. என்ன செய்தால் பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும் என்ற ஒரு பரபரப்பு எப்போதும் உங்கள் மனதிற்குள் இருக்கும். மன அமைதிக்கு ஸ்ரீராம ஜெயம் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருங்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகத்தோடு நிறைந்த சுறுசுறுப்பும் இருக்கும். எந்த வேலையை கொடுத்தாலும் சட்டென அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பாராட்டு மழையும் கிடைக்கும். அதற்கு தகுந்த சன்மானம் கிடைத்துவிடும். சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சீரான வருமானம் இருக்கும். அதேசமயம் வீண் செலவுகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழிலில் லாபம் அதிகரிக்கும். பாராட்டும் பணமும் சேர்ந்து கிடைக்கும் பட்சத்தில் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கத்தான் செய்யும். தினம்தோறும் சிவன் வழிபாடு நன்மை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் உயரப் போகின்றது. எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு வரும். கடன் பிரச்சினை தீரும். இருப்பினும் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சேமிப்பு நாளைய பிரச்சனைகளுக்கு வழிகாட்டியாக அமையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன சண்டைகளுக்கு முற்றுப்புள்ளி விழும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய வேலை தேடுவது, புதிய தொழில் தொடங்குவது, வீட்டிற்கு புதியதாக ஏதேனும் பொருட்கள் வாங்குவது இவை அனைத்தும் உங்களுக்கு வெற்றியை தரக்கூடியதாக அமையும். விவசாயிகளுக்கு நல்ல முன்னேற்றம் தரும் வாரம் இது. தினம் தோறும் பெருமாள் வழிபாடு நன்மை தரும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கையில் எவ்வளவுதான் பணம் வந்தாலும் அது பத்தாது. செலவுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கப் போகின்றது. சம்பளம் வாங்கிய 10 நாட்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். அதன் பின்பு எப்போதும் போல பற்றாக்குறை பட்ஜெட் தான். ஆகவே உங்களுடைய சேமிப்பை உயர்த்த பாருங்கள். அப்போதுதான் நிதிநிலைமை பேலன்ஸ் ஆகும். சொந்தத் தொழில் எப்போதும்போல செல்லும். வேலை செய்யுமிடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும் குழப்பமில்லாத மனநிலை இருக்கும். எல்லா விஷயத்திலும் சரியான முடிவை எடுப்பீர்கள். தினம்தோறும் மனதை ஒரு நிலைப்படுத்த காலை வேளையில் எழுந்து ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லி 10 நிமிடங்கள் தியானம் செய்வது மிகவும் நல்லது.

- Advertisement -