ஜோதிடம்: இந்த வார ராசிபலன் – ஜனவரி 20 முதல் 26 வரை

Indha vara rasi palan
- Advertisement -

மேஷம்:
இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த பணவரவு உங்களை வந்து சேரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் வருவது போல இருந்தாலும் அது தானாகவே விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். சொந்த தொழிலில் நீங்கள் எதிர்பார்க்காத அளவில் லாபம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை சுமை அதிகரிக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்களின் வீட்டில் அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவது நன்மை தரும்.

ரிஷபம்:
இந்த வாரம் உங்களின் தேவையை பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு இருக்காது. நீங்கள் தொடங்கும் காரியத்தை வெற்றியுடன் முடிப்பதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படும். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவது நல்லது. அனாவசிய பேச்சில் ஈடுபடவேண்டாம். வேலை செய்யும் இடத்தில் கவனத்தோடு இருப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு நிம்மதியான வாரமாக இது அமையும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் அடையலாம். தினம் தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைதரும்.

- Advertisement -

மிதுனம்:
பணவரவு சீராக இருக்கும். உங்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய முயற்சியில் மட்டும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரம் மந்தமான சூழ்நிலையில் தான் செல்லும். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய வாரமாக இது அமையும். மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது மாணவர்களுக்கு நல்லது. சிவவழிபாடு மனநிம்மதியைக் கொடுக்கும்.

கடகம்:
உங்கள் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு உங்களை வந்து சேரும். உங்கள் குடும்ப விஷயங்களை நெருக்கமானவர்களிடம் கூட கூறாதீர்கள். வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு சற்று அதிகமாகத்தான் இருக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலையும், நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

- Advertisement -

சிம்மம்:

பண வரவிற்கு எந்தக் குறையும் ஏற்படாது. நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி உங்களை வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் நிம்மதியான சூழ்நிலை அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு சற்று மன உளைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு ராகு கால விளக்கு ஏற்றுவது நன்மை தரும்.

- Advertisement -

கன்னி:

உங்களின் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இருக்காது. கடன் வாங்காமல் இருக்க சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. முக்கியமான முடிவுகளை எடுக்கும் சமயத்தில் அவசரப்படவேண்டாம். வேலை செய்யும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கோ அல்லது அனுமன் கோவிலுக்கோ செல்வது நன்மை தரும்.

துலாம்:

பணவரவு சீராக இருக்கும். புதிய முயற்சியில் ஈடுபடும்போது பலமுறை யோசித்து ஒரு முடிவெடுப்பது நன்மை தரும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும் அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரம் மந்தமான சூழ்நிலையில் தான் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் அதிக ஈடுபாடு கொண்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மை தரும்.

விருச்சிகம்:

நீங்கள் எதிர்பார்த்ததை விட உங்களின் பணவரவு அதிகமாகவே இருக்கும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே சுலபமாக சமாளித்து விடுவீர்கள். அலுவலகப் பணியில் மன நிம்மதியான சூழ்நிலை ஏற்படும். வியாபாரத்தில் எப்பவும் போல் செயல்படுவது நல்லது. புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரமாக இது அமையும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிவ வழிபாடு நன்மையை தரும்.

தனுசு:

வருமானம் சீராக இருக்கும். அதே அளவிற்கு வீண் செலவு வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்த செலவு சுப செலவாக இருக்கும். உங்கள் செலவுகளை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சொந்தத் தொழிலில் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தினம் தோறும் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:

பணவரவு சீராக இருக்கும். அனாவசிய செலவினை தவிர்ப்பதன் மூலம் கடன் வாங்காமல் தப்பித்துக் கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சொந்தத் தொழில் லாபத்துடன் செல்லும். குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்வது நன்மை தரும்.

கும்பம்:

உங்களின் வருமானத்திற்கு எந்தவிதமான குறைபாடும் இருக்காது. நீங்கள் எதிர்பார்த்ததைவிட பணவரவு அதிகமாக கிடைக்கும். அனாவசிய செலவில் ஈடுபடவேண்டாம். வேலை செய்யும் இடத்தில் அனாவசிய பேச்சுக்கு இடம் கொடுக்காதீர்கள். வியாபாரத்தில் உங்களின் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு சந்தோஷமான வாரமாக இது அமையும். சனிக்கிழமை அனுமன் கோவிலுக்கு சென்று துளசி மாலை அணிவித்து வழிபடுவது நன்மை தரும்.

மீனம்:

உங்களின் வருமானத்திற்கு எந்த வித குறைபாடும் இருக்காது. ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது. அனாவசியப் பேச்சை குறைத்துக் கொள்ளலாம். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்பட்டால் அதனை ஏற்றுக் கொள்ளலாம். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு உடல் சோர்வு காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தினம்தோறும் முருகனுக்கு அரளிப்பூ செலுத்தி வழிபடுவது நன்மை தரும்.

இதையும் படிக்கலாமே
மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -