இந்த வார ராசிபலன் 08/01/2024 முதல் 14/01/2024 வரை – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு!

vara rasi palan
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு தாராளமாக இருக்கும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சுப நிகழ்ச்சிக்குரிய நல்ல தகவல்கள் வந்து சேரும்.

வேலையை பொருத்தவரை இதுவரை வேலையில் இருந்து வந்த வேலை சுமை குறைய ஆரம்பிக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்குரிய முயற்சிகளை இந்த வாரம் மேற்கொண்டால் கண்டிப்பான முறையில் வெற்றியடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சூரிய பகவானை வழிபட வேண்டும்.

- Advertisement -

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்க்கு பணவரவு இருக்கும். உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன் தக்க ஆலோசனை பெறுவது நல்லது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெற முடியும். வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. புதிய முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நன்மை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் யோசித்து செயல்பட வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. அதே சமயம் ஒரு சிலருக்கு திடீர் அதிஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். எந்த காரியத்தை செய்வதாக இருந்தாலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே தென்படுகிறது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் போன்றவை நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்த அளவைவிட லாபம் கூடுதலாகவே கிடைக்கும். அதனால் தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று நினைத்தால் உரிய நபர்களிடம் ஆலோசனை பெற்ற பிறகு செய்ய வேண்டும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

- Advertisement -

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணி புரிபவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு சற்ற தாமதமாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. எனினும் கடின உழைப்பை மேற்கொள்வதால் வரவிருக்கும் காலங்களில் லாபத்தை எதிர்பார்க்க முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கடைபிடிக்க வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சில சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொறுமையை கையாளுவது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும்.

வேலையை பொருத்தவரை இதுவரை கடினமாக உழைத்து உழைப்பிற்கு ஏற்ற உயர்வை இந்த வாரம் பெறுவீர்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது என்றாலும், உடன் இருப்பவர்களுடன் விடாமுயற்சியுடன் பணி புரியும் பொழுது நஷ்டத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுகூலமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு வரவேண்டிய தொகை வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். திருமண முயற்சியை மேற்கொள்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு தேடி வரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். இருப்பினும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த சலுகைகள் அனைத்தும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே தென்படுகிறது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல எடுத்து வைக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மதிப்பும் மரியாதையும் உயரும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தடைபட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் நடைபெறும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று கூடுதலாகவே இருக்கும். இருப்பினும் அதை கவனத்துடன் செய்வதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கேற்ற ஆதாயமே கிடைக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனுசரித்து செல்லக்கூடிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு இருக்காது. வரவிற்கேற்ற செலவு ஏற்படும். உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். திருமண முயற்சிகளில் நல்ல செய்தி வந்து சேரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்வதன் மூலம் நன்மை ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர்ப்பார்த்ததை விட லாபம் அதிகமாகவே இருக்கும். தொலைதூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுமாரான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது நன்மையை தரும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை லாபம் சுமாராக தான் இருக்கும். தொழில் ரீதியாக ஒரு சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாமர்த்தியமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் திடீர் செலவுகளால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கடன் ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகளில் கவனமாக இருப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். நேரம் காலம் பார்க்காமல் உழைத்தால் நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமையை வெளிப்படுத்தும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் வரவை விட அதிகமாக செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திருமண முயற்சிகள் வெற்றி தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருந்தாலும், அதை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் உடன் பணிபுரிபவர்களுடன் எச்சரிக்கையாக இருப்பது நன்மையை தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவை விட லாபம் அதிகமாகவே இருக்கும். அதனால் தொழிலை முன்னேற்றுவதற்குரிய அடுத்த கட்ட முயற்சியை மேற்கொள்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு பெருமாளை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் செலவுகளை குறைக்க வேண்டிய வாரமாக திகிழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும் என்றாலும், அவசிய தேவை என்று வரும்பொழுது கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் உயர் அதிகாரிகளின் கண்டிப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காது. தொழிலை முன்னேற்றுவதற்கும் நஷ்டம் ஏற்படாமல் தவிப்பதற்கும் கூடுதலாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

- Advertisement -